26 May, 2020

சேவலும் நரியும்!

*சேவலும் நரியும்..*
காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.
அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.
சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.
இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது.. அது மரத்தின் கீழ் அமர்ந்து, சேவலிடம் பேச ஆரம்பித்தது..
"அழகிய சேவலே! உனக்கு விஷயம் தெரியுமா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்.. இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது.. இது சமாதான ஆண்டாம்.. எந்த விலங்குக்கும், மற்ற விலங்குகளால் பிரச்னை வரக்கூடாதாம்.. அப்படி பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படுமாம்..
"எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன.. அவை அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் ஊலல்லல்லா பாட்டுப் பாடி ஆடிக்கொண்டிருக்கின்றன.. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன.. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய்.. வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது.
நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது..
அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது..
"நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'' என்றது..
"நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது..
"அதை விட முக்கியமான சமாச்சாரமா? அது என்ன..?'' என்றது நரி..
"வெகு தூரத்தில் ஒரு உருவம் வேகமாக ஓடி வருகிறது!'' என்றது சேவல்..
"அது எப்படி இருக்கிறது?'' என்று பயத்துடன் கேட்டது நரி..
"பசியால் நாக்கை தொங்க விட்டுக்கொண்டுள்ளது.. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன.. அங்கும், இங்கும் பார்த்து எதையோ தேடி வருகிறது.. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன.. உங்களை விட உயரமாக இருக்கின்றன.. ஆ.. இப்போது? கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன.. பார்ப்பதற்கு.. அது நமது சிங்கராஜா.. ஓ.. ஆம்.. அது நமது சிங்கராஜாவே தான்..,'' என்றது சேவல்..
"நாசமாப் போக, அது பசிக்கு என்னை பார்த்தால் கடித்துக் குதறி விடுமே..'' என்று கூறியவாறு திரும்பி நடக்க தொடங்கியது நரி..
வேகமாக ஓடுங்கள் அது உங்களை நெருங்கிவிட்டது.. என்றது  சேவல்.. அவ்வளவுதான் பின்னங்கால் பிடறியில் அடிக்க கண்மண் தெரியாமல் ஓட்டமெடுத்தது நரி..

உனக்கு மட்டும் தான் தந்திரம் தெரியுமோ? என
நரி ஓடுவதை பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது சேவல்..
🐝
ஆம் நண்பர்களே இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் அதிகம் உண்டு.. அவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்..

🐝

அரக்கன்

கேள்வி: எனக்கு பெரியாரை மிகவும் பிடிக்கும். திராவிடம், சமூகநீதி போன்ற கருத்துகளில் தீவிர உடன்பாடு உள்ளவன். ஆனால் எனக்கு இந்த அரக்கர்கள் எனச் சொல்லிக் கொண்டிருப்பவர்களில் பலரைப் பிடிக்கவில்லை. சிலர் எரிச்சலூட்டும் வகையில் ரொம்ப ஓவராகப் பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் பெரியாரிஸ்டுகள் எனச் சொல்லிக்கொள்ளும் சிலர் அரக்கர்களை கிறுக்கர்கள் என்றெல்லாம் திட்டுகிறார்கள். என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விளக்குங்கள்.

பதில்: அரக்கர் என்ற சொல் திராவிட இனத்திற்கு ஆரியர்கள் வைத்தது. இன்றுவரை பெரியாரை, அண்ணாவை, கலைஞரை வில்லனாகச் சித்தரிக்க வேண்டுமென்றால் ராவணனைப் (ரா-வண்ணன். கருப்பு நிறத்தவன்) போல, நரகாசுரனைப் போல வரைவார்கள். கலைஞர்தான் உழைப்பதை நிறுத்திக்கொண்டபோது, “இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” என்று பல பார்ப்பனர்கள் எழுதி மகிழ்ந்ததைப் பார்த்திருப்பீர்கள். (அதேபோல் கேரளாவில் வாமன அவதாரத்தினால் கொல்லப்பட்ட மாபலி சக்கரவர்த்திதான் அரக்கர். அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில்தான் ஓணம் கொண்டாடுகிறார்கள்) பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பல திராவிட இயக்கத்தவர்களால் இந்த வார்த்தை ஆரியத்துக்கு எதிரான குறியீடாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சமூகவலைதளங்களில் கிளிமூக்கு அரக்கனின் வருகைக்குப் பின் பிரபலமானது. ஆக, அரக்கர் என்ற சொல் இம்மண்ணுக்கானது, நம் மக்களைக் குறிப்பது. நம் தலைவர்கள் பயன்படுத்தியது. அது தனியொரு பத்துப் பேருக்கோ, நூறு பேருக்கோ, ஆயிரம் பேருக்கோ சொந்தமில்லை. இதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அரக்கர்கள் எனும் Brandடில் திராவிட இயக்கத்தின்மேல் பற்றுகொண்ட பல இளைஞர்கள் ஒன்றாகப் பணியாற்றுகிறார்கள். திராவிட இயக்கக் கருத்துகளைப் பரப்புகிறார்கள். சமூகநீதி, பார்ப்பனிய எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு என இந்திய அரசியல் சார்ந்த, தமிழ்நாடு சார்ந்த திராவிடக் கொள்கைகளில் அவர்களுக்குள் இம்மி அளவுகூட எந்தப் பேதமும் இல்லை. ஒரே புள்ளியில் தெளிவாகப் பயணிக்கிறார்கள். ஒரு குழு அடையாளம்கூட திட்டமிட்டு வந்ததெல்லாம் இல்லை. தோழர் என்பதைப் போல அரக்கர் என அழைக்கத் துவங்கி, பின் ‘வர்லாம் வா நரகாசுரா’ ‘இந்துத்துவா என்றால் என்ன’ போன்ற மிகவும் பிரபலமான ட்ரெண்டிங்குகளின் போது தானாக உருவானது.

