30 September, 2011

காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!


காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்துவிடுவாரோ என்று! (சரிதானே நல்லநேரம் சதிஷ்குமார்) ஆனால் அமெரிக்காவிலும்,கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங் என்பது ஒரு பாப்புலர் ஸ்போர்ட். காக்கைகளுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக சுட்டுத் தள்ளுகிறார்கள்.

கோர்விடே என்னும் குடும்பத்தைச் சார்ந்த காக்கைகளில், மூன்று இந்திய இனங்கள் இங்கு பிரபலம்! அதில் முழுக் கருப்பில் இருக்கும் பெருங்காக்கை, மலைப்பிரதேசங்களோடு சரி. இவைகளுக்கு ஆயுசு கெட்டி 70 வருட ரெக்கார்டு கூட இருக்கிறது. அண்டங்காக்கைகள் கிராமபுறத்திலும் அதை ஒட்டிய வனப்பிரதேசங்களிலும் பிரசித்தம்! இங்கு பிற விலங்குகளால் கொல்லப்பட்டு கிடக்கும் பிரேதத்தின் இருப்பிடத்தை இலை பறக்கும் திசையை வைத்துக் கண்டறிகிறார்கள்! நாம் எங்கும் எப்போதும் பார்க்கும் வீட்டுக் காக்கைகளுக்கு கழுத்து மட்டும் கிரே நிறம்!
மேலை நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காக்கை இனங்கள் இருக்கின்றன். வடமெரிக்க வகை, மீன் காக்கை, புளோரிடா வகை, இங்கிலீஷ் பிளாக் என்று பற்பல வெரைட்டிகள்! இதில் ஹூடட் காக்கை, சத்தியமாக வெள்ளை நிறத்தில் தான் இருக்கிறது!
ஈகோ இல்லாமல் ஒற்றுமையாய் வாழ்வதில் இரையைப் பகிர்ந்து உண்பதிலும் காக்கைகளுக்கு நற்பெயருண்டு. எங்கேனும் சிதறிக் கிடக்கும் இரையைப் பார்த்துவிட்டால், தன் சகாக்களை அழைத்த பிறகே உட்கொள்ளும். இவை பெரும்பாலும் மனிதர்களை, எவ்வளவு ஆசையாக சனிகிழைமையில் உணவு வைத்தாலும் நம்புவதில்லை. மனிதன் தாக்கி விடுவானோ என்று, அவநம்பிக்கையோடு கள்ளப்பார்வை பார்த்தபடியே இரை பொறுக்கும்.
காக்கைகளின் டைனிங் ஐயிட்டங்கள் இன்னதென்றில்லை.எச்சில் சாதத்திலிருந்து மனிதன் கழித்தொதுக்கும் அனைத்து கிச்சன் வேஸ்டேஜ் வரை எதையும் உட்கொள்ளும். தவிர எலி, பல்லி, ஒணான், தவளை, வெட்டுக்கிளி போன்ற சிறுபிராணிகள் எல்லாவற்றையும் நாள் கிழமை பார்க்காமல் வெளுத்துக்கட்டும். பிற இனத்து முட்டைகளை திருடி சாப்பிடுவதில் கில்லாடிகள்! இறந்து கிடக்கும் பிணங்களைக் கூட இவை விட்டுவைப்பதில்லை. ஸ்கேவெஞ்ஜர்!
ஏதேனுமொரு மின் கம்பத்திலோ அல்லது முற்றத்திலோ காக்கைகள் ‘ லாலிபாப்புடன் சினேகமாய் அமர்ந்திருக்கும்போது கூட, இவைகளின் கண்கள் மட்டும் கீழே உற்று நோக்கிக் கொண்டிருக்கும். பார்வை படா ஷார்ப். சன்னஞ்சிறு ஜீவன்களின் இயக்கத்தைக்கூட எளிதில் உணர்ந்து டூமில் கேட்ச் பிடித்து விடும்!
