03 October, 2011


தரையில் இரை தேடும் ஹூபோ
மரங்கொத்தி என்றவுடன் நம் அனைவருக்கும் மனத்திரையில் தோன்றும் பறவை இதோ இந்தப் பறவை தான். 
ஆனால் இப் பறவையின் பெயர் ஆங்கிலத்தில் ‘ஹூபோ’ என்பதாகும். விஞ்ஞானிகள் இதை ‘உபாபா இபாப்ஸ்’ என்பர். காரணம் என்ன தெரியுமா? இது கத்தும்போது ‘உப்பாப்பாப்...உப்பாப்பாப்..’ என்று குரல் எழுப்பும் என்பதுதான்.
கருங்கல் இடைவெளியில் ஹூபோவின் கூடு
உண்மையான மரங்கொத்தி போல இது மரத்தைக் கொத்தி ஒரு பொந்து செய்து அதன் கூட்டை அமைப்பதும் இல்லை. மரம் கொத்தி போல மரப் பட்டைகளின் இடையே இருந்து புழு பூச்சிகளைத் தேடி உண்பதும் இல்லை. சுவர்களில் உள்ள இடைவெளி களிலோ அல்லது மரங்களில் ஏற்கெனவே உள்ள பொந்துகளிலோ தனது கூட்டினை அமைத்துக் கொள்ளும். இரை தேடுவது தரையில் கிடக்கும் இலை, சரகு, கற்கள் இவற்றைத் தள்ளி அவற்றுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளை.
இதன் கூட்டருகே மனிதர்களோ, பூனை, காகம் போன்றவையோ நெருங்கினால் குச்சி போலத் தோன்றும் கொண்டைச் சிறகினை விசிறி போல் விரித்துக் கொண்டு “சர்...சர்...சர்...” என்று கத்தியபடி மேலும் கீழுமாகப் பறக்கும். உண்மையான மரங்கொத்திகள் அடிமரத்தினைத் தனது கால் விரல்களால் இறுகப் பிடித்த படி சுற்றிச் சுற்றி மேல் ஏறும். அவ்வாறு ஏறும் போது தனது அலகினால் மரப் பட்டையினை டொக் டொக் டொக் என்று தட்டிக் கொண்டே செல்லும். சில சமயம் ஏதோ மறந்து விடடாற்போல சர்ரென்று செங்குத்தாகக் கீழிறங்கி மரப் பட்டையினைத் தட்டிப் பார்க்கும். அப்படிச் செய்வது மரப் பட்டைகளுக்கு இடையே இருக்கும் புழு பூச்சிகள் மற்றும் வண்டுகள் செய்துள்ள துளைகள் இவற்றைக் கண்டு பிடிக்கவே. உணவு கிடைக்கும் என்று தெரிந்த உடன் தனது வலுவான அலகினைக் கொண்டு அவ்விடத்தில் ஒரு துளை செய்து தனது நீண்ட நாக்கினை உள்ளே விட்டு புழு, பூச்சி, வண்டு இவற்றை ஈட்டியினால் குத்தி இழுப்பதுபோல் வெளியே இழுத்து உண்ணும்.
மரங்கொத்தியின் நாக்கு 10 முதல் 15 சென்டிமீடர் நீளத்திற்கு எலியின் வால் போன்று இருக்கும். நுனியில் அறை சென்டிமீடர் தூரத்துக்கு ஈட்டி முனையில் இருப்பது போன்ற பல அலகுகள் இருக்கும். இவ்வாறு அமைந்திருப்பதால் புழு, பூச்சி, வண்டு இவற்றைக் குத்தி வெளியே கொண்டுவர முடிகிறது.
மரங்கொத்தி கூடு அமைப்பது பார்க்க வெகு வேடிக்கையாக இருக்கும். தனது கால் விரல்களினால் மரத்தினை இறுகப் பிடித்துக் கொண்டு உளி போன்ற அலகினால் வேகமாக ‘டொக்..டொக்..டொக்..’ என்று கொத்தி சுமார் மூன்றங்குலம் விட்டம் கொண்ட ஒரு துளை செய்து பின் அத் துளையினை கீழ் நோக்கி 6 முதல் 8 அங்குல நீளத்திற்குக் கொண்டு செல்லும். பின் துளையின் விட்டத்தை சற்று அதிகரிக்கும். இவ்வாறு அதிகரிக்கப் பட்ட பாகம் 3 முதல் 4 அங்குலம் வரையிலான நீளத்திற்கு இருக்கும். இந்த பாகம் தான் அது முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் அறை. மரத் துகள்கள்தான் குஞ்சுகளுக்கு மெத்தை.
மரங்கொத்தி கூடு அமைப்பதற்காக மரத்தினைக் கொத்தும்போது மின் துளைப்பானால் துளை போடுவது போல நாலா பக்கமும் மரத் துகள்கள் வாரித் தெரிக்கும். மரங்கொத்தியின் மற்றொரு தமிழ்ப் பெயர் தச்சன் குருவி! சரியான பெயர் தான்!
மரங்கொத்திகளுக்கு இறைவன் அதன் வாழும் முறைக்கேற்ப சில விசேஷ அமைப்புகளை அளித்திருக்கிறான். அது மரத்தினைக் கொத்துவதற்கு ஏற்ற உளி போன்ற அலகு, கொத்தும் போது ஏற்படக்கூடிய எதிர் சக்தியில் கீழே விழுந்து விடாமல் இருக்க உடும்புப் பிடியெனப் பிடிக்கும் கால் விரல்கள், எதிர் அதிர்வுகளைத் தாங்கும் தசைகள் அடர்ந்த கழுத்து, அதிர்வுகள் மூளைக்குச் சென்று தாக்காமல் இருக்க மிருதுவான மண்டை ஓடு, இரையைக் குத்தி வெளியே கொண்டு வர லாயக்கான நீண்ட நுனியில் அலகுகள் கொண்ட நாக்கு இப்படிப் பல.
“பறவைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்” என்று கண்ணதாசன் பாடியது நினைவுக்கு வருகிறதா?
நம் நாட்டில் நான்கைந்து வகையான மரங்கொத்திகள் காணப் படுகின்றன. அவற்றில் சிலவற்றினைக் கீழே பாருங்கள்.

