பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?
தேன் என்றாலே உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து என்ற கருத்து பரவலாக உள்ளது . மேலும் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக பேசும் திறன் வரும் என்றும் நம்பிக்கை உள்ளது.ஆனால் தேன் மலரில் உள்ளபோது சுத்தமாகவே உள்ளது பின்பு தேனீயால் எடுக்கப்பட்டு தேன்கூட்டில் சேகரிக்கப்பட்டு அதனை எடுத்து நாம் உபயோகிக்கும்போது அதில் அலர்ஜியை உண்டாக்கும் மகரந்த தூள்களும் , மிக கடுமையான பொடுலிசம்(BOTULISM ) என்ற வியாதியை உண்டாக்கும் Clostridium bacteria இருக்கலாம் .
எனவே குழந்தைகளுக்கு குறிப்பாக ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .
BOTULISM வந்தால் தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
உடல் தளர்ச்சி -குழந்தையை தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது
பால் குடிக்க மறுப்பது
சோம்பலாக அழுவது (WEAK CRY )
மலச்சிக்கல்
எனவே தேனை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு வயது குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .
அலர்ஜி , ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும் தேன் தராமல் இருப்பது நல்லது -நன்றி டாக்டர்.ராஜ்மோகன்
தேன் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாதா ?
ReplyDeleteவலை தல குழந்தை நல மருத்துவர் -டாக்டர் -ஜெய மோகன் அவர்கள் -பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் தர கூடாது என்று தனது கட்டுரை ஒன்றினைhttp://doctorrajmohan.blogspot.com/2011/05/blog-post.html-
அந்த கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தை இன்று நண்பர்களுக்கு பகிர்கிறேன்
உங்கள் வலை தளத்தை நான் படித்த வாசகன் என்ற முறையில் பாராட்டுக்கள் கோடி ..
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ..
இன்றைய கட்டுரையை நான் வன்மையாக மறுக்கிறேன் ..
· தேனில் -மகரந்த தூள்கள் இருப்பதில்லை (உங்களது தகவலுக்காக இந்த தளத்தை பாருங்கள்http://www.benefits-of-honey.com )
· தேன் எளிதில் செரிக்ககூடியது -ஆயுர்வேதம் சொல்கிறது -தேனின் குணம் யோகவாகி -அதாவது அது எதனுடன் சேர்கிறதோ அதுவாகி -சேர்ந்த பொருளின் வீர்யத்தை கூடும் குணம் ..பல்வேறு ஆயுர்வேத குழந்தை வைத்திய முறைகளில் மருந்துகளை தேனில் /தாய்பாலில் கொடுக்க சொல்கிறது ..
· நல்ல தேன் அலர்ஜியை உண்டாக்குவதே இல்லை -அலர்ஜியை சரிசெய்யும் -அலர்ஜி உண்டு பண்ணும் காரணிகளை சரி செய்யும் (தங்களது மேலான தகவலுக்காகhttp://bio.waikato.ac.nz/honey/honey_intro.shtml-என்ற தளத்தில் பாருங்கள் தேன் கிருமி நாசினியாகதான் வேலை செய்கிறது என்பதற்கான அடுக்கடுக்கான தகவல்கள்
· உங்களால் நிரூபிக்க முடியுமா ? தேன் கொடுத்ததால் தான் பொட்டுளிசம் வந்தது என்று -பால் ,பால் பௌடர்களிலும் வரும் என்று பி பி சி சொல்கிறதே -அதற்கான தகவலுக்காகhttp://news.bbc.co.uk/2/hi/health/1491033.stm-மட்டுபாலிலும் இந்த பாக்டீயர்யா இருக்கத்தானே செய்கிறது
உங்கள் தகவல்கள் -மேலை நாட்டு காரர்களுக்கு பொருந்தும் -தேனை குழப்பி -பிசாவை முக்கி ,பெப்சியை ஒருவயதுக்கு குழந்தைக்கு கொடுக்கும் பழக்கம் எல்லாம் .எங்கள் தாயமார்களுக்கு தெரியும் எந்த அளவில் ,எதனுடன் தேனை தரவேண்டும் என்று ..பாட்டிமார்கள் இல்லாத /குழந்தை வளர்ப்பே தெரியாதர்களிட.ம் வேண்டுமானால் சொல்லலாம் .நீங்கள் சொன்ன விஷயத்தை .
அளவறிந்து தேவை கருதி மருந்துடன் ஆறுமாததிற்குள் உள்ள குழந்தைகளுக்கும் ,ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவுடன் தேவை கருதி தரலாம் ..
தேனில் பல கலப்படங்கள் உள்ளது -அது வேண்டுமானால் உண்மை ..
நண்பரே ..உங்கள் கட்டுரையை விமர்சிக்க நான் எத்தனிக்கவில்லை -தேன் நமது பாரம்பரிய உணவு,பெரியவர்களை விட சிறியவர்கள் தான் நிறைய உபயோகிக்கிறார்கள் ..பயம் ஏற்படுத்தும் வகையில் உங்கள் கட்டுரை அமைந்தமையால் இந்த பின்னூட்டம் ..தவறு இருந்தால் சுட்டிகாட்டவும் ,மன்னிக்கவும் .
நண்பரே உங்களது கட்டுரைகள் அனைத்துமே சிறந்தது ,எந்த குறையும் இல்லை ,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த நெருடலான கட்டுரையை மட்டுமே எதிர்த்தவனாக ..மென் மேலும் சேவை புரிய பாராட்டுக்களுடன் ..சின்ன குழந்தைகள் லெஸ் ,குர் குரே போன்ற உணவுகளால் ஆபத்தை பற்றி எழுத விண்ணப்பித்தவனாக ..ஆயுர்வேத மருத்துவன் ..எனது தளம் ஆயுர்வேத மருத்துவம்
ஆயுர்வேத மருத்துவம்
ஆயுர்வேத மூலிகைகள் ,ஆயுர்வேத சிகிட்சைகள் ,, ஆயுர்வேத சித்த வர்ம பஞ்சகர்ம யோகா அக்குபஞ்சர் தொடர்பான கட்டுரைகளுக்கு,
Don't give honey to children younger than 1 year because of the risk of infant botulism, a rare but serious form of food poisoning. So just avoid to children younger than 1 year. - Dr.Brent A. Bauer,M.D., Department of Internal Medicine and director of the Department of Internal Medicine
Delete