Skip to main content

Posts

Showing posts from March, 2015

"ROHYPNOL" மாத்திரை என்பது,,, காம வெறியர்களின் புதிய ஆயுதம்...!!!

பெண்களே உஷார்....!!!???இது ஒரு எச்சரிக்கை பதிவு... லைக் , கமெண்ட் செய்யாமல்,,, அதிகப் படியாக ஷேர் செய்யவும்..."...Posted by தகவல் அறியும் உரிமை பக்கம் on Sunday, March 29, 2015

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..! பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்ப...Posted by தகவல் அறியும் உரிமை பக்கம் on Friday, March 27, 2015

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...Posted by தகவல் அறியும் உரிமை பக்கம் on Monday, March 30, 2015

இனி குடையை மறக்க மாட்டீங்க...!

இனி குடையை மறக்க மாட்டீங்க...!
குடையை மறந்து வைத்து விட்டு, அதன் பிறகு வருந்தும் அனுபவம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. ஒவ்வொரு முறையும் குடையை மறக்காமல் இருக்க வேண்டும் என என்ன தான் உறுதி எடுத்திக்கொண்டாலும் மறதி வென்று வெறுப்பேற்றலாம்.
இந்த மறதி பிரச்னையை வெல்வதற்கான வழியாக குடையே தன்னை நினைவுபடுத்திக்கொள்ளும் சின்ன நடைமுறை அற்புதத்தைதான் 'டெவேக் அலர்ட் 'எனும் இந்த கிக்ஸ்டார்ட்டர் குடை சாத்தியமாக்குகிறது. அதுமட்டுமின்றி நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை, இந்த கேள்வியை கேட்டு, குடை உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியை உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறது. குடை எதற்கு நம்முடன் பேச வேண்டும்? அதனை மறந்துவிட்டுச்செல்லாமல் நினைவூட்டத்தான்! ஆம், கொட்டும் மழையிலோ கொளுத்தும் வெய்யிலிலோ எடுத்துச்செல்லும் குடையை மறக்காமல் திரும்ப எடுத்து வருவதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டதாக இந்த நவீன குடை உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி? இந்த குடையின் கைப்பிடியில், சின்னதாக ப்ளுடூத் வசதி கொண்ட அருகாமை உ…

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந…

டான்சிலுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா?

சிறு குழந்தைகளுக்கு (Tonsils, Adenoids) எனத் தொண்டையில் இருக்கிற உறுப்புகள் பெரிதாக வாய்ப்பு உண்டு. இதற்குக் காரணம் தொற்றுக் கிருமிகள். பல நேரங்களில் இது அறிகுறிகளைக் காட்டுவது இல்லை. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமமும், ஒரு சிலருக்கு உணவை விழுங்குவதில் சிரமமும், தொண்டை வலியும், காது வலியும் வரும். குறட்டையும் ஏற்படலாம். டான்சில், அடினாய்டு என்பவை நிணநீர் தொகுப்பு. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் உருவாக்குகின்றன. பாக்டீரியாவோ, வைரஸோ தொண்டையின் வழியாக உடலுக்குள் செல்லாமல் துவாரபாலகர்களைப் போல இவை பாதுகாக்கின்றன. தொண்டையின் உள்ளே இரண்டு பகுதிகளில் டான்சில்ஸ் என்னும் உறுப்பு உள்ளது. அடினாய்டு என்ற உறுப்பு சற்று மேற்புறமாக, பின்னால் உள்ளது. பிரச்சினைகள் வாயைத் திறந்து பரிசோதித்தால் டான்சில்ஸை பார்க்கலாம், அடினாய்ட்ஸை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் இந்த டான்சில்ஸ், அடினாய்ட்ஸ் வீக்கம் வரலாம். Pharyngitis என்ற தொண்டை வலியாலும் இது வரும். மூக்கடைப்பு ஏற்படலாம். இந்த அழற்சி மாறிய பிறகு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். தொண்டை வலி, தொண்டை…

உடல் பருமன் ஏற்படுவது ஏன்?

இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டில் உலக அளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தவர்களில் உடல் பருமனாக இருந்தவர்கள்தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது என்று வருந்துகிறது உலகச் சுகாதார நிறுவனம். 2007-ம் ஆண்டு எடுத்துள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேருக்கு உடல் பருமன் (Obesity) பிரச்சினை உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அது எச்சரித்துள்ளது. எது உடல் பருமன்? ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI). இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு என்று பொருள்; 18.5 முதல் 23.9 -க்குள் இருந்தால், சரியான உடல் எடை. 24 – 29.9 என்று இருந்தால், அதிக உடல் எடை; 30-க்கு மேல் என்றால் அது உடல் பருமனைக் குறிக்கும். இது பெரியவர்களுக்கான அளவு. காரணம் என்ன? உடல் பருமனுக்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு உடல் பருமன் இருக்குமானால், மரபுரீதியாக அடுத்த தலைமுறைக்கு இத…

எறும்புகள் தூங்குவதே இல்லை