04 September, 2011

பரம்பரை சொத்து விடுபடாமல் கிடைக்க!


தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட் என்ற பெயரில் உலகின் முன்னேற்ற நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஏறத்தாழ 250மில்லியன் டாலர் (1மில்லியன் என்பது 10 லட்சம்; 1 டாலர் என்பது நேற்றைக்கு 45ரூபாய்) செலவழித்து, மனித உடலின் ஒவ்வொரு அங்கமும் எப்படி உருவாகிறது...? என்பதை ஆராய- அது அவனுடைய செல் என்னும் உயிரணுவில் செய்தியாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்கள் பேப்பர் பென்சிலால் அல்ல; க்ரோமோசோம் என்னும் மிக நீண்ட கூட்டணுவின் கட்டமைப்பில் அந்த ரகசியம் பொதிந்திருக்கிறது. இதை உலக விஞ்ஞானிகள் அதை ஒரு மாதிரி படித்து விட்டார்கள்!

நம் உயிரணு செல்லில் யார் எழுதினார்கள்? என்று விஞ்ஞானிகளிடம் கேட்டால், ஸாரி யாரும் இல்லை. அவை நாச்சுரல் செலக்­ன் என்னும் இயற்கையின் தேர்ந்தெடுப்பு என்கிறார்கள்.

முழு வளர்ச்சி அடைந்த ஒரு மனித உடலில் 100 லட்சம் கோடி செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் தாயிடமிருந்து பெற்ற 23 குரோமோசோம்களும், தந்தையிடமிருந்து பெற்ற 23 குரோமோசோம்களும் சேர்ந்து ஆகமொத்தம் 46 உள்ளன.

ஒரு குரோமோசோமில் பல்லாயிரம் மரபணுக்கள் (Genes) உள்ள போதிலும், சுமார் ஆயிரம் மரபணுக்கள் தான் குணநிர்ணய மரபணுக்கள் என்று கருதப்படுகின்றன.

இதன்படி கணக்கிட்டால் ஒரு செல்லுக்குள் இருபத்தி மூன்றாயிரம் குண நிர்ணய மரபணுக்கள் இருக்கின்றன. ஒரு ஜோடி மரபணுக்கள் உடலில் ஓர் அமைப்பை நிர்ணயிக்கின்றன.

கண்களின் நிறம், காதுகளின் தோற்றம், பற்களின் அமைப்பு, மூக்கின் நீளம், தலை முடியின் எண்ணிக்கை, ரத்தப்பிரிவு, ரத்தத்தில் உள்ள புரதங்களின் கட்டமைப்பு போன்ற குணங்கள் ஒரு ஜோடி மரபணுக்களால் நிர்ணயிக்கப் படுகிறன்றன.

உடலில் நிறம், உயரம், அறிவுக் கூர்மை, நினைவாற்றல், சாந்தசுபாவம், பொறுமையின்மை, முன்கோபம் முதலிய குணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மரணுக்கள் தீர்மானிக்கின்றன.

ஒரு மரபணு பழுதடைந்தால் ஒரு நோய் அல்லது குறைபாடு ஏற்படும். இந்த அடிப்படையில் பார்த்தால் சுமார் 23,000 மரபு நோய்கள் உள்ளன.

பெரும்பாலான மனநோய்கள், பரம்பரையாக வரும் புற்று நோய்கள், உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, மனவளர்ச்சியின்மை, அதிக அளவு கொலஸ்ட்ரால், இளவயது தலை வழுக்கை போன்ற 13, 700 நோய் நிரூபிக்கப்பட்ட மரபு நோய்களாகும். இந்த மரபு நோய்களை மெக்குசிக் என்னும் நிபுணர் தலைமையில் உள்ள குழுவால் மரபுநோய்கள் அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நமது உடலில் உள்ள மரபணுக்களில் 50 சதவீதம் தாயிடமிருந்தும் 50 சதவீதம் தந்தையிடமிருந்தும் வந்துள்ளன.

தாய்வழி தாத்தா - பாட்டி மற்றும் தந்தைவழி தாத்தா - பாட்டியிடமிருந்து தலா 25 சதவீத மரபணுக்களும் மொத்தம் 8 கொள்ளு தாத்தா - பாட்டிகளிடமிருந்து தலா 12.5 சதவீத மரபணுக்களும், மொத்தம் 16 எள்ளுதாத்தா - பாட்டிகளிடமிருந்து தலா 6.25 சதவீத மரபணுக்களும் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.!

இவ்வாறு சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான மரபணுக்கள் தான் தலைமுறை தலைமுறையாக நகல் மரபணுக்களாகச் செயல்பட்டு நமது உடல் அமைப்பையும். இயக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மரபணுக்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலை முறைக்குச் செல்லும்போது அபூர்வமாக ம்யூட்டே­ன் எனும் திடீர் மாற்றம் ஏற்படுகிறது. டி. என்.ஏயில் பொதிந்திருக்கும் செய்தியில் எப்போதாவது ஒருசமயம் திடீர்என்று திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் செல்லின் ஆதார குணங்கள் மாறிவிடுகின்றன. இந்த மாற்றம் அல்லது திருத்தம் யார் செய்கிறார்கள்...? விஞ்ஞானியிடம் கேட்டால் பழைய பதில்தான். ஸாரி யாரும் இல்லை; இயற்கையின் தேந்தெடுப்புதான் என்கிறார்கள் . இந்த மாற்றம் அல்லது திருத்தத்திற்குத் தான் ம்யூட்ஷேன் (Mutation) என்கிறார்கள்.
இதுவரை நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள் என்று கருதப்பட்டு வந்த சின்னம்மை, தொழுநோய், சயரோகம், டீப்தீரியா. எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களுக்கு வலுவான பரம்பரை அடிப்படை இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

உதாரணமாக, மலேரியா நோய் என்பது கொசுக்களால் பரப்பப்படும் ஓர் ஒட்டுண்ணியால் வருவது என்பது பலருக்குத் தெரியும். பிளாஸ் மோடியம் வைவாக்ஸ் என்னும் ஒட்டுண்ணிதான் 80 சதவித மலேரியாவுக்குக் காரணமாக இருக்கிறது.

