எடுங்கள் விளக்குமாரை! மனைவி உங்கள் வசம்!!

உங்கள் மனைவி சந்தோஷமாக இருக்கிறாரா?
இல்லையென்றால் அவரை மகிழ்வுறுத்துவதற்கு வழி என்ன?
சிந்திப்போம்!
மனைவியில் மிகுந்த அன்பு கொண்டவராக நீங்கள் இருக்கலாம். அவருக்கு சிறிது உடல் நிலை சரியில்லை என்றாலும் பதைபதைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று
தேவையான பரிசோதனைகளையெல்லாம் அலுக்காமல் செய்து மருந்துகள், சத்து மருந்துகள் எல்லாம் வாங்கிக்கொடுப்பவரா?


இருப்பினும் , மனைவியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண முடிவதில்லையே என்ற அங்கலாய்ப்பு!
மற்றும் சிலர் தனது மனைவியின் சௌகர்யத்திற்காக தனது தகுதிக்கு மேல் போய் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். டி.வி., ஃபிரிட்ச், மைக்ரோ அவன், வோஷிங் மெசின், பிரஸர் குக்கர் என எது தேவையென்றாலும் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுப்பார். ஆயினும், அவராலும் மனைவியின் மனதைக் கவர முடியவில்லையே புலம்பல்!
 மனைவியின் திருப்தியின்மைக்குக் காரணம் அவளது தனிமையும் பொழுதுபோக்கின்மையும்தான் என தானே நினைத்துக்கொண்டு நீண்ட லீவு போட்டுவிட்டு கோயில், குளம், சுற்றுலா, வெளிநாட்டுப் பயணம் என பலதும் முயன்றும் எந்த வித முன்னேற்றமும் இல்லை.

இப்பெண்கள் எல்லாம் எதிலும் திருப்தியடையாத தாழ்ந்த மனம் கொண்டவர்களா? என்றால் இல்லை!
லெபனானின் பெய்ரூடடில் செய்யப்பட்ட ஆய்வு உங்களுக்கு உதவலாம். ( அது லெபனான் பெண்கள்! இது தமிழ் நாட்டு பெண்கள் நம் முதுகில் மிளாகாய் அரைத்துவிடுவார்கள் என நினைக்க வேண்டாம் முயற்சி செய்து பாருங்கள்!) 1,650 திருமணமான தம்பதியர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு அது.
 • வீடு கூட்டுதல்
 • தூசி தட்டுதல்
 • துணி துவைத்தல்
 • சமையல், டீ, காஃபி தயாரித்தல்
 • படுக்கையை சுத்தம் செய்தல்
 • பாத்திரம் கழுவுதல் 
 • மனைவியின் ஆடைகளை அடுக்கி வைத்தல்
போன்ற இருபத்தைந்து வகையான வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

வீட்டு வேலைகளில் கணவன் எந்த அளவுக்கு உதவுகிறான் என்பதையும் மனைவியின் மன நிலை, குடும்ப வாழ்வில் அவளது திருப்தி அல்லது திருப்தியின்மை, அவளது கவலை போன்றவற்றோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்த்தார்கள்.

வீட்டு வேலைகளில் மிகக் குறைந்தளவே பங்களித்த கணவன்மாரின் மனைவிகள் கூடுதலாகப் பங்களித்தவர்களின் மனைவிகளைவிட,
 • 1.6 விகிதம் உள நெருக்கடியில் இருந்தார்கள். 
 • 2.96 விகிதம் கணவனோடுடனான உறவில் அசௌகரியப்படுவதாக உணர்ந்தார்கள்
 • 2.69 விகிதம் கூடுதலான கவலையோடு இருந்தார்கள். 
"வீட்டு வேலைகளில் கணவன் ஈடுபடுவதற்கும்,
மனைவியின் மன ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது"
என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முதலில் துடைப்பகட்டையை எடுங்கள்!

வீடு கூட்டுவதில் ஆரம்பித்து
ஏனைய வீட்டு வேலைகளிலும்
பங்கு பெறுங்கள்!
மனைவி மகிழ்வார். இந்த வேலையெல்லாம் நான்தானே செய்து வருகிறேன் என்றால் நீங்கள் மனைவியை வெற்றிகொண்ட மாவீரர்! உங்களுக்கு இந்த ஆலோசனைகள் தேவையில்லைதான்!!
மற்றவர்கள் உடனடியாக கடைப்பிடித்தால்
வீட்டில் என்றும் வசந்தம்தான்!

Comments

 1. தலைப்பை மிரட்டலாக வைத்தாலும் உள்ளே நல்ல விஷயம் தான் சொல்லி உள்ளீர்கள். நான் இவற்றை already கடைபிடிக்கிறேன் !!

  ReplyDelete
 2. தலைப்பை மிரட்டலாக வைத்தாலும் உள்ளே நல்ல விஷயம் தான் சொல்லி உள்ளீர்கள். நான் இவற்றை already கடைபிடிக்கிறேன் !! - மோகன் குமார்
  நீங்கள் மனைவியை வென்ற மாவீரர்! நானும்தான்!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?