சரி, அரக்கர்களில் சிலரின் மேல் எரிச்சல்படும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அரக்கர் எனச் சொல்லிக்கொள்பவர்கள் யாராவது சமூகநீதி எனும் அடிப்படைக் கொள்கையில் இருந்து நழுவி ஒரு வார்த்தை எங்காவது பேசியிருக்கிறாரா? மாட்டார். சமூகநீதிதான் இந்த மண்ணுக்குத் தேவையான அடிப்படைக் கொள்கை என நினைக்கும், அதற்காகப் பேசும் அத்தனை பேரும் அரக்கர்கள் தான். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அடிப்படைப் புள்ளி சமூகநீதிதான். இதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதேநேரம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லையா என்றால், இருக்கிறது. சிலவிஷயங்களைப் பேசும் தொனியில் ஒருவருக்கொருவர் முரண்பாடுகள் இருக்கிறது, உடன்பாடின்மை நிலவுகிறது. உதாரணத்திற்கு ஈழ விஷயத்தையும் புலிகள் மீதான விமர்சனங்களையும் சிலர் அணுகும் தொனியில் புலிகள் மீது இணையத்தில் கடுமையான விமர்சனங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்பே வைத்த எனக்கே  முரண்பாடுகள் இருக்கிறது. பொதுப் பார்வையாளர்களால் அவர்களின் தொனி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் சந்தேகமும் எனக்கு உண்டு. ஈழப்பிரச்சினை என்பது மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம். அதில் விடுதலைப்புலிகளின் வரலாற்றுத் தவறுகளை எடுத்துவைக்கும் அதே நேரத்தில் ராஜபக்சே நிகழ்த்தியது ஒரு இனப்படுகொலை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதிலும், புலிகளுக்கு எதிரான நம் கருத்துகள் சிங்கள ராணுவத்திற்குச் சார்பான பேச்சாக பொதுப் பார்வையாளர்களால் புரிந்துகொள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதிலும், அதனால் வார்த்தைகளை மிகமிக கவனமாகக் கையாள வேண்டும் என்பதிலும் நான் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறேன். அந்தப் புள்ளியில் இருந்து சிலர் நழுவும்போது எனக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகிறது. அதும்போக திமுக தரப்பில் இருந்து, இந்தச் சூழலில் ஈழத்தைப் பற்றி பேசி கவனத்தைச் சிதறவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டதை 'பெர்சனலாக' எடுத்துக்கொண்டு, விடாப்பிடியாகச் சிலர் அதையே பேசிக்கொண்டிருக்கிறார்களோ என்கிற ஐயமும் எனக்குண்டு. எனக்கு மட்டுமல்ல அரக்கர்களில் பலருக்கும் இதேபோல் தோன்றியிருக்கிறது. வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டோம்.

அதற்காக என்ன செய்யலாம்? ஒரு புள்ளியில் உடன்பாடில்லை என்பதற்காக மீதி 99% புள்ளிகளில் இருந்தும் விலக முடியுமா?  அரக்கர்கள் என்ற குழு அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியுமா? தனி மனிதர்களின் கருத்து எது, அரக்கர்கள் எனும் ஒரு கூட்டு அடையாளத்தின் கருத்து எது என்று பிரித்துப் பார்க்கும் சாதாரணப் புரிதல் வேண்டும் அல்லவா?  எப்போதுமே தனிநபர்களால் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்துவிட முடியாது. பல முரண்கள் இருந்தாலும் collective mind, collective work என்பதன் ரிசல்ட் பிரம்மிப்பானது.  பார்ப்பனர்கள் அதில் கைதேர்ந்தவர்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் சில விஷயங்களில் ஒரே மாதிரியாகப் பேசுவதும், தங்களுக்கிடையே உள்ள கருத்துமுரண்களைப் பொதுவெளிகளில் பேசாமல் இருப்பதும்தான் அவர்களின் மிகப்பெரிய பலமே!

