13 December, 2013

மலைப் பாம்பின் இறைச்சி இனிப்பாக இருக்குமாமே?


ஆணைத் தேடிச் செல்லும் பெண் மலைப்பாம்பு 

மூவாயிரத்துக்கும் மேல் உள்ள பாம்பு வகைகளில் மலைப் பாம்புதான் அரதப் பழசுரகம்! 13 கோடியே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது! முதன் முதலில் தோன்றிய மூதாதையர்!!  விஷம் இல்லாத பாம்புகள்!
ஸ்குவாமேட்டா ( Squamata) ஆர்டரைச் சார்ந்த பைத்தோனிடே(Pythonidae) குடும்பத்தை சார்ந்த இந்திய வகை பாம்பு 19 அடி நீளத்துக்கு இருக்குமாம். ஆஸ்திரேலியாவில் 20 அடியும் தென் அமெரிக்காவின் அனகோன்டா 25 அடிக்கும் மிகாமலும் இருக்கின்றன! ஆனால் ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Pythons,) என்னும் மலைப் பாம்புதான் வாழும் பாம்புகளில் பெரியது இது 35 அடி நீளம் கூட ஒய்யாரமாக வளர்ந்துத் தள்ளும்! எடை 350 பவுண்டைத் தாண்டும் வயிற்றுப் பகுதியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மட்டும் 3.5 அடிஇருக்கும்!

பைத்தான் மொலூராஸ் (Python molurus) எனப்படும் நம்ம ரெகுலர் மலைப்பாம்பு வெள்ளையும் மஞ்சளும் கலந்த மண் நிறத்தில் இருக்கும் உடலின் மேற்புறத்தில் சதுரத் திட்டுக்கள் தலை முதல் வால் வரை வரிசையாக அமைந்திருக்கும். இதிலும் இரண்டு பிரிவு. 1. கருப்பு தலை மலை பாம்பு 2.இந்திய பாறை மலைப் பாம்பு

பர்மீஸ் (Burmese Python (Python molurus bivittatus) ) மலை பாம்பு ரகங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறதாம்! அதில் கேரமல்பர்மீஸ் ரகம் பார்க்க கொள்ளை அழகு!
 ‘மோல்டிங்எனப்படும் தோலுரித்தல் ஆண்டுக்கு ஐந்தாறு தடவை நடக்கிறது. உடலைப் போர்த்தியிருக்கும் பாலிதீன் உறை போன்ற தோலை இளம் பெண் தன் டைட்டான ஜீன்ஸ் பேண்ட்யை கழட்டுவது போல இவை கழட்டித் தள்ளுகின்றன. முதலில் மூக்குப் பகுதியில் தோன்றும் உறை நெகிழ்வை ஏதேனுவோரு கல்லிடுக்கில் அல்லது முள்ளில் சிக்க வைத்து பொலபொலவெனத் தோலுரித்து விட்டு நிர்வாணமாய்? ப்யூட்டி பார்லரில் இருந்து மேக்கப் முடித்து வெளியே வரும் பிகர் கணக்காய் வெளிப்படும் அப்புறம் சுமார் இரண்டரை மாதங்களுக்கு இந்தப் பளிச் அலங்காரம்தான்! தோலுரித்த மலைப் பாம்பு தன் மேல்டேட்டூசெய்த டிசைன் ஆக நல்ல வெளிச்சத்தில் பார்த்தால் பல நிறங்களோடு அதன் மேனி 

மலைப்பாம்பின் தோல்! அருகாமையில்!!
 அடர்ந்த காடு பகுதிகளும் ஆற்றோரப் படுகைகளும் இவைகளுக்கு பிடித்தமான வாழும் பகுதி. இவற்றில் காட்டுவாசி மலைப் பாம்புகள் ஜாலியாக மரங்களில் உயரமாக ஏறி கிளையோடு கிளையாக தொங்கி கொண்டே தூங்குவது வாடிக்கை! ஆற்றோரவாசிகள் கரையோரத்தில் மூக்கை மட்டும் வெளியே விட்டு நீருக்குள் அமிழ்ந்து கிடப்பது பழக்கம்.தேவைப்பட்டால் தண்ணீரில் அட்டகாசமாய் நீச்சலடிக்கும். மேலும் தண்ணீருக்குள் மூச்சைப்பிடித்து அரைமணி நேரம் கூட தம் புடிக்குமாம்!!
மலைப் பாம்புகள் மகா சோம்பேறிகள் ஆபத்து காலத்தில் கூட அப்படியொன்றும் வேகமாகத் தப்பிக்கமுடியாது. இரையை கண்டால் மட்டும் கொஞ்சம் வேகமாக இயக்கம் இருக்கும்

