அரசு அலுவலகத்தை பாடாய்படுத்தும் வானவில அவ்வையார்

அரசு அலுவலகத்தின் தலைமை அலுவலகத்தில் சில சமயங்களில் வானவில் அவ்வையார் எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டும் என அவசரமாக கேட்பது உண்டு. அல்லது வானவில் எழுத்துருவுடன் சில கோப்புகள் வந்து சேரும்.ஆனால் பல அலுவலக கணினியில் வானவில் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எழுத்துரு மட்டும் கோப்புடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்ததை வைத்து கோப்பை படிக்கமட்டும் முடியும். ஏதேனும் மாறுதல் செய்யமுடியுமா? அல்லது இந்த எழுத்துருவில் கோப்பை தயாரிக்கமுடியுமா? இந்நிலையில் கைகொடுத்ததுNHM ரைட்டர்எவ்வாறு என்று இங்கே நாம் பார்க்கலாம்.
தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.
வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)
என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.
என்.எச்.எம் ரைட்டரை http://software.nhm.in/products/writer என்ற இணைய இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொண்டு உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
என்.எச்.எம் ரைட்டரை துவக்கிக் கொள்ளுங்கள். உங்கள் 
 கணினியின் சிஸ்டம் ட்ரேயில் என்.எச்.எம் ரைட்டருக்கான குறியீட்டில் (மணி போன்ற அடையாளம்) nhm_1  ரைட்கிளிக் செய்யுங்கள். வரக்கூடிய மெனுவில் செட்டிங்ஸ் என்பதை செலக்ட் செய்யவும்.
தற்போது திரையில் தோன்றும் செட்டிங்ஸ் வின்டோவில் பல்வேறு வகையான தமிழ் எழுத்துரு வடிவங்களுக்கான, தமிழ் விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளன. வானவில் எழுத்துருவிற்கான என்கோடிங்கிற்கும், விசைப்பலகை முறைகள் தரப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
nhm_3 இங்கு தமிழ்99, இன்ஸ்கிரிப்ட், பாமினி முறை, பழைய தட்டச்சு முறை, ஃபொனடிக் முறை ஆகிய விசைப்பலகைகள் தரப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பழக்கமான விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.உதாரணத்திற்காக நாம் தமிழ்99 விசைப்பலகை முறையை தேர்வு செய்துள்ளோம். அதற்கான சுருக்கு விசையையும் நிர்ணயித்துக் கொண்டால் பயனுடையதாக இருக்கும்.
இப்போது மீண்டும் சிஸ்டம் டிரேயில் உள்ள என்.எச்.எம் குறியீட்டில் இடதுகிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த விசைப்பலகை
nhm_4
 முறையும் இடம் பெற்றிருப்பதை கவனிக்கலாம். அதனை செலக்ட் செய்து கொள்ளுங்கள. (நீங்கள் நிர்ணயித்துள்ள சுருக்கு விசையை அழுத்தியும் நீங்கள் நேரடியாக விசைப்பலகை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.)
அவ்வளவு தான் நீங்கள் வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்ய தயாராகி விட்டீர்கள்.
அது சரி! எழுத்துருவிற்கு என்ன செய்வது என்று கேட்கறீர்களா? எழுத்துரு பொதுவாக அலுவலக ரீதியான டாக்குமென்ட்களை பகிர்ந்து கொள்ளும் போது இணைத்தே வழங்கப்படுகிறது. எளிதாக கிடைக்கிறது.
நாம் பரிசோதித்த வரையில் பழைய தட்டச்சுமுறையை விட, தமிழ்99 முறை சிறப்பாக செயல்படுகிறது. தட்டச்சு தெரியாதவர்கள் கூட ஃபொனடிக் முறையின் மூலம் தட்டச்சு செய்து கொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.
ஆம் நண்பர்களே! இனிமேல் Windows 2003/XP/7 & Vista ஆகிய எந்த இயக்கமுறையிலும் நாம் எளிதாக, இலவசமாக வானவில் எழுத்துருக்களை தட்டச்சு செய்யலாம். இன்னும் ஒரு கொசுரு செய்தி NHM Converter! என்று மென்பொருள் உள்ளது. இதில் பிற எழுத்துருக்களை கூட வானவில் அவ்வையார மாற்று கொள்ளலாம். நன்றி சாக்பீஸ்

Comments

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?