16 September, 2011

வாரத்திற்கு 5 சோப்பு கட்டிகளை உண்ணும் நர்சிங் மாணவி

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டெம்பஸ்ட் ஹென்டர்சன் (வயது 19). கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வரும் இவரிடம் ஒரு விநோத பழக்கம் உள்ளது. அதாவது வாரத்திற்கு 5 சோப்பு கட்டிகளையும் மற்றும் டிடர்ஜென்டுகளையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுபற்றி மருத்துவர்கள் கூறும்போது, ஒரு வகை ஊட்டசத்து குறைவே இதற்கு காரணம். இந்த குறைபாடு உள்ளவர்கள் பொதுவாக உலோகம், நாணயங்கள், சுண்ணாம்பு கட்டி, பேட்டரிகள் மற்றும் டூத் பிரஷ்களை கூட தின்பவர்களாக இருப்பார்கள். கர்ப்ப காலங்களில் இரும்பு சத்து பற்றாக்குறையால் கர்ப்பிணிகள் நிலக்கரியினை உண்பதும் இதனால் தான் என தெரிவித்தனர். தற்போது இந்த குறைபாட்டிற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வரும் டெம்பஸ்ட் குளியல் அறையில் சோப்பு கட்டிகள் மற்றும் டிடர்ஜென்டுகள் பயன்படுத்துவதை தவிர்க்கிறார். அவற்றுக்கு பதிலாக திரவம் அடங்கிய பாட்டில்களை பயன்படுத்துகிறார். படிப்படியாக இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...