தங்க நிற முதுகு கொண்ட மரங்கொத்தி தங்க நிற மார்பு கொண்ட மரங்கொத்தி
இமயத்து மரங்கொத்தி. 
நீலகிரி: இம்மாவட்ட வனப்பகுதி களில் பல்வேறு வித பறவைகள் காணப்படுகின்றன. இதில், "பிசிடே' என்ற பறவையின குடும்பத்தை சேர்ந்த எட்டு வகை மரங்கொத்தி பறவைகளும் அடங்கும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு, வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக, இவை மரங்களை கொத்துகின்றன. மரத்தில் பொந்து ஏற்படுத்தி குடியிருக்கின்றன. "பொன் முதுகு' மரங்கொத்தி பறவைகள் குன்னூர், கொலக்கம்பை, பர்லியார், ஆடர்லி வனப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. பொன் முதுகு பறவைகள், மரங்களை கொத்தும் வேகம் வியப்பூட்டுவதாக இருக்கும். மரங்கொத்தி பறவைகளின் கண்கள், எலும்பு, திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றிற்கு எவ்வித அதிர்வோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. பறவை கண் விழிகளின் மேல், இமையை திறந்து மூடும் வகையில் அமைந்துள்ள ஒரு படலம், இப்பறவைகள் மரங்களை கொத்தும்போது தெறிக்கும் மரச்சிராய், மரத்துகள்களில் இருந்து அவற்றின் கண்களை பாதுகாக்கின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி, வேதனை, பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்களின் உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன.
மரங்தொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது என்பது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடாந்து மரத்தை துளையிட்ட போதிலும் அதற்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறோம். மரங்கொத்தியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறைவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படும். இருப்பினும் ஒரு மரங்கொத்தியால் 2-3 வினாடிகளில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும். ஆதன் மூலம் அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

எவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது.

மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.

மரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.

அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது.

மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன. 
அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு.

மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை கொத்தும் போது அதன் மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தி யின் நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போல இருக்கும். இதனால் அதிர்வில் இருந்து மூளை பாதுகாக்கப்படுகிறது.

மரங்கொத்தி பறவைகளின் கண்கள் எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றுக்கு எவ்வித அதிர்வுகளோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை என வன உயிரின ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மரங்களை முட்டி மோதும் போது மூளை கலங்கவோ உள் மண்டை ஓட்டுடன் முட்டி மோதும் வாய்ப்புள்ளது. அளவில் மரங்கொத்தி பறவைகளின் மண்டை ஓட்டுடன் மூளை முட்டி மோதும் வாய்ப்பில்லை; இதன் நாக்கு மண்டை ஓட்டை சுற்றியே வளைந்திருக்கும்.பறவை கண் விழிகளின் மேல் ஒரு ஜவ்வு போன்ற படலம் இமையை மூடித்திறக்கும் வகையில் அமைந்திருப்பதால் மரங்களை கொத்தும் போது தெளிக்கும் மரச்சிராய்மரத்துகள்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. அற்புதமான உடலமைப்பு மற்றும் பாதுகாப்பு கவசங்களை இயற்கை அளித்துள்ளதால் மரங்கொத்தி பறவைகள் எவ்வித வலி வேதனை பாதிப்பு இல்லாமல் மரங்களை கொத்தி தங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்துக் கொள்கின்றன

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...