30 September, 2011

காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!


காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்துவிடுவாரோ என்று! (சரிதானே நல்லநேரம் சதிஷ்குமார்) ஆனால் அமெரிக்காவிலும்,கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங் என்பது ஒரு பாப்புலர் ஸ்போர்ட். காக்கைகளுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக சுட்டுத் தள்ளுகிறார்கள்.

29 September, 2011

வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாத நோய் வராது

அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு வாழைப்பழம், இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும். இது 21 சதவீத ரத்த உறைவை தடுக்க உதவுகிறது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

28 September, 2011

இதய நோயை தடுக்கும் முட்டை!
முட்டை உடல்நலத்திற்கு சிறந்தது. அனைத்து வயதினரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் முட்டை சாப்பிடும் பெண்களுக்கு பிரசவ காலத்தின் போது இதய நோய்கள் தாக்குவது பெருமளவில் குறையும். இந்த தகவலை தற்போது நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

25 September, 2011

அடங்காதாகம்


தாகவிடாய், அடங்காதாகம், ஆயுர்வேதத்தில் திருஷ்ணா எனப்படுகிறது. வழக்கமாக ஏற்படும் தாகத்திற்கும், இதற்கும் வித்தியாசம் உண்டு. அசாதாரணமான அடங்காதாகம் ஒரு நோய்.
தாகம் என்ற உணர்வு, மூளையால் தூண்டப்படுகிறது. இந்த உணர்வு உடலில் நீர் தேவை ஏற்பட்டால், உண்டாகும் உடலில் நீர் அதிகம் உள்ள போது, தாகம் எடுக்காது. தவிர உடல் இன்னொரு விதத்திலும் தண்ணீர் சமசீர் விகிதத்தை பிட்யூடரி சுரப்பியால் பாதுகாக்கும். உடலின் தண்ணீர் இருப்பு குறையும் போது, பிட்யூடரி சுரப்பி என்ற ஹார்மோனை சுரக்கும். இது சிறுநீரகத்தில் தண்ணீரை சேமிக்கவும், குறைந்த அளவு சிறுநீர் கழிக்கவும் கட்டளையிட்டு உதவும். தண்ணீர் உடலில் அதிகம் இருந்தால் அதையும் பிட்யூடரி சுரப்பி, அட்ஜஸ்ட் செய்யும்.

24 September, 2011

வெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி

வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்  புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

22 September, 2011

ஆழ்கடலில் ஒரு காம கசமுசா!
சிரித்து விளையாடும் சிங்கார டால்பின்கள்
நமது நாட்டின் தேசிய கடல்வாழ் விலங்கான டால்பின்கள் எப்போதும் முகம் நிறைந்த புன்னகையுடன் துள்ளிவிளையாடும் பாலூட்டி இனத்தை சேர்ந்தவை.சமுத்திர சாம்ராஜ்ஜியத்தில் படுவேகமாக நீச்சலடிக்கும் பிராணி டால்பின்தான். இவைகளின் உடலமைப்பு வேகமாகவும் , சுழன்று சுழன்று நீந்துவதற்கு ஏற்றவையாக உள்ளது .

டால்பின்கள் சுறாமீன்களின் நெருங்கிய உறவினர் . டால்பின்களில் சாதாரண வகை, கங்கைப்புற வகை என்று இரண்டு வகைகள் உண்டு. இரண்டிலுமே பெண்ணுக்குத்தான் பெரிய உடலமைப்பு. இது தவிர, பாட்டில் மூக்கு டால்பின்,வால் அகன்ற டால்பின் போன்ற சில அரிய வகை எக்ஸ்டிராக்களும் உண்டு. கங்கைப்புற டால்பின்கள் மட்டும் கடலுக்குப் போவதில்லை. கங்கை, பிரம்மபுத்திரா நதிகளோடு சரி! 

பூண்டு சாப்பிடுவது நல்லதா?

