பூண்டு சாப்பிடுவது நல்லதா?

சிறுவயதில் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம் என எந்த வயிறு சார்ந்த எந்த பிரச்சினை என்றாலும் அம்மாக்களின் கை வைத்தியம் பூண்டுதான்.
இந்த பூண்டுக்கு பல மருத்துவ பயன்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்லிகொண்டே இருக்கின்றன! பூண்டுவில் உள்ள Alicine என்ற பொருளுக்கு அழற்சிக்கு எதிரான (Anti-inflammatory) சக்தி இருக்கிறதாம்!

 

அத்துடன், ஆய்வுகூட பரிசோதனைகளில் (மனித உடலில் அல்ல) பூண்டில் உள்ள அலிசின் என்ற வேதியல் பொருள் கொலஸ்ட்ரோல் உற்பத்தியை தடுப்பதாகவும் அறியப்பட்டது. வேறுபல மருத்துவப் பயன் கொண்ட இரசாயனப் பொருட்களும் பூண்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.


இவற்றின் பயனாக பூண்டின் மேல் மேலை நாடுகள் அதிகம் பாசம் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். கொலஸ்ட்ரோலைக் குறைக்கும், இருதய நோய்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில்  பூண்டுகள் பதப்படுத்தப்பட்டு கேப்சூல்களாக மார்க்கட்டில் பிரசித்தம் அடைந்திருந்தது.

ஆயினும், அண்மையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆதரவில் செய்யப்பட்ட பூண்டுகள் பற்றிய ஆய்வு இந்த நம்பிக்கைகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.


ஆனால் சிறிய ஆய்வுதான். 192 பேரைக் கொண்டு ஆறு மாதங்கள் செய்யப்பட்ட ஆய்வு. ஆயினும், மிகவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஆய்வு. எந்தவித முன் நம்பிக்கைகளுக்கும் கட்டுப்படாத ஆய்வு.

இந்த ஆய்வின் முடிவானது பூண்டோ அதன் இரசாயனப் பொருட்களோ இரத்த த்தில் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பதில் எந்தவிதத்திலும் உதவாது என்பதே.

இன்னும் தெளிவாகச் சொன்னால், கெட்ட கொலஸ்ட்ரோல் எனப்படும் LDL இன் அளவைக் குறைப்பதிலோ அல்லது நல்ல கொலஸ்ட்ரோல் எனப்படும் HDL இன் அளவை அதிகரிப்பதிலோ எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதேயாகும்.
பூண்டு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் முடிவு என்பதில் ஐயமில்லை. ஆயினும், பூண்டு சாப்பிடுபவர்கள் அதனை நிறுத்த வேண்டியதில்லை. இன்னொரு ஆராய்ச்சி இதை மறுக்கும் என நம்பலாம்!ஏனெனில், பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுமா? கொலஸ்டரோல் இரத்தக் குழாய்களில் படிவதைக் குறைக்குமா?
இருதய நோய்களைக் குறைக்குமா?

போன்ற சமாச்சரங்களில் இந்த ஆய்வு ஈடுபடவில்லை. எனவே, ஏனைய நல்ல விளைவுகள் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது.
அதுவரை பூண்டை அதன் சுவைக்காகவும் நல்ல மருத்துவ விளைவுகளைத் தரக் கூடும் என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து சாப்பிடுங்கள். தவறு ஏதும் இல்லை. நல்லா குழப்பிவிட்டிட்டேனா? நான் குழப்பிட்டேனா? என தெரியவில்லை! இந்த பதிவை பார்த்து இனி பூண்டு சாப்பிடமாட்டேன் என்று மட்டும் உறுதிபூண்டுவிடாதீர்கள். இன்னும் ஆராய்ச்சிகள் நிறைய வரவிருக்கிறது!


Comments

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?