காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்துவிடுவாரோ என்று! (சரிதானே நல்லநேரம் சதிஷ்குமார்) ஆனால் அமெரிக்காவிலும்,கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங்’ என்பது ஒரு பாப்புலர் ஸ்போர்ட். காக்கைகளுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக சுட்டுத் தள்ளுகிறார்கள்.
Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts
27 September, 2025
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.
முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்
தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.
ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள். அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.
வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.
03 October, 2011
மரங்கொத்தி என்றவுடன் நம் அனைவருக்கும் மனத்திரையில் தோன்றும் பறவை இதோ இந்தப் பறவை தான்.
ஆனால் இப் பறவையின் பெயர் ஆங்கிலத்தில் ‘ஹூபோ’ என்பதாகும். விஞ்ஞானிகள் இதை ‘உபாபா இபாப்ஸ்’ என்பர். காரணம் என்ன தெரியுமா? இது கத்தும்போது ‘உப்பாப்பாப்...உப்பாப்பாப்..’ என்று குரல் எழுப்பும் என்பதுதான்.
கருங்கல் இடைவெளியில் ஹூபோவின் கூடு
இதன் கூட்டருகே மனிதர்களோ, பூனை, காகம் போன்றவையோ நெருங்கினால் குச்சி போலத் தோன்றும் கொண்டைச் சிறகினை விசிறி போல் விரித்துக் கொண்டு “சர்...சர்...சர்...” என்று கத்தியபடி மேலும் கீழுமாகப் பறக்கும். உண்மையான மரங்கொத்திகள் அடிமரத்தினைத் தனது கால் விரல்களால் இறுகப் பிடித்த படி சுற்றிச் சுற்றி மேல் ஏறும். அவ்வாறு ஏறும் போது தனது அலகினால் மரப் பட்டையினை டொக் டொக் டொக் என்று தட்டிக் கொண்டே செல்லும். சில சமயம் ஏதோ மறந்து விடடாற்போல சர்ரென்று செங்குத்தாகக் கீழிறங்கி மரப் பட்டையினைத் தட்டிப் பார்க்கும். அப்படிச் செய்வது மரப் பட்டைகளுக்கு இடையே இருக்கும் புழு பூச்சிகள் மற்றும் வண்டுகள் செய்துள்ள துளைகள் இவற்றைக் கண்டு பிடிக்கவே. உணவு கிடைக்கும் என்று தெரிந்த உடன் தனது வலுவான அலகினைக் கொண்டு அவ்விடத்தில் ஒரு துளை செய்து தனது நீண்ட நாக்கினை உள்ளே விட்டு புழு, பூச்சி, வண்டு இவற்றை ஈட்டியினால் குத்தி இழுப்பதுபோல் வெளியே இழுத்து உண்ணும்.
மரங்கொத்தியின் நாக்கு 10 முதல் 15 சென்டிமீடர் நீளத்திற்கு எலியின் வால் போன்று இருக்கும். நுனியில் அறை சென்டிமீடர் தூரத்துக்கு ஈட்டி முனையில் இருப்பது போன்ற பல அலகுகள் இருக்கும். இவ்வாறு அமைந்திருப்பதால் புழு, பூச்சி, வண்டு இவற்றைக் குத்தி வெளியே கொண்டுவர முடிகிறது.
மரங்கொத்தி கூடு அமைப்பது பார்க்க வெகு வேடிக்கையாக இருக்கும். தனது கால் விரல்களினால் மரத்தினை இறுகப் பிடித்துக் கொண்டு உளி போன்ற அலகினால் வேகமாக ‘டொக்..டொக்..டொக்..’ என்று கொத்தி சுமார் மூன்றங்குலம் விட்டம் கொண்ட ஒரு துளை செய்து பின் அத் துளையினை கீழ் நோக்கி 6 முதல் 8 அங்குல நீளத்திற்குக் கொண்டு செல்லும். பின் துளையின் விட்டத்தை சற்று அதிகரிக்கும். இவ்வாறு அதிகரிக்கப் பட்ட பாகம் 3 முதல் 4 அங்குலம் வரையிலான நீளத்திற்கு இருக்கும். இந்த பாகம் தான் அது முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் அறை. மரத் துகள்கள்தான் குஞ்சுகளுக்கு மெத்தை.