மேக்ஸிமம் அளவிற்கும் விரிக்ககூடிய தன்மையை கொண்ட தாடை எலும்புகள் இணைக்கப்படாத  வாயை பிளந்து கொண்டு தன்னுடைய பிளவு நாக்கின் (Vomeronasal organ) உணர் சக்தி, மற்றும் மோப்ப சக்தி மூலம் இரையை நோக்கி வேகமாக முன்னேறும் போது விலா எலும்புகளின் அலைஅலையான 
இயக்கத்தை பயன்படுத்தி ஒரே நேர்கோட்டில் செல்லும். அப்பொழுது துளி கூட
உடலை நெளிக்காது. இரையை நெருங்கியவுடன் தன் வால் பகுதியை வீசி 
இரையின் உடலை ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். பிடியை மென்மேலும் இறுக்குவதால் இரை சுவாசத்துக்கு ஏங்கி உயரிழக்கும்இறந்த இரையின்  உடல் முழுவதையும் ஒரு முறை நாக்கால் முகர்ந்து பார்த்து விட்டு (ஆம் பாம்புக்கு நாக்குதான் மூக்கு) படிபடிப்படியாக விழுங்கத் தொடங்கும். முன் ஜாக்கிரதையாக தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பின்  அளவற்றுச் சுரக்கும் உமிழிநீரின் உதவியோடு கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோமோஷனில் டைட்டானிக் கப்பல் போல இரை உள்ளே போய்க் கொண்டிருக்கும். உள்ளே விழுங்கப்படும் இரை தப்பி  வெளியே வராமல் இருக்க மலைபாம்பின் பல் அமைப்பு உள்ளே வளைந்து சிறப்பு ஒன்வே லாக்காக இருக்கும். இப்படியொரு  நல்ல விருந்தை முடித்துக் கொண்ட மலைப்பாம்பு இடத்தை விட்டு நகர முடியாமல் அசைவற்றுக்கிடக்கும் வலுக்கட்டாயமாக நகர வைத்தால் விழுங்கிய இரையின் கொம்புகள், நகங்கள், பற்கள் போன்ற கூரிய பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும். அதனால் தான் இரைக்குபின் அசைவற்று படுத்து கிடக்கும். மனிதர்களின் தோள்பட்டை விரிந்துள்ளதால் மலைப்பாம்புக்கு மனிதன் வேண்டாத இரை! இருப்பினும் குழந்தைகள் கிடைத்தால் இரையாக்கிவிடும். ஒரு பெண்ணை மலைபாம்பு தாக்கி விழுங்க முயற்சி செய்துள்ளது. ஏன் விஷம் உள்ள நாகபாம்புடன் கூட மலைபாம்பு மோதியுள்ளது.
மற்ற விலங்குகளை போல மலைப்பாம்புகள் தினசரி சாப்பிட்டு ஏப்பம் விட்டு அதை அன்றே ஜீரணித்து மறுபடியும் விருந்துக்கு தயாராவதில்லை. உட் கொண்ட இரையின் பருமனையும் சீசனையும் பொறுத்தே ஜீரணம் ஆகும். கோடைக்காலத்தில்  எலி, கோழி, வாத்து போன்றவை ஒரு வாரத்திலும், முயல், பெருச்சாளி, முள்ளம்பன்றி போன்றவை இரண்டு வாரத்திலும் ஆடு, மான், நரி போன்றவை மூன்று வாரத்திலும் என ஜீரணமாக மலைபாம்புகள் சார்ட் வைத்துள்ளது. அதுவரை இவைகள்
நான்டயட்என்று அருகில் வரும் இரைகளிடம் கூறிவிடும். இரை எதுவும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் கூட ஒரு மலைப்பாம்பு உயிருடன் இருக்கும்அந்த சமயங்களில் தன்னுடைய வயிறு, இதயம், அகியவற்றின் அளவு  மற்றும் ஜீரண அமிலத்தை சுருக்கி கொள்ளும் சிறப்பு வசதியை கொண்டிருக்கிறது. இரை உள்ளே நுழைந்தவுடன் மேஜிக் போல் எல்லாமே அதிகம் ஆகிவிடும்
ஒரு ஆட்டை முழுமையாக  விழுங்கும் மலைப் பாம்பு


