விக்கல் ஏன் ஏற்படுகிறது?


நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
தன்னிச்சையாக என்றால்…?
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.

 
உதாரணத்திற்கு ஒரு சம்பவம் :
நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் முளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக்காயம் வாங்குவது நிச்சயம்.
ஆனால், அனிச்சைசெயல் என்பது அப்படி கிடையாது. சில அவசரமான நேரங்களில் முளையின் ஹைப்போதலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்.
உதாரணம் : வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று காற்று வேகமாக வீசுகிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது. இந்த சம்பவத்தில், ஹைப்போதலாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக்கையில் ஈடுபட்டு விடுகிறது.
பெண்களில் பலர், தங்களது மாராப்பை அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பார்கள். அது, ஏற்கனவே சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சரி செய்வார்கள். இதுவும் அனிச்சைசெயல்தான்.
சரிஇனி விஷயத்துக்கு வருவோம்
விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லைஎன்பதுதான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே.
அவ்வாறு விக்கல் ஏற்படும்போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும். குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
ஆனால், சிலருக்கு சில நாட்கள்வரை இந்த விக்கல் விட்டுவிட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

Comments

 1. நல்ல தகவல். நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவருக்கு வரும் நிற்காத விக்கல் மரணத்திற்கான அறிகுறி என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது குறித்து உங்கள் கருத்து?

  ReplyDelete
 2. விக்கல் பத்தி சொன்னது ரொம்ப நன்றாக இருக்கிறது ..

  ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் எனக்கு வருவதில் ..நல்ல வயிற்று பசியில் சிறிய உருண்டைக்கு பதில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாக வாயில் திணித்தல் வந்து விடுகிறது ..
  காரம் அதிகமாக இருந்தாலும் வருது ..

  ஊரில் பாட்டி சாப்பிடும் போது விக்கல் எடுத்தால் . புள்ளைய யாரோ வையுராங்கன்னு சொல்லும் ..
  நீங்க சொல்லுரத பார்த்தா .. அது ஒன்றுமே இல்லைன்னு சொல்லுறீங்களே ..

  ReplyDelete
 3. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவருக்கு வரும் நிற்காத விக்கல் மரணத்திற்கான அறிகுறி என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது குறித்து உங்கள் கருத்து?

  சிறுநீரகம் முழுமையாக பாதிக்கபட்டுள்ளது என கருதலாம்!

  ReplyDelete
 4. இம்சைஅரசன் பாபு.. said...

  விக்கல் பத்தி சொன்னது ரொம்ப நன்றாக இருக்கிறது ..

  நீண்ட நாள் கழித்து வந்துள்ளீர்கள்! நன்றி வணக்கம்!! உங்கள் குழந்தையிடம் விக்கலை பற்றி கேட்டுவிடாதீர்கள்! ஏதேனும் இம்சையாக பதில் வந்துவிடபோகிறது!!

  ReplyDelete
 5. நல்ல தகவல் ,அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. M.R said...

  நல்ல தகவல் ,அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
  வருகை புரிந்தமைக்கு நன்றி! உங்கள் வருகையும் கருத்துகளும் ஊக்கம் அளிக்கிறது.

  ReplyDelete
 7. vanakkam.. eanathu kulanthai 2 years. avan piranthathil irunthu sirikkum poluthu sirithavudan vikkal vanthu vidugirathu enna karanam. .

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?