இவை தம் இருப்பிடத்திலிருந்து அதிகாலையில் திரவியப் பயணம் மேற்கொள்ளும்போது, கோடு போட்டாற்போல நேர்கோட்டில்தான் பயணிக்கும்! மாலையில் ரிட்டர்ன் ஜர்னியும் இப்படியே. இடையில் இடவலம் திரும்புதல் கிடையாது. இதனால் தான் ஆகாய தூரத்தை அளப்பதற்கு அளவு கோலாக ‘ க்ரோஃபிளைஸை வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக காக்கைகள், பகற்பொழுதில் இரைதேடும் யாத்திரையை, தம் இணையுடனோ அல்லது மற்றும் சில உறவுக் காக்கைகளுடனோ ஒரு பிக்னிக் மாதிரி கழிக்கின்றன. இப்படி இவை எத்தனை தூரம் வந்துவிட்டாலும், இரவுப் பொழுதைக் கழிக்க தம் இருப்பிடத்திற்கே மீண்டு விடுகின்றன. இந்த இருப்பிடம் என்பது பெரும்பாலும் ஒரு மரங்கள் அடர்ந்த பகுதியாகவே இருக்கும். இங்கேவந்து சேர்ந்தவுடன் பெரும் ஆரவாரத்துடன் ஒன்றுக்கொன்று தம்மை அறிவித்துக் கொண்டு ஓய்வெடுக்கத் துவங்கும்.
காக்கைகளின் காதல்களில் நிறைய சுவாராஸ்யங்கள் உண்டு! டீன் ஏஜ் காக்கைகள், கல்லூரி திறக்கும் ஜூன்,ஜூலை மாதங்களில்தான் ஜோடி சேர்கின்றன. கொட்டை போட்ட பழஞ்ஜோடிகளும், தம் காதலை இப்பருவத்தில்தான் புதுப்பித்துக் கொள்கின்றன. இப்படி இவை ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால், ஆயுளுக்கு அதே ஜோடிதான்!
காதல் சீசனில் ஆண் காக்கை தன் பழைய மனைவியிடம் புதிய காதலைத் துவங்கும். இத்தருணத்தில் ஆண் காக்கை கிடைக்கின்ற சுவையான இரையை விழுங்காமல் கொண்டுவந்து, மனைவிக்கு முத்தமிட்டவாறே ஊட்டி விடும். சட்சட்டென்று சிறகு கோதலும், சிறு துழாவலுமாய்  மனைவியைச் சிலிர்ப்பூட்டும். கணவன் காதலை புரிந்து கொண்ட மனைவி, தன் முரட்டுக் குரலை வெவ்வேறு பிட்சிலும், வெவ்வேறு ரிதத்திலும் கரைந்து காட்ட கணவன் காக்கை புளகாங்கித்துப் போகும்.
அபரிமித சந்தோசத்தில் காக்கை அலை அலையாய் ரெக்கை வீசி சட்டென்று மேலே பறக்கும். திடீர் திசைமாற்றி அம்புபோல் கீழே பாயும். பின் ஸ்லோமோஷனில் மனைவி அமர்ந்திருக்கும் கிளையை அடையும்.
இந்த ஏரோபாட் வித்தைகள்க் கண்ணுற்று திகைத்துப் போயிருக்கும் மனைவியை, இரவுப் போர்வைக்குள், இறகின் நிறமும், கதகதப்பும் காட்டிக்கொடுக்காமல் ஒத்துழைக்க ஆண் காக்கை யாருக்கும் தெரியாமல் அந்தரங்க இல்லற வாழ்வில் ஈடுபடும்.
அடுத்து நிலமட்டத்திலிருந்து 20-30 அடி உயரத்தில் டிரைபாட் ஸ்டாண்ட் மாதிரி இருக்கும் கிளைப் பிரிவுகளில் சிறு சிறு குச்சி, நார்,பஞ்சு போன்றவற்றைக் கொண்டு ஒரு அவசரக்கூட்டை அமைக்கும். இக் கூட்டின் குழிவில் 3-6 முட்டைகளையிட்டு பெட்டை அடைகாக்க, ஆண் இரை கொணர்ந்து உதவும்!  முட்டைகள், நீல அல்லது பச்சைப் பின்னணியில் மண்ணிறப் புள்ளிகளைக் கொண்டவைகள்!  முட்டையிலிருந்து வெளிவந்து ஆறு வாரகாலத்துள், குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறக்கத் தயாராகிவிடுகின்றன.