சிறுவயதில் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம் என எந்த வயிறு சார்ந்த எந்த பிரச்சினை என்றாலும் அம்மாக்களின் கை வைத்தியம் பூண்டுதான்.
இந்த பூண்டுக்கு பல மருத்துவ பயன்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்லிகொண்டே இருக்கின்றன! பூண்டுவில் உள்ள Alicine என்ற பொருளுக்கு அழற்சிக்கு எதிரான (Anti-inflammatory) சக்தி இருக்கிறதாம்!

21 September, 2011

ஒரு மழலையின் மொழிபெயர்ப்பு!
ஒரு மழலையின் மொழிபெயர்ப்பு!

காயப் போட்ட உள்ளாடை

கழன்று கீழே

அதை எடுத்த மழலை

அம்மா, பால்மூடி!

என்றது அம்மாவின் பிராவை!


20 September, 2011

கல்யாணத்துக்கு நான் ரெடி! நீங்கள் ரெடியா? என கேட்கும் பிரா!


ஜப்பான் நிறுவனமான டிரிம்ப் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள புதிய பிரா ஜப்பான் தாய்மார்களை அலற வைத்திருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்களை திருமணத்துக்கு தயார் என்று அறிவிக்கும் வகையில் அணியும் பிரா இது. திருமணம் நாடிஎன்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராவில் டைமர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

18 September, 2011

சொட்டு சொட்டாக சிறுநீர் ? கவனியுங்கள்!

புராஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்துள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர்க்கும் இந்த சுரப்பி, அடிவயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை ஒட்டி சிறிய அளவில் அமைந்துள்ளது. சிறுவயதில் செயலற்று இருக்கும் இந்த சுரப்பி, பருவம் வந்தவுடன் விழித்துக் கொள்கிறது. 

இறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி!

கடலின் அடியிலும், பனி உறைந்து கிடக்கும் இடங்களிலும் உயிர் வாழுகின்ற மிக,மிகச் சிறிய ஜீவன்தான் நீர்க்கரடி. இதனை நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது, கரடி போன்ற தோற்றம் தெரிவதால், இது நீர்க்கரடி என்றழைக்கப்படுகிறது.

16 September, 2011

எடுங்கள் விளக்குமாரை! மனைவி உங்கள் வசம்!!

உங்கள் மனைவி சந்தோஷமாக இருக்கிறாரா?
இல்லையென்றால் அவரை மகிழ்வுறுத்துவதற்கு வழி என்ன?
சிந்திப்போம்!
மனைவியில் மிகுந்த அன்பு கொண்டவராக நீங்கள் இருக்கலாம். அவருக்கு சிறிது உடல் நிலை சரியில்லை என்றாலும் பதைபதைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று
தேவையான பரிசோதனைகளையெல்லாம் அலுக்காமல் செய்து மருந்துகள், சத்து மருந்துகள் எல்லாம் வாங்கிக்கொடுப்பவரா?

கற்பூரவள்ளியின் மகத்துவம்!


வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும். அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா? அதில் இருந்து விடுதலை அளிக்கும்.
கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே... இது தேரையர் குணபாடம் கூறுவது .
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.
இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .
பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .
காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் - வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு.
(அகத்தியர் குணபாடம்)
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
தாவர பெயர் Coleus Aromaticus.
Karpooravalli in Tamil
Pan-Ova in Marathi.
வேறு பெயர் ஓம வள்ளி
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.
இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.
மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது . Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.
இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.
கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட ,கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்

15 September, 2011

குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!!

குழந்தைக்கு சளியா?  உடனே என்ன செய்வீர்கள்'? கவனிக்காமால்  விட்டுவிட்டால் சளி  நிமோனியாவாக மாறி  மோசமாகிவிடுமோ என்று அலரிப்புடைத்து டாக்டரிடம்  உடனடியாகக் தூக்கிக் கொண்டு ஓடுவீர்கள்.

மருத்துவரும்  சளிக்கான ஏனைய மருந்துகளுடன் பெரும்பாலும் நுண்ணுயிர் கொல்லி மருந்தையும் (Antibiotic) தரக்கூடும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தையாயின் தூசி, புழுதி போன்றவற்றில் விளையாடுவதைத் தவிர்க்கும் படி கூறுவார். 

