கொன்றுவிடும் காமம்!

ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு  கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும்.

இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் கருவுற்ற முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும்.மூட்டைப்பூச்சியின் அட்டகாசம்

வளர்ந்த ஆண் மூட்டைப் பூச்சி பாலுறவு கொள்ள முயலும் போதுதான் பெண் மூட்டைப் பூச்சிக்கு பெண் குறி இல்லை என்பதை அறியும். ஆனாலும் அது மனம் தளராமல் தன் ஆண் குறி மூலம் பெண் மூட்டைப் பூச்சியின் உடலில் துளையிட்டு ஒரு பெண்ணுறுப்பை உருவாக்கி அதன் மூலம் பாலுறவுக் கொள்ளும்.

முடிந்தவுடன் தின்றுவிடும் காதல்

தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான்.


அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் உயிரினம்

அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால் ஆண் சிங்கம் இறந்துவிடாது! சிங்கமில்ல!

மனிதனிடம் விலங்கு குணம்


மனிதன் தவறான செய்கை என கருதப்படும் பாலியல் பலாத்காரம், பெண்ணை துன்புறுத்தி இன்பம் காணல், பலர் சேர்ந்து இன்பம் காணல் எல்லாம் விலங்கினங்களிலும் உள்ளது.

சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன.

பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடித்த ஆண் கழுதை கடித்து  அல்லது உதைத்து உயிரிழந்தவர்கள் ஏராளம்.

Comments

 1. முனிசாமி. மு said...

  super details
  வாங்க சார் வணக்கம்! வருகைக்கு நன்றி!!

  ReplyDelete
 2. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete
 3. தெரியாத விடயங்கள்.... நன்றி

  ReplyDelete
 4. அறியாத தகவல்...

  ReplyDelete
 5. SO VERY VERY NECE DEAR FRIENDS...

  ReplyDelete
 6. சிறப்பான தகவல் டாக்டர் , இவற்றை பற்றி நானும் எழுதி இருக்கிறேன் ( சற்றே வித்தியாசமாக ) - http://kulaebagavali.blogspot.com/2011/12/blog-post.html

  ReplyDelete
 7. Dr.Dolittle said...

  சிறப்பான தகவல் டாக்டர் , இவற்றை பற்றி நானும் எழுதி இருக்கிறேன் ( சற்றே வித்தியாசமாக ) - http://kulaebagavali.blogspot.com/2011/12/blog-post.html

  தங்கள் வருகைக்கு நன்றி! படித்தேன் அந்த குஞ்சு பக்கத்தை!! வித்தியாசமாக மட்டும் அல்லாமல் அறிவியல் பூர்வமாகவும் விளக்கமாகவும் இருந்தது. பாராட்டுக்கள் மற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள், குலோபகாவலி இணை பூக்களுக்கு சென்று பாருங்கள். அருமையாக உள்ளது.

  ReplyDelete
 8. \\பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும். \\ தேனிக்கு இரத்தம் இருக்குமா? அப்படியா.........!! All interesting information, thanks.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?