5 முதல் 6 வயது முடிந்து விட்ட மலைப் பாம்புகளில்  இனச்சேர்க்கை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் மட்டுமே. இந்தச் சீசனில் ஈஸ்ட்ரோஜன்ஆதிக்கத்தில் இருக்கும். (இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இனச்சேர்க்கைக்கான முன் ஏற்பாடாக புதரில் அல்லது மரபொந்துகளில் புரூமேஷன் (Brumation ) தயாரிப்பு பணியை செய்யும்.) இந்த தருணத்தில்  பெண் மலைப் பாம்புக்கு துணை தேவைப்படும். இதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஆண் மலைப் பாம்பின் இருப்பிடம் தேடிச் செல்லும் ஆனால் அருகில்  வந்தவுடன் பெண்மைக்கே உரிய இலக்கணத்துடன் மிக அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே சமிக்கை தரும்.. அந்த நேரம் ஆணுக்குத் தோதாக இருந்தால் மட்டுமே  காதல் விளையாட்டு! இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கி நோ சொல்லிவிடும். கனமான இரை வயிற்றுக்குள் இல்லாதவரையில் ஆண் மலைப் பாம்புகள் தன் சோம்பேறித்தனத்தை தூர வைத்துவிட்டு போனால் போகிறது என்பது போல் இணைக்கு இணங்கிவிடும்!

காதல் விளையாட்டின் போது ஒன்றோடொன்று  சுற்றி பின்னிப் பிணைந்து கொள்ளும். உடலை இறுக்கி அந்த இறுக்கத்தையும் ரசித்தபடி உடலின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் ஸ்பரிசிக்கும் வகையில் நீண்ட நேரம் ஆலாபணை நடத்தும். மலைப்பாம்பின் வால் பகுதியில்தான் மேற்படி சமாச்சாரங்கள் உள்ளன. ஆண் மலைபாம்புக்கு வலது புறம் ஒன்று இடது புறம் ஒன்று என இரண்டு ஆண் குறிகள் உள்ளது. (Hemipenes)  சூழ்நிலைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு விஷயத்தை இனவிருத்திக்கு பயன்படுத்தும். அந்த  வால்சண்டையில் வால்கள் சரியாக இணையும் பொழுது வெற்றிகரமான சேர்க்கை நடந்து முடியும்..பிறகு இரண்டும் மங்களம் பாடி இனிதே பிரிந்துவிடும்.

வாலோடு வால்முக்கிய நிகழ்வு


சினைமுட்டைகளை வயிற்றில் உள்ளடக்கிய மலைப் பாம்பு

மூன்று மாதங்களில் பெண் மலைப்பாம்பு 12 முதல் 36 முட்டைகள் இடும். உடலை ஸ்பிரிங் போல் சுற்றி முட்டைகள் 58 நாட்கள் தன்னுடைய உடலில் அதிக அளவில் உஷ்ணத்தை உருவாக்கி  அடை காக்கும்.