குழுவாகச் செயல்படமுடிந்த இடத்தில் குழுவாகவும், தனிமனிதனாகச் செயல்பட வேண்டிய இடத்தில் தனிமனிதனாகவும் செயல்பட ஒரு மனிதனுக்கு எல்லா உரிமைகள் உண்டு. நீ அரக்கர் என அடையாளப்படுத்தப்படுவதால் இதைச் செய்யாதே இதைப் பேசாதே இப்படி எழுதாதே என்றெல்லாம் போய் யாரும் யாருக்கும் வகுப்பெடுக்க முடியாது. தனிமனித சுதந்திரத்தில் தலையிடவும் முடியாது. (அப்படியென்றால் பெரியாரைத் திட்டினால் கூட கேட்க மாட்டீர்களா என குதர்க்கமாக கேட்கக் கூடாது. அடிப்படையில் முரணான கொள்கைகளைக் கொண்டுள்ள ஒருவர் தன்னை அரக்கராக அடையாளப்படுத்திக்கொள்ளவே மாட்டார்) சமூகவலைதளச் செயல்பாட்டின் இந்த அடிப்படை புரியாதவர்கள்தான் தங்களுக்குச் சிலர் எழுதுவது பிடிக்கவில்லை என்றால் அதை ஒரு ஒட்டுமொத்த குழு மீதான, அடையாளத்தின் மீதான வெறுப்பாக மனதிற்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். பெரியார் படத்தை எல்லாம் வைத்துக்கொண்டே அரக்கர்கள் கிறுக்கர்கள் என்றெல்லாம் சிலர் எழுதுவது இந்தப் புரிதலின்மையால்தான். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இது பெரும்பாலானோரின் குணம். ஒரு திமுககாரனைப் பிடிக்கவில்லை என்றால் திமுகவுக்கே ஓட்டுபோட மாட்டேன் என்கிற அளவிலான புரிதல்தான் இங்கு பலருக்கு இருக்கிறது.  இதிலும் நாம் பார்ப்பனர்களிடம் இருந்து ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தம்பிராஸ் எனும் பார்ப்பனர் சங்கத்தில் இல்லாத பிரச்சினைகளா? அவர்கள் அணி அணியாகப் பிரிந்து அடித்துக்கொள்வதைப் போல் wrestlingல் கூட டீம் போட்டு அடித்துக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு பார்ப்பனர் கூட தம்பிராஸ் கிம்பிராஸ் என்றோ, பிராமணர் கிராமணர் என்றோ கிண்டலாக எழுத மாட்டார்கள். தனிமனிதர்கள் மீதான கோபத்தை தங்கள் அடையாளங்களின் மீது காட்டமாட்டார்கள்.  ரொம்ப பிரச்சினை என்றால் வைதீகத் தம்பிராஸ், அக்மார்க் தம்பிராஸ் என இன்னொரு சங்கம் ஆரம்பிப்பார்களே தவிர, ஒருநாளும் தங்கள் அடையாளத்தை இழிவுசெய்ய மாட்டார்கள். இதைத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சரி. நான் இவ்வளவு சொல்லியும் உங்களால் அரக்கர்கள் எனும் பேரில் செயல்படுகின்றவர்களின் செயல்பாடுகளையும் அவர்களையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இணைந்து பணியாற்ற முடியவில்லையா? அவர்களைப் பார்த்தாலே எரிச்சலாக வருகிறதா? பிரச்சினையே இல்லை.  அசுரர்கள், கருப்பர்கள் போன்ற பெயர்களில் உங்களுடன் ஒத்துவருகின்றவர்களை இணைத்துக்கொண்டு வேலை பாருங்கள். சமூகநீதி பேசுங்கள். பெரியாரைப் பேசுங்கள். அதுதானே ஆக்கபூர்வமான செயல்? அது இன்னும் நம் கொள்கைகளுக்கு வலுசேர்க்கும்தானே!!

திராவிடம் 2.0, திராவிட சிறகுகள், திராவிட விழுதுகள் என பற்பல 'கூட்ட' ஒருங்கிணைப்பாளர்கள் களத்தில் இருப்பதைப் போல இணையத்திலும் இருக்கட்டுமே! அது இன்னும் பலமாகத்தானே இருக்கும்!

அதைவிட்டுவிட்டு ஒருசிலர் மீதுகொண்ட எரிச்சலில், ஒருசில விஷயங்களில் உள்ள முரண்பாடுகளை முன்வைத்து, தனிமனித ஈகோவினால் அரக்கர் என்ற ஒரு அடையாளத்தைக் கேலிசெய்வதோ ஒட்டுமொத்தமாக வெறுப்பதோ துறப்பதோ முறையல்ல.  அதுவும் பேரரக்கர் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு!!!

-டான் அசோக்
மே 25, 2020

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...