Skip to main content

Posts

Showing posts from June, 2011

உங்கள் செல்ல நாய்க்கு போடவேண்டிய தடுப்பூசிகள்!

நன்றிக்கு பெயர் போன,நம்மிடம் விசுவாசமாய் உள்ள நமது வளர்ப்பு நாய்க்கு சில கொடிய நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசிகள் போடவேண்டியது நமது கடமைதானே!

பிறந்த 2 மாதத்திலிருந்தே தடுப்பூசி போடவேண்டும்.அதற்கு பின் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன் குடற்புழுநீக்கம் செய்திருக்க வேண்டும். அட்டவணை:- வயது குடற் புழு நீக்கம் செய்யவேண்டிய இடைவெளிகள் 2வாரம் முதல் 3 மாதங்களுக்குள் 7 நாட்களுக்கு இடைவேளியில் 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்குள் 15 நாட்கள் இடைவெளியில் 6 மாதங்களுக்கு பின் 21 முதல் 30 நாட்கள் இடைவெளியில் நோய்களும் தடுப்பூசிகளும்:-
1)வெறி நோய்( Rabies):- நாய்க்கு வரும் வைரஸ் வியாதிகளில் மிகவும் பயங்கரமானது இது. இந்த நோய் மனிதருக்கும் பரவக் கூடியது என்பதால் வராமல் தடுப்பது அவசியம் முதல் தடுப்பூசி : 3ம் மாதத்தில் பூஸ்டர் : 6ம் மாதத்தில் அதற்கு பின் ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும் வெறி நோய் கொண்ட நாயினால் நமது வளர்ப்பு நாய் கடிப்பட்டால்: முதல் தடுப்பூசி: ஜீரோ நாள் ( தடுப்பூசி போடும் நாள்) 2ம் தடுப்பூசி : 3ம் நாள் 3ம் தடுப்பூசி : …

நம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்?

அகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது. ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை! பழங்காலம் முதலே ஒரு துஷ்டப் பறவையாகவே ஆந்தை கருதப்படுவது அதன் துரதிருஷ்டம். யார்வீட்டு மீதாவது ஆந்தை அமர்ந்து கத்தினால், அந்த வீட்டில் மரணம் சம்பவிக்கும் என்ற நம்பிக்கை இன்றும் பரவலாக இருக்கிறது. இதனால்தான் ஆந்தையின்அலறல் ஒலிக்கு கூட பஞ்சாங்கத்தில் பலன் பார்க்கும் வழக்கும் இருந்து வருகிறது. எத்தனை பெரியார் வந்தாலும் மாற்றமுடியாத மூடநம்பிக்கையாக உள்ளது.
“ ஸ்ட்ரிகிடே” (Strigidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தைகளில் 200 வகைகள் இருக்கின்றன. இதில் பெரிய ஆந்தை, சின்ன ஆந்தை, புல் ஆந்தை, உமட்டன், சாவுக்கருவி என 15 வகை இனங்கள் நமது இந்தியப் பிரஜைகள்.  ஒவ்வொரு வகை ஆந்தைகளும் தனிப்பட்ட ஒலிகளை ஒலிக்கும். அவைகள் யாவும் தன்னுடைய இணைக்கு மேற்படி விஷயத்திற்கு அழைக்கும் ஒலிதான்! மரண அறிவிப்பு இல்லை!!
ஆந்தைகளிலியே கழுகு ஆந்தைகள் தான் மெகா சைஸ்! Eurasian Eagle Owl (Bubo bubo) Blakiston's Fish Owl (Bubo blakistoni) இரண்டரை அடிக்கும் மேல் நீளம், இரக்கையை விரித்தால் 6.6 அ…

மாவட்ட ஆட்சித் தலைவர் மகள் அரசு தொடக்கப் பள்ளியில் அட்மிஷன்!

உயர் அதிகாரிகள், அரசியல்வாதி ஆகியோரின் குழந்தைகள் அந்த நகரில் உள்ள பிரசித்தமான கான்வென்ட் பள்ளியில் படிப்பதுதான் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 3ம் தேதி பதவியேற்ற ஆனந்தகுமார் தன்னுடைய தீபிகா என்ற பெண் குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதற்காக ஈரோடு குமலன் குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தன் பெண் குழந்தை கோபிகாவுடன் சென்றார். அங்கு மாணவர் சேர்க்கைக்காக ஏராளமான பெற்றோர் குவிந்திருந்ததால் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ஆனந்தகுமார் அவர்களும் காத்திருந்தார். அப்பொழுது, மாணவர் சேர்க்கையை தொடங்கி வைக்க வந்திருந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், கலெக்டர் தனது மகளை பள்ளியில் சேர்க்க வந்திருக்கும் தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்து அவரையும் குழந்தையும் பள்ளிக்குள் அழைத்து சென்றார். பள்ளி தலைமை ஆசிரியை மாவட்ட ஆட்சி தலைவர் மகள் கோபிகாவுக்கு 2ம் வகுப்பு அட்மிஷன் போட்டார்! ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளியின் வளர்ச்சிக்காக புரவலர் திட்டத்துக்கு தனது சார்பிலும், மனைவி சார்பிலும் தலா ரூ.1000/- வழங்கியும் பிரமிக்க வைத்தார்!!
பள்ளியில் சத்துணவு ச…