உங்கள் மனையியை இடுப்பு குளியல் செய்யச் சொல்லுங்கள்!

டீன் ஏஜ் பெண்களாகட்டும்... நடுத்தர வயதுப் பெண்களாகட்டும்.. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்னை!

அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும் வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறுபல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.

இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள் வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு எலும்புக்கட்டு வலி, ஏன்... உடலுறவு தொடர்பான சில குறைகளை நீக்குவது என்று பல பிரச்னைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது!

இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில் இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து, நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!

இயற்கை மருத்துவம் செய்யும் பல டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள்.

இடுப்புக் குளியலை எப்படி வீட்டிலேயே செய்வது என்று வாசகிகளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்கிறார் இயற்கை மருத்துவரான டாக்டர். மங்கை.

‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப் உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். ‘அதையெல்லாம் வாங்குவதற்கு முந்நூறு நானூறு ரூபாய்க்கும் மேல செலவாகுமே...’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மேலே சொன்ன பிரச்னைகளுக்காக ஊசிகள், மருந்துகள், டெஸ்டுகள் என்று ஒவ்வொரு தரமும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளில் செலவழிக்கும் போது, இந்தச் செலவு மிகச் சிறிய செலவுதான்.

தவிர, ஒருமுறை வாங்கி வைத்துவிட்டால் அதைப் பல மாதங்கள், ஏன் வருடங்கள்கூட உபயோகிக்க முடியும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கூட உபயோகிக்க முடியும்!

இடுப்புக் குளியலை குளிர்ந்த நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக் கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட் கிடைக்கும்.

பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்... இடுப்புக் குளியலில் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்!

குளிர்ந்த நீர் இடுப்புக் குளியல்
உங்களுடைய தலையும் பாதமும் மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக் டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள். உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு, அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக் கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள் ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக் கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப் பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப் பகுதி மட்டுமல்ல... பிறப்புறுப்பின் பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து விடுங்கள்.

இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர், மலச்சிக்கல், போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

வெந்நீர் இடுப்புக் குளியல்
இந்தக் குளியலில், உடல் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரின் சூடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் குளியலில் தொப்புளில் இருந்து தொடைகள்வரை நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி, அமரும் முறை, தேய்த்து விடுதல் எல்லாமே முன்னர் சொன்னது போலத்தான்.

மாதவிலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு உள்ளவர்கள், மாதவிலக்குக் கோளாறு உள்ளவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தக் குளியலை மேற்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வருவது தாமதமாதல், மாதவிலக்கின்போது வலி அதிகம் இருத்தல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த வகைக் குளியல் நல்ல பலனைத் தரும்.

சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்கும் இதே முறைதான்.

ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. குளிர்ந்த நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் வெந்நீரில், ஒருமுறை சாதாரணக் குளியல் குளித்து விடுங்கள். அதேபோல, வெந்நீர் அல்லது சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த நீரில், வெறுமனே சாதாரணக் குளியல் குளிக்க வேண்டும்.

இடுப்புக் குளியலுக்குப் பின், பப்பாளி, மாதுளை மற்றும் பப்பாளி விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பத்து வயது முதலே பெண்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். எந்தெந்த நேரங்களில் இந்த இடுப்புக் குளியல் குளிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிலக்கின் போதும், கர்ப்பக் காலத்தின் போதும் இடுப்புக் குளியலை மேற்கொள்ளக் கூடாது. அதேபோல இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களும் இடுப்புக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

இக்குளியலுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், வெந்நீரின் வெப்பம் எவ்வளவு இருக்கலாம் என்பதும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் நிலமையைப் பொறுத்து மாறும். அதனால், முதல்முறை இடுப்புக் குளியல் செய்யும்போது மட்டும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்யுங்கள்!’’

14 September, 2011

சிறுநீர் காலடியில் சிந்துகிறதா?