பிறக்கும் குஞ்சுகள் 2.5 அடி நீளத்திலிருக்கும். முதல் தோலை உரிக்கும் வரை முட்டைக்குள்ளேயே இருந்துவிட்டுதான் பின் வெளியில் வரும். வெளியே ந்தவுடன்  தன் முதல் வேட்டையை ஆரம்பிக்கும். அத்துடன்  பெண் மலைப்பாம்பின் தாயின் பராமரிப்பும் முடிந்துவிடும்.
பிறந்த குட்டி மலைப்பாம்புகள் காட்டுப் பூனை முதல் நரி வரை பல எதிரிகளிடம் தப்பினால் 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்த  மலைப் பாம்பு ஆகிவிடும். வளர்நத பாம்புகளுக்கும் சிங்கம், புலி, மனிதன் என பல எதிரிகள் இருப்பதால் இதனுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மலைப் பாம்பு தன் எதிரிகளிடமிருந்து தப்பிவிட்டால் தனது ஆயுள் காலம் 20 ஆண்டுகள் வரை வாழ்ந்துவிடும்!
மனிதர்களின் மலைப்பாம்பு பயன்பாடு மலைக்க வைக்கிறது. மலைபாம்பின் இரத்தம் தாய்லாந்தில் மார்க்கட்டில் ஏக கிராக்கி! வீரியத்தை அதிகப்படுத்துகிறதாம்!!
இந்தியாவில் மலைப்பாம்பின் கொழுப்பு முக்கியமாக கேரளா பகுதியில் மருந்து பொருளாக பயன்படுகிறது. எதற்கு என்று சொன்னால் ஆஸ்துமா நோயாளிகள் கேரளா ஆயுர்வேதிக் மருந்துகளை சாப்பிட தயங்குவார்கள்.
மேலை நாடுகளில் மலைப்பாம்பின் தோலில் செய்த அலங்கார  பொருள்கள், பர்ஸ், கை பை விற்பனை சக்கைப்போடுபோடுகிறது.
சீனாவின் சிலப் பகுதிகளில்  மலைபாம்பின் இறைச்சி உணவாகிறது! அவர்களின் கூற்றுப்படி மலைப் பாம்பின் இறைச்சி சர்க்கரை போல் இனிக்கிறதாம்! யாரேனும் முயற்சித்து உண்மையா என  கூறுங்களேன்!!15 October, 2013

ஆடு தீண்டாப் பாளை-மூலிகை

ஆடுதீண்டாப் பாளை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியாவில் திருவாங்கூரிலும், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளிலும், இலங்கையிலும் அதிகம் காணப் படுன்றது.
இதனை ஆடுதின்னாப்பாளை, ஆடுதொடாப் பாளை, பங்கம்பாளை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil – Adu thinna palai
English – Bracteated birth wort
Sanskri – Dhuma patra
Malayalam – Aadu tinlappala
Telugu – Gadug gudupa
Botanical Name – Aristolochia bracteata
கிரந்திகரப் பன்வெக்கை கேசநலி மாந்தை
யரந்தை வினையை யறுக்கும்துறந்து
பிரியொணா நோய்களையும் பின்முன்பா ராமல்
மறியுணா மூலியடை வாய்
(தேரையன் வெண்பா)
ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி
நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்
எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்
திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு
(அகத்தியர் குணபாடம்)
உடல் வலுப்பெற
உடல் உழைப்பு குறைந்து போனதாலும், இயற்கையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதாலும் இன்று பலருக்கும் உடல் வலு குறைந்து வருகிறது. இவர்கள் சிறிது கடினமான வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துவிடுவார்கள்.
இவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
வயிற்றுப் பூச்சிகள் நீங்க
வயிற்றுப் பூச்சிகள் உடலில் பல தொந்தரவுகளை உண்டுபண்ணுகின்றன. இவற்றால் வயிற்றில் புண்கள் உருவாகின்றன. சிறு குழந்தைகள் இந்த வயிற்றுப் பூச்சியினால் அடிக்கடி வாந்தி பேதிக்கு ஆளாக நேரிடுகிறது.
இவர்களுக்கு ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.
நீர்மலம் நீங்க
மலமானது நீராக வெளியேறுவதால் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது. இந்த நீர் மலம் நீங்க ஆடுதீண்டாப் பாளை இலைகளை உலர்த்தி கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.
பூச்சி கடிகளுக்கு
சில சமயங்களில் வண்டுகள், பூச்சிகள் கடிப்பதால் விஷமுண்டாகி சருமத்தில் தடிப்பு, கொப்புளம் போன்று உண்டாகும்.
இதற்கு ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கும்.
கரும்படை கரப்பான் நீங்க
ஆடுதீண்டாப் பாளை இலைகளை அரைத்து தோலில் ஏற்படும் கரும்படை கரப்பான் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க
தலையில் முடி கொட்டுகிறது என்ற கவலை உள்ளவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.
பெண்களுக்கு
சில பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் சூதக வலி, வயிற்று வலி, ஓழுங்கற்ற இரத்தப் போக்கு போன்றவற்றால் பெரிதும் அவதியுறுவார்கள். இவர்கள் ஆடு தீண்டாப் பாளை இலைகளை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.
மேலும் ஆடுதீண்டாப் பாளை விதைகளை எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்தால் பிரசவ நேரத்தில் உண்டாகும் வேதனை குறையும்.
இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட ஆடுதீண்டாப் பாளையை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