மரங்கொத்தி கூடு அமைப்பதற்காக மரத்தினைக் கொத்தும்போது மின் துளைப்பானால் துளை போடுவது போல நாலா பக்கமும் மரத் துகள்கள் வாரித் தெரிக்கும். மரங்கொத்தியின் மற்றொரு தமிழ்ப் பெயர் தச்சன் குருவி! சரியான பெயர் தான்!
மரங்கொத்திகளுக்கு இறைவன் அதன் வாழும் முறைக்கேற்ப சில விசேஷ அமைப்புகளை அளித்திருக்கிறான். அது மரத்தினைக் கொத்துவதற்கு ஏற்ற உளி போன்ற அலகு, கொத்தும் போது ஏற்படக்கூடிய எதிர் சக்தியில் கீழே விழுந்து விடாமல் இருக்க உடும்புப் பிடியெனப் பிடிக்கும் கால் விரல்கள், எதிர் அதிர்வுகளைத் தாங்கும் தசைகள் அடர்ந்த கழுத்து, அதிர்வுகள் மூளைக்குச் சென்று தாக்காமல் இருக்க மிருதுவான மண்டை ஓடு, இரையைக் குத்தி வெளியே கொண்டு வர லாயக்கான நீண்ட நுனியில் அலகுகள் கொண்ட நாக்கு இப்படிப் பல.
“பறவைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்” என்று கண்ணதாசன் பாடியது நினைவுக்கு வருகிறதா?
நம் நாட்டில் நான்கைந்து வகையான மரங்கொத்திகள் காணப் படுகின்றன. அவற்றில் சிலவற்றினைக் கீழே பாருங்கள்.
இமயத்து மரங்கொத்தி.
நீலகிரி: இம்மாவட்ட வனப்பகுதி களில் பல்வேறு வித பறவைகள் காணப்படுகின்றன. இதில், "பிசிடே' என்ற பறவையின குடும்பத்தை சேர்ந்த எட்டு வகை மரங்கொத்தி பறவைகளும் அடங்கும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு, வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக, இவை மரங்களை கொத்துகின்றன. மரத்தில் பொந்து ஏற்படுத்தி குடியிருக்கின்றன. "பொன் முதுகு' மரங்கொத்தி பறவைகள் குன்னூர், கொலக்கம்பை, பர்லியார், ஆடர்லி வனப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. பொன் முதுகு பறவைகள், மரங்களை கொத்தும் வேகம் வியப்பூட்டுவதாக இருக்கும். மரங்கொத்தி பறவைகளின் கண்கள், எலும்பு, திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றிற்கு எவ்வித அதிர்வோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. பறவை கண் விழிகளின் மேல், இமையை திறந்து மூடும் வகையில் அமைந்துள்ள ஒரு படலம், இப்பறவைகள் மரங்களை கொத்தும்போது தெறிக்கும் மரச்சிராய், மரத்துகள்களில் இருந்து அவற்றின் கண்களை பாதுகாக்கின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி, வேதனை, பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்களின் உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன.
மரங்தொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது என்பது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடாந்து மரத்தை துளையிட்ட போதிலும் அதற்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறோம். மரங்கொத்தியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறைவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படும். இருப்பினும் ஒரு மரங்கொத்தியால் 2-3 வினாடிகளில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும். ஆதன் மூலம் அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
எவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது.
மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.
மரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.
அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது.
மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன.
அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு.எவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது.
மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.
மரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.
அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது.
மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன.
மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன் மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தி யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து மூளை பாதுகாக்கப்படுகிறது.
மரங்கொத்தி பறவைகளின் கண்கள் எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றுக்கு எவ்வித அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை என வன உயிரின ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மரங்களை முட்டி மோதும் போது மூளை கலங்கவோ உள் மண்டை ஓட்டுடன் முட்டி மோதும் வாய்ப்புள்ளது. அளவில் மரங்கொத்தி பறவைகளின் மண்டை ஓட்டுடன் மூளை முட்டி மோதும் வாய்ப்பில்லை; இதன் நாக்கு மண்டை ஓட்டை சுற்றியே வளைந்திருக்கும்.பறவை கண் விழிகளின் மேல் ஒரு ஜவ்வு போன்ற படலம் இமையை மூடித்திறக்கும் வகையில் அமைந்திருப்பதால் மரங்களை கொத்தும் போது தெளிக்கும் மரச்சிராய்மரத்துகள்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி வேதனை பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்துக் கொள்கின்றன
01 October, 2011
ஏண்டா பக்கியாட்டம் அலையறே ? இது ஒரு பறவையை பற்றியது!