சிறு நீர் அடிக்கடி கழிவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். நீரிழிவு, புரஸ்ரேட் சுரப்பி வீக்கம், மனம் அமைதியின்மை, சிறுநீரில் கிருமித் தொற்று, பிரஸர் மற்றும் இருதய நோய்களுக்கு உட்கொள்ளும் சில மாத்திரைகள் போன்ற பல.
"
அடிக்கடி சிறுநீர் போகுது ஆனால் அதிகம் போவதில்லை"
"
சிறுநீர் விட்டிட்டு வந்தாலும் முழுக்க போன உணர்வில்லை- கொஞ்ச நேரத்திலை திரும்பப் போக வேணும்."
"
போக வேணும் போல இருக்கும், போனால் டக்கென போகாது கொஞ்சம் முக்கினால்தான் போகும்"
"
முன்பு பொல  முழுவீச்சில் போகாது. மெதுவாகத்தான் போகும். சிலவேளை காலடியில் சிந்துகிற மாதிரி மிக மெதுவாகப் போகும்."

மேற்கூறிய  அந்த அறிகுறிகள், பொதுவாக புரஸ்ரேட் சுரப்பி வீக்கத்தால் ஏற்படுவன. புரஸ்ரேட் என்பது  மூத்திரபைக்குக் கீழே, சிறுநீர் பிரிந்து வரும் குழாயைச் சுற்றியிருக்கும் ஒரு சுரப்பி. விசேசமாக ஆண்களில் மாத்திரம் இருப்பது. வயதாக, ஆக அது சற்று வீக்கமடைவதுண்டு. அப்படி வீங்கினால் சிறுநீர் சுலபமாக வெளியேறுவது தடைப்பட்டு மேற் கூறிய அறிகுறிகள் வரக்கூடும்.

டாக்டர் கையுறை அணிந்து  மலவாயின் ஊடாக விரலைச் செலுத்தி புரஸ்ரேட் வீக்கம்  இருப்பதை உறுதிப்படுத்துவார். அல்ட்ரா சவுன்ட்  ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை ஆகியவையும் புரஸ்ரேட் வீக்கத்தை  துள்ளியமாக உறுதி செய்யும்.

"
இது புற்று நோயாக இருக்குமோ" என்பதையும் உறுதிசெய்யவேண்டிருக்கும். ஏனேன்றால் புரஸ்ரேட் வீக்கம் வயதாகும் போது ஏற்படும் (Benign Prostrate Hypertrephy) சாதாரண வீக்கமும் உண்டு அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம். மலவாயில  விரல் விட்டுச் பரிசோக்கும்  போது அவ்வீக்கம் மென்மையாகவும் வழுவழப்பாகவும் இருந்ததால் புற்று நோயாக இருக்க வாய்ப்பில்லை என மருத்துவர் ஆறுதல் தருவார். இருந்த தாலும் ஆன்கோ பேக் இரத்தப் பரிசோதனை செய்துவிடலாம் என்றால் செய்துகொள்வது நல்லது. புற்று நோய் இல்லை என உறுதி படுத்திகொண்டால் நல்லதுதானே!

புரஸ்ரேட் பிரச்சினையைக் குணப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அறுவை  சிகிச்சை, மற்றது மாத்திரைகள்!

மாத்திரைகளை குறைந்தது ஆறுமாதம் உபயோகித்தால்தான் நல்ல முன்னேற்றம்  தெரியும்.மேலும் தொடர்ந்து உபயோகிக்க நேரிடும், சிறு நீர் வாயிலூடாக குழாயைச் செலுத்தி, வெளிக்காயமின்றி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆபத்தற்ற, உடலுக்குத் துன்பம் விளைவிக்காத அறுவை சிகிச்சை, நோயின் நிலைக்கு உகந்த சிகிச்சை முறையை டாக்டர்தான் முடிவுசெய்வார்.  நீங்கள் ஃபீஸ் மட்டும் ரெடி செய்துவிடுங்கள்!!

சிங்கத்தை அதன் குகையில் சந்தித்த வாலிபர்!