இந்த இன்டெலிஜண்ட் காக்கைகளை பெட்பேர்டாக, பல மேலை நாட்டினர் வளர்க்கிறார்கள். இக்காக்கைகள் தம் முரட்டுக் குரலை மறந்து விட்டு, மனிதர்களைப் போல மென்மையாக மிமிக்ரி கூட செய்கிறதாம்! – டாக்டர். ஆர். கோவிந்தராஜ்

13 comments:

 1. நாம் தினமும் பார்க்கும் பறவைதான் என்றால் அதுபற்றி எதுவுமே தெரியாது இருக்கிறோம் என்று இதைப் படிக்கும் போதுதான் தெரிகிறது... நன்றி...!

  ReplyDelete
 2. சார், காக்கை கூட்டில் குயில் வந்து முட்டையிட்டு விட்டுச் செல்லும்னு சொல்வாங்களே அது உண்மையா?

  ReplyDelete
 3. அருமையான விளக்கங்கள் :-)

  ReplyDelete
 4. காக்கைகளில் இத்தனை வகைகளா ? வெள்ளைக்காக்கை என்றா ஒன்று உண்மைலயே இருக்குதுங்கிறதும் ஆச்சர்யம்!

  நன்றிங்க:))

  ReplyDelete
 5. Elaam sari sir male kaakkaa eppadi irukkum female kaakka eppadi irukkum ...en ponnu ketta kelvikkum innum enakku vidai theriyaathu ..

  eppadi kandupidikkanum athai sollunga sir

  ReplyDelete
 6. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  சார், காக்கை கூட்டில் குயில் வந்து முட்டையிட்டு விட்டுச் செல்லும்னு சொல்வாங்களே அது உண்மையா?
  மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்.

  சூதறியாத காகம் குயிலின் முட்டையயும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும். குயிலை பற்றிய பதிவில் சொல்லலாம் என்ற விசயத்தை போட்டு வாங்கிட்டீர்களே, பன்னிகுட்டி ராமசாமி!

  ReplyDelete
 7. இம்சைஅரசன் பாபு.. said...

  Elaam sari sir male kaakkaa eppadi irukkum female kaakka eppadi irukkum ...en ponnu ketta kelvikkum innum enakku vidai theriyaathu ..

  eppadi kandupidikkanum athai sollunga sir
  நீங்கள் தான் இம்சை அரசன் என்று நினைத்தேன்,உங்கள் பெண் கூடவா?
  பெண் காகத்தின் கழுத்தில் வெளுப்பு வளையம் ஆதிகம் இருக்கும்! ஆண் காகத்தில் கழுத்தில் வெளுப்பு நிறம் குறைவாக இருக்கும்! இதுவும் லோக்கல் காகத்திற்குதான்! வெளிநாட்டு காகம் ஆணா பெண்ணா என்று வெளிப்படையாக பார்த்து கண்டுபிடிக்கமுடியாது!

  ReplyDelete
 8. ha ha ...romba nandri sir ..unamaileye vidai theriyaathu ..thai vaitthu naan oru pathive eluthi irukken ..mudinthaal paarunga

  http://imsaiarasan-babu.blogspot.com/2010/11/blog-post_21.html

  ReplyDelete
 9. இம்சைஅரசன் பாபு..
  அந்த பக்கத்தை பார்த்தேன். காக்காவை வைத்து இப்படி ஒரு கடியா! அருமை!!

  ReplyDelete
 10. வணக்கம்.

  நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  இன்று தான் ஒரு பின்னூட்டத்தின் மூலம் கண்டு உள்ளே வந்தேன்.

  கூகுள் பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

  4 தமிழ் மீடியா தளத்திற்கு உங்கள் தளத்தை அறிமுகம் செய்துள்ளேன்.

  நிறைய எழுதுங்க.

  ReplyDelete
 11. JOTHIG ஜோதிஜி! வணக்கம்.தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்!!

  ReplyDelete
 12. நல்ல பதிவு..
  பின்னூட்டமும் முழுவதும் படித்தேன். தெரியாத தகவல்கள்.
  நன்றி, பதிவிட்டமைக்கு..

  ReplyDelete
 13. சுவையான தகவல்களை அருமையாக தெரிவித்து உள்ளீர்கள். சனிக்கிழமை, அம்மாவாசை என விரத நாட்களில் காக்கைக்கு உணவிடாமல் எனக்கே உணவு கிடையாது எனும் எனது மனைவிக்கு பிடித்த விஷயம்
  /இப்படி இவை ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால், ஆயுளுக்கு அதே ஜோடிதான்!/ இதுதான்.

  ReplyDelete

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...