Skip to main content

Posts

Showing posts from 2015

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்.....

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம். ‪எலி‬
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம். ‪‎பல்லி‬
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள். இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும். ‪‎ஈ‬
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும். அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள். இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள். இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம். ‪கொசுக்கள்‬
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும். மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மி…

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? மற்றும் தடுப்புமுறைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.....
நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இத…

காட்டுத்தனமான காட்டு தீ!

வனத் துறை அலுவலர்களை அதிகம் பயமுறுத்துவது `காட்டுத் தீ’தான்.காடுகளில் மரங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதாலும், உதிர்ந்த இலைகள் பெரும்அடுக்காகக் காணபடுவதாலும் தீ வேகமாக பரவி விடுகிறது. அதுவே பெரும் பயத்தைஏற்படுத்துகிறது. காட்டுத் தீ ஏற்படும்போது எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும் பலியாகி விடுகின்றன. மதிப்புமிக்க வனவளம் இழக்கபடுகிறது.
காட்டுத் தீக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில இயற்கை யானவை. சில, மனிதர்களால் ஏற்படுபவை.
இயற்கைக் காரணங்கள்:
மின்னல், எரிமலைச் சீற்றம், மிகவும் வறண்ட கோடைக் காலம் அல்லது வெப்பஅலைகள் காட்டுத் தீயை ஏற்படுத்தலாம். கோடை காலத்தில், மரக் கிளைகள்உரசிக்கொள்ளும் சாதாரண நிகழ்வு கூட காட்டுத் தீக்கு வித்திட்டு விடலாம்.
மனிதனால் ஏற்படுபவை:
பெரும்பாலான காட்டுத் தீ விபத்துகளுக்குக் காரணம் மனிதர்கள்தான். காட்டுபகுதியில் சுற்றுலா செல்பவர்களும், தற்காலிகமாக முகாம் அமைத்துத் தங்குபவர்களும் தீயைச் சரியாக அணைக்காமல் விட்டு விடலாம். யாரோ ஒருவர்அணைக்காமல் விட்டெறியும் சிகரெட் துண்டும் காட்டுத் தீக்குக்காரணமாகிவிடலாம்.
இந்தியாவில், மரங்களில் இருந்து நல்ல சாகுபடியை பெற கிராமத்தின…

தொலைபேசியில் ஆபசமாக பேசுபவரா? எச்சிரிக்கை

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / கா...Posted by Manimaran on Saturday, July 25, 2015

பெண்கள் அணியும் அணிகலங்களின் பயன்கள்!

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேண...Posted by Manimaran on Saturday, July 25, 2015

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ஒரு சுருக்கமான 'நச்'சென்ற பார்வை:

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ஒரு சுருக்கமான 'நச்'சென்ற பார்வை:பெயர்:உ.சகாயம்பிறப்பு:பெருஞ்சுணை கிராமம். ஊழலிலேயே ப...Posted by Madhu Mitha on Friday, September 19, 2014

பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. .

கூச்ச சுபாவமுள்ள, இதய பலகீனமுள்ள ஆண்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம். இந்தக் கட்டுரை பிரா அணிய விரும்பாத, பிரா ப...Posted by Manimaran on Wednesday, July 8, 2015

புடவை கட்ட ஆசை உள்ள பெண்கள் அறிந்து கொள்ள,...

இது பெண்களுக்கான பகுதி. ஆண்களுக்கு இங்கு வேலை இல்லை.புடவை கட்டத் தெரியாத, புடவை கட்ட ஆசை உள்ள பெண்கள் அறிந்து கொள்ள...Posted by Manimaran on Wednesday, July 8, 2015

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

பல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்
பெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,
பயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்... ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,
கண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,
சீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும். இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்….. பயிற்சி 1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை... குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது... எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது? நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்ட…

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால்!

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும்முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர். ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன். அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனா…

இதயத்தை பாதுகாத்துகொள்ளுங்கள்... கேள்வி .. பதில்...டாக்டர்.தேவி ஷெட்டி ஹிருதாலயா மருத்துவமனை

A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees....Posted by Rajendran Subramanian on Sunday, April 5, 2015

"ROHYPNOL" மாத்திரை என்பது,,, காம வெறியர்களின் புதிய ஆயுதம்...!!!

பெண்களே உஷார்....!!!???இது ஒரு எச்சரிக்கை பதிவு... லைக் , கமெண்ட் செய்யாமல்,,, அதிகப் படியாக ஷேர் செய்யவும்..."...Posted by தகவல் அறியும் உரிமை பக்கம் on Sunday, March 29, 2015

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..! பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள்..!பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்ப...Posted by தகவல் அறியும் உரிமை பக்கம் on Friday, March 27, 2015

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...Posted by தகவல் அறியும் உரிமை பக்கம் on Monday, March 30, 2015

இனி குடையை மறக்க மாட்டீங்க...!

இனி குடையை மறக்க மாட்டீங்க...!
குடையை மறந்து வைத்து விட்டு, அதன் பிறகு வருந்தும் அனுபவம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. ஒவ்வொரு முறையும் குடையை மறக்காமல் இருக்க வேண்டும் என என்ன தான் உறுதி எடுத்திக்கொண்டாலும் மறதி வென்று வெறுப்பேற்றலாம்.
இந்த மறதி பிரச்னையை வெல்வதற்கான வழியாக குடையே தன்னை நினைவுபடுத்திக்கொள்ளும் சின்ன நடைமுறை அற்புதத்தைதான் 'டெவேக் அலர்ட் 'எனும் இந்த கிக்ஸ்டார்ட்டர் குடை சாத்தியமாக்குகிறது. அதுமட்டுமின்றி நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை, இந்த கேள்வியை கேட்டு, குடை உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியை உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறது. குடை எதற்கு நம்முடன் பேச வேண்டும்? அதனை மறந்துவிட்டுச்செல்லாமல் நினைவூட்டத்தான்! ஆம், கொட்டும் மழையிலோ கொளுத்தும் வெய்யிலிலோ எடுத்துச்செல்லும் குடையை மறக்காமல் திரும்ப எடுத்து வருவதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டதாக இந்த நவீன குடை உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி? இந்த குடையின் கைப்பிடியில், சின்னதாக ப்ளுடூத் வசதி கொண்ட அருகாமை உ…