வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது

அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு வாழைப்பழம், இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும். இது 21 சதவீத ரத்த உறைவை தடுக்க உதவுகிறது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.பொட்டாசியம் சார்ந்த கீரைகள், பருப்புகள், பால், மீன் ஆகியவற்றை போதிய அளவு எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத பிரச்சனைகளை தவிர்க்க முடியும். முந்தய ஆய்வின் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கைகள் அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கைகளில் வாழைப்பழம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பயன்கள் ஏகத்து விவரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் தினமும் 3500 மி.கி அளவு பொட்டாசியம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமும் 1600 மி.கி பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல் ஒரு பங்கு குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மி.கி பொட்டாசியம் உள்ளது.
இந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது. பிரிட்டனில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மருத்துவ செலவு 230 கோடி பவுண்ட் அளவை எட்டுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பு:
நன்றாக கனிந்த வாழை பழத்தை சாப்பிட்டால் எடை அதிகம் ஆகுமாம்!
கொஞ்சம் கெட்டியான வாழைப்பழத்தை சாப்பிட்டால் எடை கூடாதாம்!!

Comments

 1. காலத்துக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள மருத்துவக்
  குறிப்பு மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு ...........

  ReplyDelete
 2. நன்றாக கனிந்த வாழை பழத்தை சாப்பிட்டால் எடை அதிகம் ஆகுமாம்!
  கொஞ்சம் கெட்டியான வாழைப்பழத்தை சாப்பிட்டால் எடை கூடாதாம்!!//

  அருமையான தகவல், நன்றி டாக்டர்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?