ஒரு பொருள் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக ‘லோ லோ’ என்று அலைபவனை “ஏண்டா பக்கியாட்டம் அலயறே ?” என்று கேட்பார்கள்.
பக்கி என்றே ஒரு பறவை உண்டு. அதுதான் ஆங்கிலத்தில் நைட்ஜார் (Nightjar) என்றழைக்கப் படும் பறவை. இதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மற்றுமொரு பெயரும் உண்டு. தமிழில் பாதுகைக் குருவி என்றும் ஆங்கிலத்தில் கோட் ஸக்கர் (Goat sucker) என்றும் இதனை அழைக்கின்றனர்.
விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப்பட்ட பெயர் கேப்ரிமல்கஸ் ஏஷியாடிகஸ் (Caprimulgus asiaticus) என்பதாகும். கேப்ரிமல்கஸ் என்றால் லத்தீன் மொழியில் ஆட்டுப் பால் உரிஞ்சி என்று பொருள்.
20 August, 2011
சிட்டுக்குருவியின் காதலுக்கு கட்டுப்பாடு ஏது?
பறவைக் கூடுகளில் பாப்புலர் ரகம், தூக்கணாங்குருவியின் தொங்கு கூடுதான்! ஏராளமான ஆர்க்கிடெக்ட் வித்தைகள் செய்து சிங்கிள் மற்றும் டபுள் பெட்ரூமுடன் கூடுகள் நெய்யப்படுகின்றன. புல், வைக்கோல்,சிறிது களிமண் பொன்றவற்றை கட்டுமான பொருள்களாக வைத்து இமாலயப் பொறுமையுடன் தனது கூட்டை அமைத்துக்கொள்கிறது புளோசெய்டே ( Ploceidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த தூக்கணாம்குருவி.
இந்த குடும்பத்தில் உள்ள தூக்கணாங்குருவிகளில் நான்கு வகைகளுக்குதான் இந்தியாவில் சிட்டிசன்ஷிப்! பாயாக் குருவியும் மஞ்சள் குருவியும் கன்னியாகுமரி முதல் கார்கில் வரை சிட்டு மொழி பேசி சிட்டாக பறந்து கொண்டிருக்கின்றன. கருப்புத் தொண்டைக் குருவி என்று மற்றொரு வகை வடகிழக்கு மாநிலங்களில் ஜாகை ! இது மட்டும் அருகில் உள்ள பாகிஸ்தானிலும் கூட அல்கொய்தா பயமில்லாமல் அழகாக வாழ்கின்றன.
தூக்கணாங்குருவிகள் பொதுவாக கூட்டு வாழ்க்கை வாழவே விரும்புகின்றன. செழிப்பான விளைநிலங்கள்தான் இவைகளுக்கு ஃபைவ்ஸ்டார் ஓட்டல்கள்! வடக்கத்திப் பார்ட்டிகள் மட்டும் கொஞ்சம் ரிசர்வ் டைப். இவை தன்னந்தனியே கூட அலைவதுண்டு. அல்கொய்தா சகவாசம்?
காதல் புரிவதில் தூக்கணாங்குருவிகள் செமக் கில்லாடிகள்! அதுவும் ஆண் குருவிகள் மன்மதப் பேர்வழிகள். குறைந்தபட்சம் 3-4 குடும்பங்களை ஒரே நேரத்தில் மெயின்டெயின் பண்ணும். இந்தக் காதல் மனைவிகளும் அப்படியொன்றும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. பெண் குருவிகள் ஒரு விசேஷ சுயம்வரம் நடத்தி, ஆண் குருவிகளின் வாளிப்பான தேகம் பார்த்து, வசதி பார்த்து அப்புறம்தான் கழுத்தை நீட்டுகின்றன.
மழைக்காலம் துவங்கிவிட்டால் இவைகளுக்கு காதல் பீறிட்டு வந்துவிடும்! இந்நேரத்தில் ஆண் குருவிகள் கவர்ச்சியான காம மேக்கப்புக்கு மாறிவிடும். உடலின் மேற்புறத்தில் மஞ்சள் மற்றும் கரும்பழுப்பு வரிப்புள்ளிகளும் மஞ்சள் மார்பும் என மாற்றிக்கொண்டு பளிச்சென்றிருக்கும்.இத்தகைய 40-50 ஆண்குருவிகள் கரையோர மரங்களில் தம் காதல் கோட்டைகளை கட்டத் துவங்கும்.எத்தனை உயரத்தில் கூடுகட்டினாலும் ஒரு ஏர்கூலரின் குளு குளு வசதிக்காக, கூட்டிற்கு நேர் கீழே தண்ணீர் இருக்கும்.
