Posts

Showing posts from 2016

மனைவி சொல்லும் வீட்டு வேலைகளை செய்தாலே......

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம் உங்களுக்கு என்ன நோய் என்று!

Image
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந…

உடலை இளைக்கச்செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்

Image
எந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை!

அந்த மனப்பான்மை உடலை இளைக்கச் செய்வதிலும் தெரிகிறது சமீபகாலமாக. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உடல் பருமனைக் குறைக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதெல்லாம் ஒரே இரவில் நடக்கிற மாயவித்தை அல்ல. மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் நமக்குப் பொறுமை ஏது? விளைவு... ஒரு வாரத்திலோ, பத்து நாள்களிலோ பலன் தருவதாகச் சொல்கிற தவறான வாக்குறுதிகளை நம்பத் தயாராகிறார்கள். அந்த வகையில் உடலை இளைக்கச் செய்கிற சத்து பானங்களுக்கும், மாத்திரைகளுக்கும் ஏக கிராக்கி!


உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் இந்தப் பொருட்கள் உண்மையில் உபத்திரவமே தருகின்றன!


பவுடர் வடிவில் வருகிற பருமன் குறைப்பு மருந்தை, தினசரி 2 அல்லது 3 வேளைகள் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். குடித்ததும் பசி உணர்வே உண்டாவதில்லை என்பதால், வேறு உணவுகள் மீது நாட்டம் இருக்காது. 20 முதல் 30 நாட்களுக்குள் உடல் இளைக்க ஆரம்பிப்பதென்னவோ உறுதி. அப்புறம்தான் வருகிறது ஆபத்த…

ஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் !

Image
அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தையின்மைதான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
கொழுப்பு சத்து உணவு
உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இதுபோன்ற குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்கம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய…

ஏன் பறக்கமுடியவில்லை?

Image
மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான். மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன். “அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான். உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான். அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமும…

ஏன்.....தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது?

Image
1.தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே க…

தேன் கொடுத்தால் குழந்தைகள் நன்றாக பேசுமா?

Image
பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?