கொசுக்கடியால் பாதிக்கப்படா மனிதர்களே நாட்டில் இல்லை என்ற போதிலும் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் மட்டுமே வை வாக்ஸ் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மரபணு மூலம் பரம்பரையாக வரும் டஃபி எனும் ரத்தப்பிரிவு தான் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டஃபி பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ளவர்களுக்கு மட்டுமே கொசு கடிப்பதால் மலேரியா வருகிறது, டஃபி நெகட்டிவ் ரத்தப்பிரிவு உள்ளவர்களுக்கு மலேரியா கொசுக்கள் கடித்தாலும் மலேரியா நோய் வரவேவராது.

மலேரியாவைப் போலவே டிப்தீரியா, சின்னம்மை, தொழுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நுண்கிருமிகளால் பரப்பப்படும் தொற்று நோய்களுக்கும் மரபியல் அடிப்படை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு க்ரோமோசோமும் நம் ஒவ்வொரு குணாதிசயங்களையும் அவைகளின் குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது. நான்ஸி வெஸ்லர் என்பவர் மேபிங் ஃபேட் என்ற ஓர் அருமையான புத்தகத்தில் தன் தேடலைப்பற்றி எழுதியிருக்கிறார். விதியின் வரைபடம்தான் இந்த ஜீன் என்கிற ஜீனோம் என்கிறார்.

க்ரோமோசோம் 5-க்கும் ஆஸ்துமாவுக்கு சம்பந்தம் இருப்பது போலத் தோன்றுகிறது. 6வது க்ரோமோ சோம்க்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இருப்பது போன்ற தெரிகிறது. 7வது க்ரோமோசோம் உள்ளுணர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

வாட்சன். க்ரிக் என்ற இரு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்தத் துறை திறந்து வைத்த பூதம் தரும் அறிவு நம்மை திகைக்க வைக்கிறது என்பது தவிர, வேறு ஏதும் செய்ய முடியாத அளவுக்கு நம் கையாலாகாத்தனமும் வெளிப்பட்டிருக்கிறது.! இந்தப் புதிய அறிவு ஏதோ ஒருவிதத்தில் நம்மை நாமே முழுவதும் அறிந்துகொள்ளத் தேவைதான் என்று தோன்றுகிறது. ஜீன்களுடன் நமக்குள்ள பரிச்சயம் 10ல் 1 பங்குதான் புரிந்து கொண்டிருக்கிறோம். அவைசொல்லும் ரகசியமும், சரித்திரமுமே இத்தனை வியப்புகளைத் தந்திருக்கின்றன. இன்னும் இந்த இயல் உன்னத மடைந்து .... நுட்பமடைந்து.... முன்னேற்றம் கண்டு நமக்கு மெல்ல மெல்ல உயிரின் வினோதப்பக்கங்கள் மஞ்சியிலிருந்து வெளிப்படும் சூரிய ஒளி போல புலப்பட ஏதோ ஒரு பக்கத்தில்... ஏதோ ஒரு ஜெனட்டிக் சரத்தில் நம் ஆதி பெற்றோரின் ஜீன் இருந்தாலும் இருக்கலாம்! மரபணுக்கள்தான் உடலில் தோற்றத்தையும் இயக்கத்தையும் கட்டுப் படுத்தும் உன்னத சக்தியாக இருக்கின்றன. 

உடல் என்பது மரபணுக்களால் உருவாக்கப்படும் ஒரு நிரந்தரமற்ற மாயத்தோற்றம். இன்று நமது உடலில் வாழும் நகல் மரபணுக்கள் 600 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 20 தலைமுறைகளுக்கு முன்பு 10 லட்சத்து 48 ஆயிரத்து 576 முன்னோர்களின் உடல்களில் வாழ்ந்திருக்கின்றன. இன்று நம்மோடு வாழ்ந்து வருகின்றன.

மரணத்தின் போது உடலும் அதனுள் வாழும் நகல் மரபணுக்களும் மட்டுமே அழிந்து போகலாம். இந்த நகல் மரபணுக்களின் மூலம் எங்கு இருக்கிறது? எப்போது தோன்றியது..? என்பதெல்லாம் எவருக்கும் எதுவும் தெரியாது!

அந்த மூலமரபணு தேடலுக்கு விஞ்ஞானத்தால் மட்டும் முடியாது.

இந்த மூல மரபணு ஒருபோதும் அழிவதும் இல்லை. மரபியல் என்பது நோய்களின் அடிப்படையை அறிந்து கொள்ள உதவும் அறிவியல் பிரிவு மட்டுமன்று, அது அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் ஓர் அறிவுப்பாலம் என்பதே உண்மை. மூல மரபணு தேடி கண்டடைவதில் இன்னுமொரு நூற்றாண்டு கூட ஆகலாம் விஞ்ஞானிகள் வெளியில் தேடுவதை மெஞ்ஞானிகள் உள்ளே தேடுகிறார்கள்.

நீங்கள் தேடிப்பாருங்களேன்!

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...