சிறு நீர் அடிக்கடி கழிவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். நீரிழிவு, புரஸ்ரேட் சுரப்பி வீக்கம், மனம் அமைதியின்மை, சிறுநீரில் கிருமித் தொற்று, பிரஸர் மற்றும் இருதய நோய்களுக்கு உட்கொள்ளும் சில மாத்திரைகள் போன்ற பல.
" அடிக்கடி சிறுநீர் போகுது ஆனால் அதிகம் போவதில்லை"
" சிறுநீர் விட்டிட்டு வந்தாலும் முழுக்க போன உணர்வில்லை- கொஞ்ச நேரத்திலை திரும்பப் போக வேணும்."
"போக வேணும் போல இருக்கும், போனால் டக்கென போகாது கொஞ்சம் முக்கினால்தான் போகும்"
"முன்பு பொல முழுவீச்சில் போகாது. மெதுவாகத்தான் போகும். சிலவேளை காலடியில் சிந்துகிற மாதிரி மிக மெதுவாகப் போகும்."
மேற்கூறிய அந்த அறிகுறிகள், பொதுவாக புரஸ்ரேட் சுரப்பி வீக்கத்தால் ஏற்படுவன. புரஸ்ரேட் என்பது மூத்திரபைக்குக் கீழே, சிறுநீர் பிரிந்து வரும் குழாயைச் சுற்றியிருக்கும் ஒரு சுரப்பி. விசேசமாக ஆண்களில் மாத்திரம் இருப்பது. வயதாக, ஆக அது சற்று வீக்கமடைவதுண்டு. அப்படி வீங்கினால் சிறுநீர் சுலபமாக வெளியேறுவது தடைப்பட்டு மேற் கூறிய அறிகுறிகள் வரக்கூடும்.
டாக்டர் கையுறை அணிந்து மலவாயின் ஊடாக விரலைச் செலுத்தி புரஸ்ரேட் வீக்கம் இருப்பதை உறுதிப்படுத்துவார். அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை ஆகியவையும் புரஸ்ரேட் வீக்கத்தை துள்ளியமாக உறுதி செய்யும்.
"இது புற்று நோயாக இருக்குமோ" என்பதையும் உறுதிசெய்யவேண்டிருக்கும். ஏனேன்றால் புரஸ்ரேட் வீக்கம் வயதாகும் போது ஏற்படும் (Benign Prostrate Hypertrephy) சாதாரண வீக்கமும் உண்டு அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம். மலவாயில விரல் விட்டுச் பரிசோக்கும் போது அவ்வீக்கம் மென்மையாகவும் வழுவழப்பாகவும் இருந்ததால் புற்று நோயாக இருக்க வாய்ப்பில்லை என மருத்துவர் ஆறுதல் தருவார். இருந்த தாலும் ஆன்கோ பேக் இரத்தப் பரிசோதனை செய்துவிடலாம் என்றால் செய்துகொள்வது நல்லது. புற்று நோய் இல்லை என உறுதி படுத்திகொண்டால் நல்லதுதானே!
புரஸ்ரேட் பிரச்சினையைக் குணப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அறுவை சிகிச்சை, மற்றது மாத்திரைகள்!
மாத்திரைகளை குறைந்தது ஆறுமாதம் உபயோகித்தால்தான் நல்ல முன்னேற்றம் தெரியும்.மேலும் தொடர்ந்து உபயோகிக்க நேரிடும், சிறு நீர் வாயிலூடாக குழாயைச் செலுத்தி, வெளிக்காயமின்றி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆபத்தற்ற, உடலுக்குத் துன்பம் விளைவிக்காத அறுவை சிகிச்சை, நோயின் நிலைக்கு உகந்த சிகிச்சை முறையை டாக்டர்தான் முடிவுசெய்வார். நீங்கள் ஃபீஸ் மட்டும் ரெடி செய்துவிடுங்கள்!!

No comments:
Post a Comment