08 October, 2011

`நேத்து வச்ச மீன் குழம்பு… நல்லதா?!


மீன் குழம்பை பொருத்தவரை வைத்த அன்றே ருசித்தால் சுவையில்லை! அடுத்த நாள் அந்த மீன் குழம்பு மசாலாவில் ,சக்கரை பாவில் ஊறும் குலாப்ஜாமூன் கணக்காக மீன் துண்டுகள் ஊறி செழுமையாக வாசனையாக வா வா கவர்ந்து அழைக்கும் மீன் குழம்பை சுடு சாத த்தின் தலையின் ஊற்றி ஒரு பிசை பிசைந்து ஒரு கவளம் சாதம் பசைந்து மற்றும் மீன் துண்டுக்கு வலிக்காமால் பதமாக இரு உதடுகளை கொண்டு பதமாக கவ்வி மெது மெது மீன் சதை பகுதியை முள் படாமல் உள்ளே தள்ளும் போது ஆஹா.... அந்த மணமும் ருசியும் எந்த குழம்புக்கு வரும் என அனுபவித்த ரசனையாளர்கள் ஜொல்லுடன் கூறுவதுண்டு.


அந்த`நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எந்த வகை உணவாக இருந்தாலும் அதிலிருக்கும் மினரல்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் சமைத்த உடன் வெளிவரும் என்பதால், சமைத்த சூடு அடங்குவதற்குள் சாப்பிட்டால் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உணவு ஆறிய பின்னர் சாப்பிடுவதால் அது வெறும் சக்கைதான். அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது அதைவிட வேஸ்ட்! சுவையும் இருக்காது.

பிரியாணி, மீன், கோழி, மட்டன் குழம்பு மற்றும் பிற அசைவ உணவுகளை நாள்விட்டு சாப்பிட்டால் சில நேரங்களில் `புட் பாய்ஷன்ஆகவும் மாறலாம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக அலர்ஜி மற்றும் தோல் நிறம் மாறும். அதேபோல், காய்கறிகளை நறுக்கி பிரிஜ்ஜில் வைத்து அப்புறம் சமைப்பது, குழம்பை பிரிஜ்ஜில் வைத்து, அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது என்பதெல்லாம் நோய்களை நாமே தேடிக்கொள்வதற்கு சமம்!

இருக்கட்டும், இருக்கட்டும். அந்த நேற்று வைத்த மீன் குழம்பு..... கொஞ்சம்........

2 comments:

  1. சமைத்து 4 மணிநேரத்திற்குப் பின் பயோலாஜிகல் வேல்யூவை உணவு மெல்ல இழக்கலாகிறது! அதாவது சமைக்கப்பட்ட உணவின் சத்துகள் மெல்ல காலாவதியாகிறது! உணவ சக்கையாகிறது! இத்தகைய உணவு சாப்பிடுவோர் உற்சாகம் குறைந்தும், வயிற்றுக் கோளாறுடனும் இருப்பர்!

    ReplyDelete
  2. உண்மைதான், ஆனால் இந்த அவசர யுகத்தில் சில விஷயங்களை அட்ஜஸ்ட் செய்யத்தான் வேண்டி இருக்கிறது!

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...