இனி குடையை மறக்க மாட்டீங்க...!

இனி குடையை மறக்க மாட்டீங்க...!
குடையை மறந்து வைத்து விட்டு, அதன் பிறகு வருந்தும் அனுபவம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. ஒவ்வொரு முறையும் குடையை மறக்காமல் இருக்க வேண்டும் என என்ன தான் உறுதி எடுத்திக்கொண்டாலும் மறதி வென்று வெறுப்பேற்றலாம்.

இந்த மறதி பிரச்னையை வெல்வதற்கான வழியாக குடையே தன்னை நினைவுபடுத்திக்கொள்ளும் சின்ன நடைமுறை அற்புதத்தைதான் 'டெவேக் அலர்ட் 'எனும் இந்த கிக்ஸ்டார்ட்டர் குடை சாத்தியமாக்குகிறது. அதுமட்டுமின்றி நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை, இந்த கேள்வியை கேட்டு, குடை உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியை உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறது.
குடை எதற்கு நம்முடன் பேச வேண்டும்?
அதனை மறந்துவிட்டுச்செல்லாமல் நினைவூட்டத்தான்! ஆம், கொட்டும் மழையிலோ கொளுத்தும் வெய்யிலிலோ எடுத்துச்செல்லும் குடையை மறக்காமல் திரும்ப எடுத்து வருவதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டதாக இந்த நவீன குடை உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி?
இந்த குடையின் கைப்பிடியில், சின்னதாக ப்ளுடூத் வசதி கொண்ட அருகாமை உணரும் சிப் இருக்கிறது. இந்த சிப் சதா உங்கள் ஸ்மார்ட்போனுடன் தொடர்பில் இருக்கும். அதாவது நான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்.

Comments

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?