இந்த படத்தில் சிங்கத்தை கொஞ்சிக் குலாவும் இந்த இளைஞரின் பெயர் அலெக்சாண்டர். உக்ரைனில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையின் உரிமையாளர். இங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்கு, இவருக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. இதனால், விபரீதமான ஒரு முடிவை, எடுத்துள்ளார்.
இவரது மிருக காட்சி சாலையில், ஒரு ஆண் சிங்கமும், ஒரு பெண் சிங்கமும் உள்ளன. அங்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள குகைக்குள், இந்த சிங்கங்கள் வசிக்கின்றன. மிருக காட்சி சாலைக்கு போதிய நிதி திரட்டுவதற்காகவும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், இந்த குகைக்குள், சிங்கங்களுடன், 35 நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி விட்டார். தன் துணிச்சலான இந்த நடவடிக்கையை விளம்பரப்படுத்தும் வகையில், குகைக்குள் கேமராக்கள் பொருத்தியுள்ளார். இதன் மூலம், இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும், வெளி உலகத்துக்கு தெரிய வரும்.
"நீங்கள் குகைக்குள் இருக்கும் போது, சிங்கங்களுக்கு திடீரென கோபம் வந்து, உங்களை தாக்கினால் என்ன செய்வீர்கள்?' என்ற கேள்விக்கு,"இவை நான் வளர்த்த சிங்கங்கள் தான். இருந்தாலும், அவற்றின் குணங்கள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தைரியத்தை வரவழைத்து தான், இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன். நம்பிக்கை தானே சார் வாழ்க்கை...' என்று, சிறிதும் பயம் இன்றி, தத்துவார்த்தமாக பேசுகிறார்.

கம்ப்யூட்டரை உங்களுடையதாக மாற்ற!

