26 November, 2011

பூ பூக்கும் ஓசை கேட்கத்தான் ஆசை!


14 வயது ஆகியும் ஒரு இளம் பெண்  இன்னமும் மாதவிலக்கு ஏற்படத் தொடங்கவில்லை. அது கவலைப்பட வேண்டிய விஷயமா? பெண்கள் எட்டு முதல் 12 வயதிற்குள் பூப்பெய்துகிறார்கள். பூப்பெய்துதல் என்பது ஓரு பெண்ணுக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை அவளுக்குள் உண்டாக்குகின்றன. இந்த மாற்றம் முழுமைபெற மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகிறது.
முதல் மாற்றம் மார்புக் காம்புகளில் ஏற்படுகிறது. காம்புகள் புடைக்கின்றன. மார்புகள் மெல்ல மெல்லப் பெரிதாகின்றன. இந்த வளர்ச்சி ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நடக்கிறது.


மார்புத் திசுக்களின் அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஆனால் மார்புகளின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அடுத்த மாற்றம் பிறப்புறுப்பைச் சுற்றி வளரும் ரோமங்கள்.
அடுத்தபடியாகப் பெண்ணின் உயரம். பூப்பெய்துவதற்கு முன் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து சென்டி மீட்டர்வரை வளர்ச்சி இருக்கும். பூப்பெய்திய பிறகு இது எட்டு முதல் ஓன்பது சென்டி மீட்டர்வரை அதிகரிக்கும். அதிகபட்ச வளர்ச்சி தரும் பருவம் என்று இது குறிப்பிடப்படுகிறது. இந்த வளர்ச்சி மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நடக்கும். பெண்ணின் உயரம் பெற்றோரின் உயரைத்தைப் பொறுத்தது. உயரமான பெற்றோரின் பெண்களும் உயரமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு உடல் முழுவதிலும் கொழுப்புச் சத்து சேரும். இடுப்பு அகலமாகும். பிள்ளைப்பேறு நிகழும் சமயத்தில் கர்ப்பப் பை பெரிதாகிறது. அதற்கு வசதியாகவே இடுப்பு அகலமாகும். கால்களும் பெரிதாகும். முகத்தின் எலும்புகள் விரிவடையும்.முகத்திலும் மார்பின் மேல் பகுதியிலும் முதுகின் மேல் பகுதியிலும் கொழுப்புச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதால் கட்டிகள் உண்டாகும். விடலைப் பருவத்தின் சங்கடங்களைப் பெண்கள் அனுபவிக்கும் காலம் இது. அவர்களது வகுப்புகளில் இருக்கும் பையன்களைவிட அவர்கள் பெரிதாக வளர்ந்திருப்பார்கள்.
அதன் பிறகு முதல் மாதவிலக்கு ஏற்படுகிறது. மாதவிலக்கு என்பது கர்ப்பப் பையிலிருந்து சினை முட்டைகள் வெளியேறுவது தான். புதிய முட்டைகள் 25-35 நாட்களுக்குள் வளர்ந்துவிடும். கருவுறும் சமயத்தில் ஆணின் உயிரணுக்களை ஏற்றுக்கொள்வதற்காகத்தான் இது நடக்கிறது. கருவுறாதபோது இந்த முட்டைகள் ரத்தத்துடன் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள்வரை இது நடக்கும். தொடக்கத்தில் இந்தச் சுழற்சி சீராக இருப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுகளுக்குப் பிறகு மாதவிலக்குச் சுழற்சி சீரடைகிறது. சில சமயம் ரத்தப் போக்குடன் இடுப்பு வலியும் இருக்கும்.சுழற்சி சீரான முறையில் நடக்க ஆரம்பித்த பிறகு பெண்கள் மேலும் ஐந்து அல்லது ஆறு சென்டி மீட்டர் வரை உயரமாவார்கள். அதன் பிறகு வளர்ச்சி நின்றுவிடும்.இதனால்தான் ஆண்களோடு ஓப்பிடுகையில் பெண்கள் ஆரம்பத்தில் அதிகம் வளர்வதில்லை.
ஒரு இளம் பெண்ணிற்கு  பிறப்புறுப்பில் முடி வளர்ந்திருந்தால் 6 முதல் 3 மாத  மாதத்திற்குள் அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடலாம் என மருத்துவர் நம்பிக்கை தருவார்!
ஆக, பெண்கள் வயதுக்கு வருவது மிக விரைவாகப் பத்து வயதிலும் நடக்கலாம். மிகத் தாமதமாகப் பதினைந்து வயதிலும் நடக்கலாம். ஆனால் மார்புக் காம்புகள் வளர்வது, பிறப்புறுப்பைச் சுற்றி முடி வளர்வது ஆகியவை 12 வயதிற்குள் நடந்தாக வேண்டும். குறிப்பாக தாய் இந்த மாற்றங்களை கவனித்து வரவேண்டும்.விரைவில் பூப்பெய்பவர்களுக்கு உடல் வளர்ந்துவிடும். ஆனால் அந்த வயதிற்கேற்ற குழந்தைத்தனம் இருக்கும். ஆனால் ஹார்மோன்கள் அவர்களிடத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரும். பெற்றோர்களுடன் உரசல், ஆண்களின்பால் ஏற்படும் கவர்ச்சி ஆகியவை தாமதமாகப் பூப்பெய்துபவர்களைவிடச் சிறிய வயதிலேயே இவர்களுக்கு நிகழும். முடிவு எடுக்கும் திறன் வளரும் முன்பே பிறரிடமிருந்து வரும் ஆபத்துக்கள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். பிறரது தொடுகையில் நல்ல நோக்கத்துடன் தொடுவது, கெட்ட நோக்கத்துடன் தொடுவது ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் பெண்களுக்கு எட்டு- ஒன்பது வயதிலேயே தெரிய வேண்டும்.
விரைவில் பூப்பெய்துவதே தற்போதைய நிலைமை, . குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் உடற்கூறு அளவில் பெண்களுக்கு விரைவில் வந்துவிடுகிறது. ஆனால் கருவுறுவதால் உண்டாகும் உடல், உணர்வு, பொருளாதாரம், உளவியல், சமூகம் ஆகியவை சார்ந்த விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் அந்த வயதில் தயாராவதில்லை.

1 comment:

  1. நல்ல ஆலோசனை...
    பலரும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம்...

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...