புதிதாய்ப் பிறந்த ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை கூட நாள் ஒன்றிற்கு 1 முதல் 3 மணி நேரம் வரை அழும். முதல் முறையாக தாயாகவோ தந்தையாகவோ ஆகியிருக்கும் உங்களுக்கு குழந்தை எதற்காக அழுகிறது என்பதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கும். பசியா, ஜலதோஷமா, தாகமா அல்லது தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா, எதற்காக அழுகிறது குழந்தை? குழந்தைகள் அழுவதற்கான பொதுவான காரணங்கள் என்ன, அவர்களை அமைதிபடுத்துவது எப்படி என்பதைப் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தையை மேலும் மேலும் நன்கு புரிந்துகொள்ளும் போது அதன் அழுகையின் தன்மையை வைத்து குழந்தைக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
தேவை உணவு ;-
குழந்தை அழுவதற்கான பொதுவான காரணம் பசி தான். குழந்தையின் வயிறு சிறியதாகையால் அதனால் அதிகம் சாப்பிட முடியாது. குழந்தை பசியோடு இருக்கக் கூடும் ஆகவே அழுதால் அதற்கு பால் புகட்டுங்கள்.
சூழ்நிலை:-
சில குழந்தைகள் தங்களது நாப்கின்கள் மாற்றப்படுவதைப் பற்றி அதிகம் கவலைப்படாது. சில குழந்தைகள் தங்கள் தோல் லேசாக நமைச்சல் எடுத்தாலே அழத் தொடங்கிவிடும். சில சமயங்களில் நாப்கின்கள் இறுக்கமாக பற்றியிருக்கிறதா அல்லது குழந்தையின் உடைகள் ஏதாவது அசௌகரியத்தை தந்திருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
இதமாக இருக்க வேண்டும் (அதிக சூடோ, அதிக குளிரோ கூடாது):-
உங்கள் குழந்தை தனது மெத்தையில் படுத்திருக்கும் போது மிகவும் சூடாகவோ அல்லது சில்லென்றோ இருக்கிறதா என்பதை அதன் வயிற்றை தொட்டு சோதித்துப் பாருங்கள் (காலையோ கையையோ தொட்டுப் பார்க்க வேண்டாம். அது எப்போதும் சற்று சில்லென்றே இருக்கும்). குழந்தை சூடாக இருந்தால் போர்வையை விலக்கி விடுங்கள். சில்லென்றிருந்தால் போர்வையை போர்த்துங்கள். குழந்தை இருக்கும் அறையின் வெப்பநிலையை 64 டிகிரி பாரனீட் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
செல்லத்தின் செல்லமான ஆசைகள்;-
சில சமயங்களில் உங்கள் குழந்தை தன்னை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பக்கூடும். குழந்தையை முதல் சில மாதங்களுக்கு அதிகமாக தூக்கிவைத்திருப்பதால் குழந்தையை ''பாழாக்கி'' விடுவோம் என்று கவலைப்பட வேண்டாம். குழந்தையை மடியில் கட்டிக் கொண்டு ஆனால் கைகளை சுதந்திரமாக வைத்த படி உங்கள் வேலைகளை கவனிக்க ஏற்படியான தோள்பட்டை ஆடைகள் இருக்கின்றன.
தேவை ஓய்வு மற்றும் அமைதி !
தேவை ஓய்வு மற்றும் அமைதி !
பச்சிளங் குழந்தைகளால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது. ஆகவே, ''இனி என்னால் தாங்க முடியாது'' என்று கூறுவதாகவும் அதன் அழுகை இருக்கலாம். அமைதியான இடத்திற்கு குழந்தையை எடுத்துச் செல்லுங்கள், சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தை தூங்க ஆரம்பிக்கும்.
உடல் நலம் சரியில்லை!
உடல் நலமில்லாத குழந்தை வழக்கத்திற்கு மாறான தொனியில் அதிக சத்தத்துடனோ அல்லது ஒரு வித அவசரத் தொனியுடனோ அழும். அப்படி அழும் போது டாக்டரிடமோ அல்லது தாதியிடமோ குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். குழந்தை அழும் போது மூச்சுத் திணறல் இருந்தாலோ, வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் இருந்தாலோ உடனே டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.
ஏதோ தேவை...ஆனால் சொல்லத் தெரியவில்லை:-
பல பச்சிளங் குழந்தைகள் காது வலி அல்லது வயிற்று வலியின் காரணமாக தொடர்ந்து அழக்கூடும். இதை சமாளிப்பது கடினம். உடனே தீர்க்க எந்த மாயாஜாலமும் இல்லை. குழந்தை மருத்துவர்தான் உதவி செய்யவேண்டும்.

பயனுள்ள பல மருத்துவக் குறிப்புகளை அறிந்துகொண்டேன்..
ReplyDeleteதொடர்க.
பயனுள்ள பல மருத்துவக் குறிப்புகளை அறிந்துகொண்டேன்..
ReplyDeleteதொடர்க.