ஒட்டசிவிங்கியின் கழுத்தும் காதலும்!

அலாதியான கழுத்துக்கென்றே பெயர் பெற்ற உயிர் ஒட்டகச்சிவிங்கி. கி.மு.40-ம் ஆண்டு முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு ஜூலியஸ் சீசரால் அறிமுகமானதுதான் இது.பாலூட்டி வகைகளில் மிகவும் உயரமான இனம் ஒட்டகசிவிங்கி! இதன் அறிவியல் பெயர் (Giraffa camelopardalis)   ஜிராஃபிடே குடும்பத்தை சார்ந்த (Giraffidae) ஒட்டகசிவிங்கி 18 அடி வரை வளரும். 900 கிலோ வரை எடை இருக்கும். ஒட்டகத்தின் உடல் அமைப்பு தோலில சிறுத்தையின் டிசைன் என்று கலந்து இருக்கும். அதனாலேயே இது ஒட்டகமும் சிறுத்தையும் சேர்ந்ததால் ஏற்பட்ட கலப்பு இனமா? என்று கூட ஆரம்பத்தில் ஒட்டகத்தின் கற்பை பற்றி தவறாக நினைத்தார்கள்.ஆனால் அப்படி இல்லை! ஒட்டகசிவிங்கி ஒரு தனி இனம் தாம்!! ஆணை விட பெண் ஒட்டகசிவிங்கி உயரம் , எடை குறைவாக இருக்கும்.

ஒட்டகசிவிங்கிகளின்  கழுத்து எந்த விலங்குக்கும் இல்லாதா சிறப்பாக 10 அடி இருக்கும். இதை நினைத்து அதிகமான கழுத்து எலும்புகள் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு! இதற்கும் கழுத்து எலும்பு (Neck Vertebrae) 7 எண்ணிக்கை மட்டும்தான்.( எலி முதல் மனிதன் அனைத்துக்கும் எழு எண்ணிக்கைதான்) இந்த சிறப்பு அமைப்பிற்கு என்ன காரணம் என்று 200 ஆண்டு…

கொலைகார “மைசூர்” யானையை கட்டுபாட்டில் கொண்டு வந்தது எப்படி?

அடர்ந்த காட்டு பகுதியிலிருந்து சில சமயங்களில் மனிதர்கள் வசிக்கும  பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்வதுண்டு. ஏன் நாம் வளர்க்கும் அல்லது கோயில் யானைகள் கூட சில நேரங்களில் மதம் பிடித்து மனிதர்கள்,கால்நடைகள் என கண்ணில் தெரியும் அனைத்தையும் துவம்சம் செய்யும் இயல்பை கொண்டுள்ளது.
யானையில் கட்டுபாடில்லா வன்முறையை பார்க்க பார்க்க மனம் பதைத்து வனத்துறை என்ன செய்கிறது? கால்நடை மருத்துவர்கள் இதை தடுக்கக்கூடாதா? என ஆதங்கத்தில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.இருப்பினும் இந்த ஆக்ரோஷ யானையை பாக்யராஜ் பாணியில் ஒரு பெண் யானையை கொண்டு வந்து முன்னால் நிற்க வைத்து சமாதான படுத்தலாம் என்றால் இயலாது! தமிழ் பட ஹீரோ போல் பட் பட் என சுட்டுவிடலாம் என்றால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் தன் தலையை நுழைந்துவிடும். பொதுமக்கள் உள்ளே நுழைந்த யானையை கல் எறிவது, தாரை தப்பட்டை என அதிக சப்தம் ஏற்படுத்துல் போன்ற காரியங்களை செய்யாமல் வீட்டினுள்ளேயே இருப்பது மிகவும் நல்லது. இப்படிப்பட்ட யானைகள் பதற்றதுடனும், காட்டை விட்டு வந்த இனம்புரியாதபயம் எல்லாம் சேர்ந்து மிகவும் கோபமாக இருக்கும். எனவே அதை மேலும் கடுப்பேற்றாமல் அமைதியாக இருக்க…