எனக்கு கடவுள் தெரிகிறார் , என்னோடு கடவுள் பேசுகிறார் !

எனக்கு கடவுள் தெரிகிறார் , என்னோடு கடவுள் பேசுகிறார் என்று யாராவது சொன்னால் அவருக்கு உடனேயே கோயில் கட்டி விடுபவர்கள் நம்வர்கள்.
அவர்களுக்காக இது....

ஹளுசிநேசன்(halluination) என்பது பல மனநோய்களுக்கான அறிகுறி. ஹளுசிநேசன் என்றால், ஒரு பிரமை . ஆனால் அந்த மன நோயாளிகளுக்கு அது உண்மையாகத் தெரியும்.
உதாரணத்திற்கு கடவுள் என்முன்னே தெரிகிறார் என்று சொல்வார்கள் , உண்மையில் தன் முன்னே கடவுள் நிற்பது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். ஹளுசிநேசனிலே கடவுள் மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் தெரியலாம்.
சிலபேருக்கு தன் காதலனோ காதலியோ இருப்பது போலத்தெரியும்.
சிலவேளை எதிரி ஒருவன் தன்னைக் குத்த வருவது போல உணர்வார்கள். அதனால் பயத்திலே அலறிக்கொண்டிருப்பார்கள்.

இந்தக் ஹளுசிநேசன் பார்வையில் மட்டுமல்ல செவிப்புலத்திலும் கேட்கலாம். அதாவது யாரோ ஒருவர் கதைப்பது போல அவர்களுக்கு கேட்கும். இதனால்தான் சில மன நோயாளிகள் தன்னைப் பற்றி அவன் இப்படி கேவலமாகக் கதைத்தான் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு சிலவேளை கடவுள் பேசுவதுகூடக் கேட்கலாம்.
யாராவது இனி கடவுள் அப்படிச் சொன்னார் இப்படிச்சொன்னார் என்று சொன்னால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

Comments

  1. நல்ல எச்சரிக்கை

    ReplyDelete
  2. இப்டியும் ஒரு நோயா? சரித்தான்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?