கம்ப்யூட்டர் நம்முடையதுதான் என்றாலும், யூசர் நேம், அதற்கான படங்களில் மட்டுமே நம் பெயர், படங்கள் இடம் பெறுகின்றன. இவற்றுடன் இன்னும் சில இடங்களில் நம் பெயர்களை அமைத்து, கம்ப்யூட்டரில் நம் பெயரையும் படத்தையும் போட்டு, முழுமையான நம் கம்ப்யூட்டராக எப்படி மாற்றலாம் என்று பார்க்கலாம். இதனை விண்டோஸ் எக்ஸ்பிக்கு குறிப்புகளாகத் தருகிறேன்.
விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பு வதனைப் பதிக்கலாம். முதலில் டெஸ்க்டாப்பில் உள்ள My Computer ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சிலரின் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் லோகோ அருகே, கம்ப்யூட்ட ரைத் தயாரித்த நிறுவனத்தின் லோகோ கூட இருக்கலாம். அப்படியானால், நம் லோகோ அல்லது பெயர் எப்படி இணைப்பது?
1. முதலில் ஒரு படம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். மைக்ரோசாப்ட் பெயிண்ட் புரோகிராமினை இயக்கவும். இதற்கு Start, All Programs, Accessories, Paint எனச் செல்லவும்.
2. இங்கு நாம் அமைக்க இருக்கும் படம் அல்லது லோகோ 180x115 என்ற அளவிலான பிக்ஸெல்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால், கான்வாஸ் எனப்படும் படத்தின் தன்மையை செட் செய்திட வேண்டும். இதற்கு Image மற்றும் Attributes தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பாக்ஸில், அளவு யூனிட்டாக Pixels என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலே சொன்ன அளவினை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
3. டூல்பாரில் உள்ள டூல்களைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் லோகோவினை அமைக்கவும். லோகோவின் பின்னணியினை அமைக்க Fill Tool பயன்படுத்தலாம். Text Tool பயன்படுத்தி, கலரில் டெக்ஸ்ட் அமைக்கலாம். மேலும் கிளிப் ஆர்ட் காலரியிலிருந்து ஏதேனும் நமக்குப் பிடித்த படத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். உங்கள் எண்ணங்களுக்கேற்ற வகையில், படங்கள், போட்டோக்களை இணைத்து லோகோவினைத் தயார் செய்திடலாம்.
4. அடுத்து File மெனு கிளிக் செய்து அதில் Save As என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இனி கிடைக்கும் டயலாக் பாக்ஸில், சேவ் செய்ய வேண்டிய டைரக்டரியாக C:\Windows\System32 என்ற டைரக்டரியைத் தேர்ந்தெடுக்க வும். சேவ் செய்யப்படும் பைலின் பெயராக oemlogo.bmp என்று கொடுக்கவும். இப்போது லோகோ தயாராகி விட்டது. அடுத்து டெக்ஸ்ட் என்டர் செய்ய வேண்டும். இதற்கு நோட்பேட் பயன்படுத்தலாம்.
1. நோட்பேட் கிடைக்க Start, All Programs, Accessories, Notepad என்று செல்லவும். நோட்பேடில் கீழ்க்கண்டவாறு டைப் செய்திடவும்.
[General]
Manufacturer=(இங்கு எதனையும் கொடுக்கலாம்)
Model=
[Support Information]
Line1=This computer was devised by
Line2=Mr..............
Line3=Enjoy Using It
Line4=************
இங்கு சமன் (=)அடையாளத்தினை அடுத்து நீங்கள் எந்த தகவலையும் டைப் செய்திடலாம். இன்னும் அதிகமான வரிகளையும் இணைக்கலாம். ஆனால் அதே பார்மட்டில் இருக்க வேண்டும்.
2. இங்கு அனைத்தும் முடிந்தவுடன் File தேர்ந்தெடுத்து, அதில் Save As என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில், மேலே குறிப்பிட்ட அதே டைரக்டரியின் (C:\Windows\System32) பெயரை டைப் செய்து, பைலை oeminfo.ini என்ற பெயரில் சேவ் செய்திடவும். இதில் கவனமாக, பைல் டைப் (File Type) என்பதில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் (Text Document) என்பதற்குப் பதிலாக All Files என இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
மேலே சொன்ன அனைத்தையும் சரியானபடி நீங்கள் செய்துவிட்டால், அடுத்த முறை கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, பின்னர் சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கையில், உங்களுடைய புதிய லோகோ மற்றும் தகவல்களைக் காணலாம். நம் செய்தியைக் காண Support Information என்பதில் கிளிக் செய்திட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.
இன்னொரு இடத்திலும் உங்கள் பெயரை, அல்லது விரும்பும் லேபிளை அமைக்கலாம். அது ஸ்டார்ட் பட்டனாகும். அனைவரும் ஸ்டார்ட் பட்டனை எப்படியும் பார்த்து பயன்படுத்துவர் என்பதால், இதில் உங்கள் பெயர் அமைந்தால், இன்னும் நன்றாக இருக்கும்.
ஆனால், இங்கு இதற்கெனக் கிடைக்கும் புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். அந்த புரோகிராமின் பெயர் Start Button Renamer. கிடைக்கும் தள முகவரி: http://www.kellyskornerxp.com/regs_edits/ ProgFull.zip.
இங்கு இன்ஸ்டலேஷன் எதுவும் தேவை இல்லை. Start Btn என்று இருப்பதில் கிளிக் செய்தால் போதும். இனி ஸ்டார்ட் பட்டனில் என்ன சொல் அல்லது பெயர் இருக்க வேண்டுமோ, அதனை டைப் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். உடனே உங்கள் ஸ்டார்ட் பட்டன் பெயர் நீங்கள் டைப் செய்திட்ட பெயராக இருப்பதனைக் காணலாம். ஒவ்வொரு முறை நீங்களோ, அல்லது மற்றவர்களோ, கம்ப்யூட்டரில் லாக் ஆன் செய்திடுகையில், இந்த ஸ்டார்ட் பட்டனில் உள்ள சொல்லை, மேற்படி புரோகிராம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.-நன்றி தினமலர்

12 September, 2011

இஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம்
அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.
வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்:
உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது. நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லைகள் நீங்கும். பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோல் உரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட்டால் காது வலி நீங்கும
பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...