ஒவ்வொரு ஆண் குருவியும் அதன் கற்பனைத் திறனுக்கு ஏற்ப கூட்டின் டிசைனை வடிவமைக்கும். இவை ஒட்டு மொத்தமாய் காதல் கானத்தை கோஷ்டியாக பாடிக் கொண்டு கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் ஈடுபடும். முதலில் ஒரு உறுதியான பிடிப்பை மரக்கிளையில் பின்னிவிட்டு, அதிலிருந்து நீளவாக்கிலும் குறுக்கிலும் பல லூப்புகளை ஸ்வெட்டர் பின்னுவது போல் பின்னி ஸ்கெலிட்டனைத் தயார் பண்ணும். பின் இதன் பக்கவாட்டில் துருத்திக் கொண்டிருக்குமாறு சேம்பர்களை அமைக்கும்.இதில் கீழ்ப்புறத்து பாதுகாப்பான சேம்பர் முட்டை ஸ்பெஷல்! ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன ஒரு ஆராய்சியாளர் மெனக்கெட்டு கவுண்டிங் செய்துள்ளார். கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு (??) போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. (ஆனால் சில சமயம் குரங்குகளுக்கு அட்வைஸ் செய்து கூட்டை இழக்கும்! கதைதான்! இருந்தாலும் குரங்கு பாட்ர்டிகளுக்கு உபதேசம் யாரும் செய்யகூடாதுதானே? )இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால் கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது. (இவைகளிலுமா??)
கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தில் பெண் குருவிக் கூட்டம் திடீரென ஆஜராகிவிடும். இவை ஒவ்வொரு கூடாய் மாறிமாறி விசிட் அடித்து ஆய்வு செய்யும். இப்படி விசிட் வரும் போது அக்கூட்டின் ஆண்குருவி என்னைப்பார்! என் கூட்டைப்பார்!! என்று ஆஜானபாகுவாய் அழகு காட்டும். ஒரு வழியாய் மனங்கவர்ந்த கூட்டில் பெண் குருவி அமர்ந்து கொள்ளும். பெண் குருவி வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு மின்மினி பூச்சியை பிடித்து கூட்டின் உள்ளே களிமண் பேஸ்ட் கொண்டு ஃபிக்ஸ் செய்து முதல் இரவை கொண்டாட தயார் ஆகிவிடுகிறது. மழைக் குளிரின் கதகதப்பில் சில நாட்களுக்கு புது மனைவியிடன் ஓயாமல் இணை சேரும். குருவி 2-5 முட்டைகளை இட்டு, பெண் குருவி 15 நாள் வரை அடைகாக்கிறது. ஆண் குருவி முதல் பெண் குருவியிடம் விடுதலை பெற்று அடுத்த பெண் குருவிக்கு அடுத்த கூட்டை கட்டி அழகு காட்ட ஆரம்பிக்கிறது. இதே ரீதியில் அதிக பட்சம் ஐந்து குடும்பங்களை ஏற்படுத்திவிடுகிறது. அப்புறம் ஏராள வாரிசுகளுக்கு அப்பாவாகிப் போன சந்தோஷத்திலும்,சீசன் முடிந்து போன ஏக்கத்திலும் வேறு வேலை பார்க்க போய்விடும். மறுபடியும் மழைக்காலம் வராமலா போய்விடும் என்ற ஆறுதலுடன்!
24 April, 2011
மயிலாட்டம்!அது ஒரு காமகளியாட்டம்??
23 April, 2011
மயில் அழகின் சின்னம்!!
மயில்
ஃபேசியானிடே(Phasianidae) என்னும்குடும்பத்தைத்சார்ந்த மயில்களில் மூன்றுஇனங்கள்!
1.ஆசியவகை-இதுதான் நமது இந்திய மயில்!!
2.மற்றொன்று இந்தோசீனாவுக்குச் சொந்தமான ஜவானீஸ்மயில்கள்
3.இன்னொன்று ஆப்பிரிக்கவகை காங்கோ மயில்களுக்கு அநியாயத்திற்கு அவைகளுக்கு தோகையே இல்லை
மயில்களில் ஆண்மயிலுக்குத்தான் ரசிகர்கள் அதிகம்.ஏனென்றால் அதற்குதான் டிரெயிலர் மாதிரி மகாஎக்ஸ்ட்ரா ஃபிட்டிங்தோகை அதுஅழகோஅழகு!
