மருந்தாக பயன்படும் காட் மீன்கள் -சிறப்பு தகவல்கள்!

மனிதர்களுக்கு விட்டமின் A, D மற்றும் E குறைவு ஏற்பட்டால் காட் லிவர் ஆயில் தான் மருந்து. இந்த மருந்தை நமக்கு தருவது காட் என்னும் ஒருவகை கடல் வாழ் மீனினம். இந்த மீன்களுக்கு பகைவர்கள் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள். பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து இவற்றை பாதுகாக்க இயற்கை காட்மீன்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு - MHC என்னும் ஒரு வகை அணுக்கள், MHC Class I ஜீன்கள் மற்றும் MHC Class II ஜீன்கள்.

இது தவிர சேதமடைந்த செல்களும் இந்த மீன்களுக்கு ஆபத்தை விளைவிப்பவை. எனவே, சேதமுற்ற செல்களை அழித்து அவற்றிலிருந்து மீன்களை பாதுகாக்க சேதமடைந்த செல்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு பின்னர் அழிக்கப்படுகின்றன. இது போன்ற செல்களை அடையாளம் காட்டுவது, MHC அணுக்களும் MHC Class II ஜீன்களும் தான். இந்த MHC அணுக்கள் மீது MHC Class II ஜீன்கள் சூழ்ந்து கொள்கின்றன. பின்னர் அவை சேதமடைந்த செல்கள் மீது சென்று ஒட்டிக்கொண்டு, சேதமடைந்த செல்களை அடையாளம் காட்டுகின்றன.

இவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட சேதமடைந்த செல்கள் பின்னர் அழிக்கப்படுகின்றன. ஆகவே, சேதமுற்ற செல்களை அழித்து மீன்களை பாதுகாப்பதில் இந்த ஜீன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த MHC Class II ஜீன்கள் இல்லாத காட் மீன்கள், அட்லாண்டிக் கடல் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சேதமடைந்த செல்களை அடையாளம் காட்டும் பணியை செய்வது எது? அதிஷ்டவசமாக இந்த வேலையை MHC Class I ஜீன்கள் செய்து வருகின்றன. இருப்பினும், MHC Class II ஜீன்களை உருவாக்க தேவையான வழிமுறைகளை கண்டுபிடிக்கவும்; அது வரையிலும் மனிதர்களுக்கு தேவையான விட்டமின்கள் A, D மற்றும் E ஆகியவற்றுக்கான மாற்று வழிகளை கண்டறியவும் விஞ்ஞானிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?