26 November, 2011

பூ பூக்கும் ஓசை கேட்கத்தான் ஆசை!


14 வயது ஆகியும் ஒரு இளம் பெண்  இன்னமும் மாதவிலக்கு ஏற்படத் தொடங்கவில்லை. அது கவலைப்பட வேண்டிய விஷயமா? பெண்கள் எட்டு முதல் 12 வயதிற்குள் பூப்பெய்துகிறார்கள். பூப்பெய்துதல் என்பது ஓரு பெண்ணுக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை அவளுக்குள் உண்டாக்குகின்றன. இந்த மாற்றம் முழுமைபெற மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகிறது.
முதல் மாற்றம் மார்புக் காம்புகளில் ஏற்படுகிறது. காம்புகள் புடைக்கின்றன. மார்புகள் மெல்ல மெல்லப் பெரிதாகின்றன. இந்த வளர்ச்சி ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நடக்கிறது.

23 November, 2011

எனக்கு கடவுள் தெரிகிறார் , என்னோடு கடவுள் பேசுகிறார் !

எனக்கு கடவுள் தெரிகிறார் , என்னோடு கடவுள் பேசுகிறார் என்று யாராவது சொன்னால் அவருக்கு உடனேயே கோயில் கட்டி விடுபவர்கள் நம்வர்கள்.
அவர்களுக்காக இது....

ஹளுசிநேசன்(halluination) என்பது பல மனநோய்களுக்கான அறிகுறி. ஹளுசிநேசன் என்றால், ஒரு பிரமை . ஆனால் அந்த மன நோயாளிகளுக்கு அது உண்மையாகத் தெரியும்.
உதாரணத்திற்கு கடவுள் என்முன்னே தெரிகிறார் என்று சொல்வார்கள் , உண்மையில் தன் முன்னே கடவுள் நிற்பது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். ஹளுசிநேசனிலே கடவுள் மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் தெரியலாம்.
சிலபேருக்கு தன் காதலனோ காதலியோ இருப்பது போலத்தெரியும்.
சிலவேளை எதிரி ஒருவன் தன்னைக் குத்த வருவது போல உணர்வார்கள். அதனால் பயத்திலே அலறிக்கொண்டிருப்பார்கள்.

இந்தக் ஹளுசிநேசன் பார்வையில் மட்டுமல்ல செவிப்புலத்திலும் கேட்கலாம். அதாவது யாரோ ஒருவர் கதைப்பது போல அவர்களுக்கு கேட்கும். இதனால்தான் சில மன நோயாளிகள் தன்னைப் பற்றி அவன் இப்படி கேவலமாகக் கதைத்தான் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு சிலவேளை கடவுள் பேசுவதுகூடக் கேட்கலாம்.
யாராவது இனி கடவுள் அப்படிச் சொன்னார் இப்படிச்சொன்னார் என்று சொன்னால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

07 November, 2011

ஆணுறுப்புக்களின் அதிகாலை விறைப்பு! நோய்?

இந்த பூ மற்றும் தேனீக்கும் இந்த பதிவுக்கும்?
ஆண்கள் தவறாக புரிந்து கொண்டு அச்சப்படும் விஷயங்களில் ஒன்று Linkஅதிகாலை நேரத்தில் அவர்களின் ஆணுறுப்பில் இயல்பாக ஏற்படுகின்ற விறைப்புத் தன்மை ஆகும்.

அதாவது அதிகாலை வேலை அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து , வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் .சிலர் தனக்கு ஆண்மைதன்மை அதிகம் வந்துவிட்டது எனவும் பெருமிதப்படுகிறார்கள்.

06 November, 2011

சீதா பழம்அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. 'இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது' ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது. வெயில் காலத்தில் நெல்லிக்காய் சந்தைக்கு வரும். அதை வாங்கி வாயில் பாட்டு சுவைத்தால் உடம்புக்கு குளிர்ச்சி. எவ்வளவு தூரம் நடந்தாலும் களைக்காது. நெல்லிக்காய் வற்றலை வாயில் போட்டு புட்பால் விளையாடினால் ரொனால்டோவை கூட மிஞ்சி விடலாம். அது தான் அவ்வை கொடுத்த நெல்லிக்கனிக்கு சிறப்பு.சரி அதை பிறகு பார்க்கலாம்.

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...