பெரிய மார்பகம் வேண்டுமா?

பெண்களின் செழிப்பான அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை மார்பகங்கள். அவை அளவோடு இருந்தால்தான் அழகு. அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அங்கே அழகு கொஞ்சம் `மிஸ்ஸிங்’ ஆகிவிடும்.
சிலபெண்களுக்கு வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சி காணப்படாது. இப்படிப்பட்டவர்கள் பெரிய மார்பகத்திற்காக ஏங்குவார்கள்.இப்படிப்பட்டவர்கள், தகுந்த மார்பக வளர்ச்சிபெற சில டிப்ஸ் : நேராக நிமிர்ந்து நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குங்கள். தினமும் ஒரு சில நிமிடங்கள் மட்டும் இவ்வாறு செய்தால் போதும். கீழே அமர்ந்து நெஞ்சை நேராக நிமிர்ந்தி வைத்துக்கொண்டு, முச்சினை உள்ளே இழுத்து மெல்ல விடவும். ஓரிரு நிமிடங்கள் இப்படி தொடர்ந்து செய்யவும். தினமும் தவறாமல் ஸ்கிப்பிங் செய்யவும். மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மார்பக வளர்ச்சிக்கான கிரீம் வாங்கி, அதைக்கொண்டு மார்பகத்தில் மசாஜ் செய்யலாம். இந்த கிரீமை பயன்படுத்தினால் ஒரு வாரத்திலேயே பெரிய மார்பகம் பெறலாம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விளம்பரம் செய்யப்படும் கண்ட கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள். கிரீம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், பாலாடையை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்யும்போது மார்பகத்தை மிகவும் அழுத்தி தேய்க்கக்கூடாது. வட்டமான முறையில் மசாஜ் செய்வதே சிறந்தது. உணவில் அதிக காய்கறிகளை எடுத்துக்கொள்வதோடு, கிரீம் உணவுகள், பால், முட்டை, சீஸ் போன்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும்.


- இவற்றை பின்பற்றி வந்தால் அழகான – அம்சமான மார்பகத்தை நீங்களும் பெறலாம்.
இன்னும் சிலருக்கு மார்பகத்தின் வளர்ச்சி அளவுக்கு மீறியதாக காணப்படும். இவர்களுக்கு அந்த பெரிய மார்பகமே பெரும் தொல்லையாக அமைந்துவிடும்.
இவர்கள் அந்த தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? பெரிய மார்பகம் கொண்டவர்கள் எக்காரணம் கொண்டும் கிரீம்கள் கொண்டு மார்பகத்தை மசாஜ் செய்யக்கூடாது. நடைபயிற்சி, துணி துவைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்வது நல்லது. இந்த பயிற்சிகளால் மார்பகத்தின் எடை அதிகமாக குறையும் என்று சொல்ல முடியாது. இதற்கு காரணமே ஹார்மோன் பிரச்சினைதான். அதனால், தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்படி நீராவி சிகிச்சை அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முலம் சரி செய்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டும் எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.
சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்று ஒருபுறம் பிரச்சினைகள் இருக்க, சிலருக்கு மார்பகம் சரிந்துபோய் வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஒரு பெண் தாய்மை அடைந்த பிறகுதான் இத்தகைய பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. அதாவது, குழந்தைக்கு பாலூட்டுவதற்கு வசதியாக மார்பகத்தில் உள்ள பால்சுரப்பிகள் செயல்பட ஆரம்பிப்பதால், மார்பகத்தின் அளவு பெரிதாவதோடு, அதன் எடையும் கூடுதலாகிறது. இதனால் மார்பகம் சரிந்து விழுகிறது.
இப்படிப்பட்ட பெண்கள் சரியான அளவில் பிராவை தேர்வு செய்து அணிவது முக்கியம். அவர்கள் தேர்வு செய்யும் பிரா அதிக இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். ஒருவேளை, அதிக இறுக்கமான பிராவை தேர்வு செய்து அணிந்து வந்தால், மார்பகமானது பிதுங்கிய நிலைக்கு சென்று, அழகை பாழாக்கிவிடும்.
மேலும், இவர்கள் நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதல், கீழே அமர்ந்து முதுகை நேராக நிமிர்த்தி வைத்து ச்சினை உள்ளே இழுத்து மெல்ல விடுதல் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருவது நல்ல பலன் அளிக்கும்.
 ஒரு ரகசிய  செய்தி :Lepteden என்று ஒரு மாத்திரை மெடிக்கலில் கிடைக்கும் இந்த மாத்திரையை தினமும் ஒரு மாத்திரைவீதம் 100 நாட்கள் சாப்பிட்டால் மார்பு வளர்ச்சி பிரமாதமாக இருக்கும். இது ஒரு ஆயுர்வேதிக் மாத்திரை!! சம்மந்தபட்ட மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடுவது அவசியம். ஆனால் பல ப்யூட்டி பார்லரில் இம்மாத்திரையை கொடுத்து பணம் பார்க்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத செய்தி!!

Comments

 1. மார்பகம் குறித்த டீட்டெயிலான கட்டுரை... கட்டுரைக்கு ஏற்ற படம்...

  உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

  ReplyDelete
 2. Lepteden என்று ஒரு மாத்திரை மெடிக்கலில் கிடைக்கும். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் விற்கலாம் என்று தெரியும். இதில் இருக்கும் active ingredient (வேதிப் பொருள்?) என்ன?

  ReplyDelete
 3. நம்பள்கி கூறியது 100 சதவிகிதம் சரி! இந்ந மாத்திரை இயற்கை மூலிகைகள் அடங்கியது. அதிக தாய்பால் கிடைப்பதற்கா உபயோகப்படும் ஒரு மாத்திரை! எந்த மாத்திரை என்றாலும் அது சம்மந்தமான மருத்துவரின் ஆலோசனை பேரில் சாப்பிடுவதுதான் சரியான முறை!! வருகை புரிந்து கருத்து கூறியமைக்கு நன்றி.

  ReplyDelete
 4. பெண்கள் போற்றும் பெண்களுக்கான பயனுள்ள பதிவு.
  பாராட்டுகள்.
  ஒரு வேண்டுகோள்:
  எனக்குக் கொஞ்சம் தொப்பை உள்ளது. தினம் ஒரு மணிநேரம் நடைப் பயிற்சி செய்கிறேன். ஆனாலும் தொப்பை குறையவில்லை.
  அதைக் குறைக்க நல்ல வழி சொல்லுங்களேன்.

  ReplyDelete
 5. முனைவர் பரமசிவம் said...
  எனக்குக் கொஞ்சம் தொப்பை உள்ளது. தினம் ஒரு மணிநேரம் நடைப் பயிற்சி செய்கிறேன். ஆனாலும் தொப்பை குறையவில்லை.
  அதைக் குறைக்க நல்ல வழி சொல்லுங்களேன்.
  வருகை புரிந்தமைக்கு நன்றி! எனக்கு இன்னும் அதிகமாகவே தொப்பை உள்ளது. நானும் முயற்சி செய்துகொண்டுள்ளேன். வெற்றியடைந்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?