உயர் அதிகாரிகள், அரசியல்வாதி ஆகியோரின் குழந்தைகள் அந்த நகரில் உள்ள பிரசித்தமான கான்வென்ட் பள்ளியில் படிப்பதுதான் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 3ம் தேதி பதவியேற்ற ஆனந்தகுமார் தன்னுடைய தீபிகா என்ற பெண் குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இதற்காக ஈரோடு குமலன் குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தன் பெண் குழந்தை கோபிகாவுடன் சென்றார்.
அங்கு மாணவர் சேர்க்கைக்காக ஏராளமான பெற்றோர் குவிந்திருந்ததால் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ஆனந்தகுமார் அவர்களும் காத்திருந்தார். அப்பொழுது, மாணவர் சேர்க்கையை தொடங்கி வைக்க வந்திருந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், கலெக்டர் தனது மகளை பள்ளியில் சேர்க்க வந்திருக்கும் தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்து அவரையும் குழந்தையும் பள்ளிக்குள் அழைத்து சென்றார்.
பள்ளி தலைமை ஆசிரியை மாவட்ட ஆட்சி தலைவர் மகள் கோபிகாவுக்கு 2ம் வகுப்பு அட்மிஷன் போட்டார்! ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளியின் வளர்ச்சிக்காக புரவலர் திட்டத்துக்கு தனது சார்பிலும், மனைவி சார்பிலும் தலா ரூ.1000/- வழங்கியும் பிரமிக்க வைத்தார்!!
பள்ளியில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் சீருடைகள் வழங்கப்படுகிறது என்ற தலைமை ஆசிரியையிடம் மாவட்ட ஆட்சிதலைவர் ஆனந்தகுமார் தனது குழந்தையும் சத்துணவு சாப்பிடுவார் அவருக்கும் சீருடை வழங்குங்கள் என கூறி கம்பீரமாக சென்றவரை, தலைமை ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் பெற்றோர்களும் ஆச்சரியமும் ஆனந்தமும் கலந்த பெருமிதத்துடன் பார்த்தார்கள்!
மாவட்ட ஆட்சி தலைவர், ஆனந்தகுமார் இதற்கு முன் தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவராக பணிபுரிந்து தற்பொழுது ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவராக பதவியேற்றுள்ளார். இவர் அடிப்படையில் கால்நடை மருத்துவர்! ஒரு முதுநிலை கால்நடை மருத்துவ பட்டதாரி !! கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரிந்த பொது இந்திய ஆட்சி பணி தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று தற்பொழுது மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். ஆனந்தகுமார்!! என்பது கூடுதல் செய்தி. கால்நடைமருத்துவர் என்பதில் நாங்களும் பெருமை அடைகிறோம்!
No comments:
Post a Comment