05 September, 2013

பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.
ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.
திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.
ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.
மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.
வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி
பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.
நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.

15 July, 2013

அரசு அலுவலகத்தை பாடாய்படுத்தும் வானவில அவ்வையார்

அரசு அலுவலகத்தின் தலைமை அலுவலகத்தில் சில சமயங்களில் வானவில் அவ்வையார் எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டும் என அவசரமாக கேட்பது உண்டு. அல்லது வானவில் எழுத்துருவுடன் சில கோப்புகள் வந்து சேரும்.ஆனால் பல அலுவலக கணினியில் வானவில் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எழுத்துரு மட்டும் கோப்புடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்ததை வைத்து கோப்பை படிக்கமட்டும் முடியும். ஏதேனும் மாறுதல் செய்யமுடியுமா? அல்லது இந்த எழுத்துருவில் கோப்பை தயாரிக்கமுடியுமா? இந்நிலையில் கைகொடுத்ததுNHM ரைட்டர்எவ்வாறு என்று இங்கே நாம் பார்க்கலாம்.
தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.
வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)
என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.
என்.எச்.எம் ரைட்டரை http://software.nhm.in/products/writer என்ற இணைய இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொண்டு உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
என்.எச்.எம் ரைட்டரை துவக்கிக் கொள்ளுங்கள். உங்கள் 
 கணினியின் சிஸ்டம் ட்ரேயில் என்.எச்.எம் ரைட்டருக்கான குறியீட்டில் (மணி போன்ற அடையாளம்) nhm_1  ரைட்கிளிக் செய்யுங்கள். வரக்கூடிய மெனுவில் செட்டிங்ஸ் என்பதை செலக்ட் செய்யவும்.
தற்போது திரையில் தோன்றும் செட்டிங்ஸ் வின்டோவில் பல்வேறு வகையான தமிழ் எழுத்துரு வடிவங்களுக்கான, தமிழ் விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளன. வானவில் எழுத்துருவிற்கான என்கோடிங்கிற்கும், விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
nhm_3 இங்கு தமிழ்99, இன்ஸ்கிரிப்ட், பாமினி முறை, பழைய தட்டச்சு முறை, ஃபொனடிக் முறை ஆகிய விசைப்பலகைகள் தரப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பழக்கமான விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.உதாரணத்திற்காக நாம் தமிழ்99 விசைப்பலகை முறையை தேர்வு செய்துள்ளோம். அதற்கான சுருக்கு விசையையும் நிர்ணயித்துக் கொண்டால் பயனுடையதாக இருக்கும்.
இப்போது மீண்டும் சிஸ்டம் டிரேயில் உள்ள என்.எச்.எம் குறியீட்டில் இடதுகிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த விசைப்பலகை
nhm_4
 முறையும் இடம் பெற்றிருப்பதை கவனிக்கலாம். அதனை செலக்ட் செய்து கொள்ளுங்கள. (நீங்கள் நிர்ணயித்துள்ள சுருக்கு விசையை அழுத்தியும் நீங்கள் நேரடியாக விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.)
அவ்வளவு தான் நீங்கள் வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்ய தயாராகி விட்டீர்கள்.
அது சரி! எழுத்துருவிற்கு என்ன செய்வது என்று கேட்கறீர்களா? எழுத்துரு பொதுவாக அலுவலக ரீதியான டாக்குமென்ட்களை பகிர்ந்து கொள்ளும் போது இணைத்தே வழங்கப்படுகிறது. எளிதாக கிடைக்கிறது.
நாம் பரிசோதித்த வரையில் பழைய தட்டச்சுமுறையை விட, தமிழ்99 முறை சிறப்பாக செயல்படுகிறது. தட்டச்சு தெரியாதவர்கள் கூட ஃபொனடிக் முறையின் மூலம் தட்டச்சு செய்து கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.
ஆம் நண்பர்களே! இனிமேல் Windows 2003/XP/7 & Vista ஆகிய எந்த இயக்கமுறையிலும் நாம் எளிதாக, இலவசமாக வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்யலாம். இன்னும் ஒரு கொசுரு செய்தி NHM Converter! என்று மென்பொருள் உள்ளது. இதில் பிற எழுத்துருக்களை கூட வானவில் அவ்வையார மாற்று கொள்ளலாம். நன்றி சாக்பீஸ்

