சிலசமயங்களில் அவசரமாக பாண்டை கழட்டும்போது ஜிப்பில் அது மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர நிலை ஆகும் , இப்படியும் நடக்குமா என்பவர்கள் தங்கள்
(இந்த இடத்தில் மாட்டிக் கொண்ட புகைப்படம் வைக்கப்பட்டது. அட்மின் டாக்டர்.சந்திரசேகரன் சென்ஸார் செய்துவிட்டார்)
ஆணுறுப்பின் முன் தோலே பெரும்பாலும் மாட்டிகொள்ளும், அது ஜிப்பின் பல்லுக்கு இடையே மட்டும் உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுபானுக்கும் இடையே உள்ளதா என்று கவனமாக பார்க்க வேண்டும் .
பல்லுக்கு இடையே மட்டும் இருந்தால் :
முதலில் ஜிப்பை பான்டில் இருந்து கத்தரித்து எடுக்கவேண்டும் . (பான்ட் போனால் போகட்டும் போடா! அந்த முக்கிய பகுதியை காப்பாற்றினால் போதும்! ) இப்பொது முன் தோளோடு ஜிப் மட்டுமே இருக்கும் பிறகு 1 என்ற இடத்தில கட் செய்யவேண்டும் . அதன் வழியே இழுபனை விடுவிக்க வேண்டும் . அதன் பின் பல் பகுதியை விரித்தால் தோல் விடுபடும்
![]() |
பல்லுக்கும் இழுப்பனுக்கும் இடையே மாட்டிக்கொண்டால் :

இந்த முறையில் கட்டிங் பிளேயர் கொண்டு இரு முனைகளையும் கட் செய்த பிறகு இழுபானின் இரு புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம் தளர்வாகி விடுபடும் .

ஒரு பெரிய ஸ்க்ரு டிரைவரை இழுபனின் இரு முனைகளுக்கு இடையே விட்டு நெம்பவேண்டும்.சாதாரணமாக முன் தோல் ஒரு புறமே மாட்டி இருக்கும் , எனவே அதற்கு எதிர் புறம் நெம்புவதால் எளிதில் விடுபடும் .
இன்னொரு முறையில் இழுப்பானின் நடு பகுதியை கட்டிங் பிளேயர் கொண்டு நறுக்குவதன் மூலம் செய்யலாம் , இது மிக கவனமுடன் செய்ய வேண்டும் . ( ஏன் என்று உங்களுக்கே தெரியும்)

உங்களால் எந்த ஒரு முறையிலும் முடியவில்லை எனில் உடன் ஒரு ஆண் மருத்துவரை அணுகவும் . குழந்தையாக இருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் காண்பிக்கலாம்.பாண்டில் இருந்து ஜிப்பை மட்டும் வெட்டில் பிரித்து டாக்டரிடன் சென்றால் அதிக சேதாரத்தை தவிர்க்கலாம்.
இதை விட அவசரப்படாமல் ஜிப்பை திறந்தால் எல்லாமே இன்பமே!
-நன்றி டாக்டர்.ராஜ்மோகன்.
பின்குறிப்பு இதுபோன்ற பின்னூட்டங்களை இடவேண்டாம்!
1) ஜிப்பை எப்படி திறப்பது என்பது பற்றி கூட பதிவுகள் வரும் போல் தெரிகிறது.
2) ஜிப்பிற்கு சேதாரம் இல்லாமல் எடுக்கமுடியாதா?
3)_ பெண் டாக்டரிடம் சென்றால் என்ன? விளக்குங்கள் டாக்டர்!
4) ஒழுங்கா ஜட்டி போட்டிருந்தால் ஏன் நடக்கிறது?
5) ஜிப்பில் மாட்டிகொண்டதை நாமே எடுக்கவேண்டுமா? மனைவியின் உதவியை நாடலாமா?
-டாக்டர்.என்.சந்திரசேகரன்
அன்பிற்கு உரிய டாக்டர் அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteதங்களுடைய “ பேண்ட்டில் ஜிப் மாட்டிக்கொண்டால் அபாரம்” இதைதாங்கள்இன்னும் முன்னதாகவே எழுதியிருந்தால் அநேக நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்
அன்புடன் டாக்டர். அ.முருகன் கோபிசெட்டிபாளையம்
உண்மையில் நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.ரசித்து படித்தேன்.இப்படி தலைப்பு வைத்து எழுத முடியுமா என்பது ஆச்சர்யம்
ReplyDeletethanks
ReplyDeleteIdhenna periya vithay?
ReplyDeletezip'oda top edge'a izhuthu pudichuttu, zip pudiya varukk'nu izhuthaa seconds dhaan vali. enna light'aa mun thol kaayamaagum, but 2 naal'la sariyaayidum!
Edhukku pant'a cut pannanum? Namma item'a paakradhukku, doctor'ku kudukkanum?
Doctor'ta poaravanga, namma item paathadhukku, avarta irundhu fees vaangikkoanga!