பெண் மயில்களுக்கு தோகை இல்லை, நீலநிறகழுத்தும் விசிறிக் கொண்டையும் இதற்குஆப்சென்ட்!
மினி கொண்டையும் கிரேநிறத்தில் பொரிப்பொரியாய் கழுத்து சிறகுகளையும் முகத்தில் ஏகத்திற்கு வெட்கமும் மட்டும்இருக்கும்!
சாப்பாட்டுவிஷயத்தில் இவை பாதி வெஜ்மீதி நான்-வெஜ்!
இவை பெரும்பாலும் ரிமோட் வனாந்திரங்களை விரும்புவதில்லை.
மனிதர்கள் வாழும் பகுதியை ஒட்டிய மரங்கள் நிறைந்த பகுதிதான் மயில்களின் விருப்பமான பகுதி. இப்பகுதியில் விவசாய நிலங்களில்கிடைக்கும் தானியங்கள்,விதைகள்,மொக்குகள், போன்றவெஜிட்டேரியன்
ஐட்டங்கள் மட்டுமன்றி நத்தை,தவளை,பாம்புகள்,புழுக்கள்,என்று நான்-வெஜிட்டேரியன்வேட்டையும் நடத்தும்.
இவை உறவே கொள்வதில்லை என்று பலர் சொல்கிறார்கள்
இல்லை !இல்லை!!ஆண்மயில் தோகை விரித்தாடும் போது "தன்கையே தனக்கு உதவி" என்பது போல் அதிகம் கிளர்ச்சியுற்று உயிரணுக்களை முத்துக்கள் போல் நிலத்தில் சிதறடித்து விடுவதாகவும் இதை உட்கொள்ளும் பெட்டைமயில்கள் கருவுற்று முட்டைகளை இடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
பாம்புகளையே ஜீரணித்துவிடும் மயில்கள் வயிற்றுக்குள் போகும் விந்துக்களையா விட்டு வைக்கும் ஊகூம்,நோ இன சேர்க்கை,நோஇனவிருத்திதான்!!
பிறகு என்னதான் நடக்கிறது? பார்ப்போம்!!
அடுத்தப் பகுதியில்!!
இவை பெரும்பாலும் ரிமோட் வனாந்திரங்களை விரும்புவதில்லை.
மனிதர்கள் வாழும் பகுதியை ஒட்டிய மரங்கள் நிறைந்த பகுதிதான் மயில்களின் விருப்பமான பகுதி. இப்பகுதியில் விவசாய நிலங்களில்கிடைக்கும் தானியங்கள்,விதைகள்,மொக்குகள், போன்றவெஜிட்டேரியன்
ஐட்டங்கள் மட்டுமன்றி நத்தை,தவளை,பாம்புகள்,புழுக்கள்,என்று நான்-வெஜிட்டேரியன்வேட்டையும் நடத்தும்.
மயில்களின் குடும்ப விளையாட்டுகள்!
இதைப் பற்றி அநேக சர்ச்சைகள் உண்டு!இவை உறவே கொள்வதில்லை என்று பலர் சொல்கிறார்கள்
இல்லை !இல்லை!!ஆண்மயில் தோகை விரித்தாடும் போது "தன்கையே தனக்கு உதவி" என்பது போல் அதிகம் கிளர்ச்சியுற்று உயிரணுக்களை முத்துக்கள் போல் நிலத்தில் சிதறடித்து விடுவதாகவும் இதை உட்கொள்ளும் பெட்டைமயில்கள் கருவுற்று முட்டைகளை இடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
பாம்புகளையே ஜீரணித்துவிடும் மயில்கள் வயிற்றுக்குள் போகும் விந்துக்களையா விட்டு வைக்கும் ஊகூம்,நோ இன சேர்க்கை,நோஇனவிருத்திதான்!!
பிறகு என்னதான் நடக்கிறது? பார்ப்போம்!!
அடுத்தப் பகுதியில்!!
Subscribe to:
Posts (Atom)
சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?
சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...
-
காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம...
-
இது நரியின் சம்பந்தபட்ட பக்கம்தான் ! தலைப்பு விஷயம் கடைசியில்தான் வரும் !! நரிகளின் காதல் வித்தைகள் நீண்ட காலமாக ரகசியமாகவே இருந்ததது . மேல...
-
காளான் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன் காளான்கள் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறார். அவ்வப்போத...