14 June, 2013

படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி!


குழந்தைகளுக்கு  வரும்  காது வலி :

        காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் . 


மூக்கை   சிந்துவதால்  காதின் உள்ளே  அழுத்தம்  அதிகரிப்பதால்  காது வலி  அதிகமாகும் . எனவே  சிந்தாமல்  துடைத்துவிட  வேண்டும் .


காதுக்கு  பட்ஸ்  போடவே  கூடாது . அப்படி செய்தால்  வெளியே உள்ள  அழுக்கு  உள்ளே தள்ள படுமே  தவிர  வெளியே  வராது. பஞ்சை  கொண்டு  விளக்கு திரி போல திரித்து  துடைத்து  எடுக்க வேண்டும் .தாய்ப்பால் படுத்து கொண்டு   தரக்கூடாது , குழந்தையின்   தொண்டைக்கும்  நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian  tube ) வழியே பால் உள்ளே சென்று  சீழ்  பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும்  காதில்  சீழ்  பிடிக்கும் .


மூக்கு அடைப்பு  இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து  போட்டு கொள்ள வேண்டும் .நன்றி டாக்டர்.ராஜ்மோகன்

03 June, 2013

வேர்க்கடலையில் இவ்ளோ இருக்கா?

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.
சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது. முளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம்.
வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
பின்குறிப்பு : வேர்க்கடலையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுக் கேளாறுகள் ஏற்படும். நீரிழிவுநோய், மேக நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை,
விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.


குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.

கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.
ஒரு கொசுறு செய்தி!
புற்றுநோயை உண்டாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விளையாட்டாக 
தொடங்கி அதை விடமுடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.
மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.
இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...

13 April, 2013

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் `பாகற்காய்!’

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.
இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.
“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.
ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.
ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.
“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.
“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.
`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில், பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.
அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.
“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.
அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.
அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.
ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.
பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.

27 March, 2013

பசியைத் தூண்டும் புடலங்காய்…


நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர். இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம். தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.

இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதனால் நோயின் பிடியில் சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம். காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.
இத்தகைய காய்களில் நாம் அனைவரும் அறிந்த புடலங்காய் பற்றியும் அதன் மருத்துவப் பயன் பற்றியும் அறிந்துகொள்வோம்.

இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை. இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது சுவை மிகுந்த காயாகும். இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.

இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.

போகம் விளையும் பொருந்தி வளருமையாம்

ஆகமதிற் பித்த மணுக்குங்காண்-மேக

புடலங் கவியளகப் பாவாய் கேணாளும்

புடலங் காய்க்குள்ள புகழ்

-அகத்தியர் குணவாகடம்

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

புடலங்காயின் பயன்கள்

* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

* குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.

* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

* கண் பார்வையைத் தூண்டும்.

* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...