12 September, 2011

ஒரே படுக்கையில் `ஒன்றாக’ இருக்கிறீர்களா?

கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.
இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரிசோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில செல்லமான தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல்,கால்களை மேலே போடுதல் போன்றவற்றை அவர்கள் தொல்லைகளாக குறிப்பிட்டனர்.
இதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட்டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட்டால், அவர்கள் `டைவர்ஸ்’ வரை போய்விட நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்தனர் அந்த ஆய்வாளர்கள்.
பின்குறிப்பு : இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருளலாம், புரளலாம்! காதலர்கள்? கட்டாயம் ஒரே கட்டிலில் படுத்து தூங்க கூடாது!....................

6 comments:

  1. அவர்கள் கலாச்சாரமும் நம் கலாச்சாரமும் வேறு வேறு என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது

    ReplyDelete
  2. அவர்கள் கலாச்சாரமும் நம் கலாச்சாரமும் வேறு வேறு என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது-வியபதி
    உண்மைதான்! நம்முடைய அன்னியோன்யத்தின் அடையாளமே இதுதான்!! கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. என் மனதில் பட்டதை, வியபதி சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  4. Madhavan Srinivasagopalan said...

    என் மனதில் பட்டதை, வியபதி சொல்லிவிட்டார்.
    உண்மைதான்! இது ஆராய்ச்சி செய்தியின் பகிர்வுதான்!!வருகைக்கு மற்றும் கருத்துக்கு நன்றி .

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...