ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.
இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல்டோனர்’ என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், Aகுரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன்இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.
ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனிஅவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.
ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோஅல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் அடைந்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன்கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.
ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்;இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி –விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக்காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும்.இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.
ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவர் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.
யார் ரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organtransplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.
மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.
தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியைநான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.
ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது.தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும்நேரத்தைவிடக் குறைவுதான்.
ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?
ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.
ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.
பிறக்க போகும் குழந்தை என்ன பிளட் குரூப் ஆக இருக்கும்:-
கணவர் பிளட் குரூப் | மனைவி பிளட் குரூப் | குழந்தையின் பிளட் குரூப் |
A | A | A |
A | B | A or B or AB |
B | B | B |
A | O | A or O |
O | AB | O Or A Or B or AB |
B | O | B or O |
B | AB | B or A or AB |
AB | A | A or AB or B |
இந்த சார்ட் ஐ வைத்துக்கொண்டு பிறந்த உங்கள் குழந்தைகளின் பிளட் குரூப்பை பார்த்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்திகொள்ளவேண்டாம்! கதம்!! கதம்!!!
உங்கள் பிளட் குரூப் என்ன என்று இன்றே தெரிந்துவைத்துகொள்ளுங்கள்!
தேவையான நல்லதொரு பதிவு! நன்றி!
ReplyDeleteரம்மி அவர்களுக்கு நன்றி! அடிக்கடி வந்து ஃபுல் வாங்கி செல்லுங்கள்!
ReplyDeleteசொன்னதெல்லாம் கால்நடைக்கும் பொருந்துமா?டாக்டர்.சும்மா...ஹிஹி.
ReplyDeleteசொல் சிக்கனத்துடன் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. நல்ல விபரங்கள் எழுதியமைக்கு நன்றி. ஆசிரியர் குழுவிற்க்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஒரு விளக்கம் தேவை: எந்தெந்த ரத்த வகையினருக்கு எந்தெந்த வியாதிகள் மட்டுமே வரும் அல்லது வரவே வராது என சொல்ல முடியுமா?
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteசீனுவாசன்.கு said...
ReplyDeleteசொன்னதெல்லாம் கால்நடைக்கும் பொருந்துமா?டாக்டர்.சும்மா...ஹிஹி.
கால்நடைகளுக்கு ஏகப்பட்ட பிளட் குரூப்கள்!
முதல் தடைவை இரத்தம் கொடுக்கும் போது எந்த பிளட் குரூப் கொடுத்தாலும் ஆன்டிஜன் எதுவும் தடை செய்வதில்லை!
anbu said...
ReplyDeleteஒரு விளக்கம் தேவை: எந்தெந்த ரத்த வகையினருக்கு எந்தெந்த வியாதிகள் மட்டுமே வரும் அல்லது வரவே வராது என சொல்ல முடியுமா?
அப்படியெல்லாம் உறுதியாக சொல்லமுடியாது! O பிளட் குரூப் உடையவர்களுக்கு சிக்குன் குன்யா அதிகம் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாம்!!
very nice
ReplyDeleteவிஷயத்தை கொஞ்சம் ஆழமாகவே தொட்டுள்ளீர்கள். பயனுள்ள தகவல்கள். நன்று.
ReplyDeleteஇரத்த தானம் குறித்த எனது பதிவு
http://vaazhveperaanantham.blogspot.com/2011/10/blog-post.html
வந்து பாருங்களேன்.
ரசிகன் said...
ReplyDeleteவிஷயத்தை கொஞ்சம் ஆழமாகவே தொட்டுள்ளீர்கள். பயனுள்ள தகவல்கள். நன்று.
இரத்த தானம் குறித்த எனது பதிவு
http://vaazhveperaanantham.blogspot.com/2011/10/blog-post.html
வந்து பாருங்களேன்.
வருகை தந்தமைக்கு நன்றி! படித்தேன்! தெரிந்துகொள்ள வேண்டியது! மேலே உள்ள பதிவில் அனைவரும் சென்று பயனடையுங்கள்!!
தாராளமாக செய்யுங்கள். விழிப்புணர்வு அதிகம் பரவும் போது, அவஸ்தைகள் காணாமல் போகின்றன. உயிர் காப்பதை விட நாம் செய்யும் சிறந்த பணி வேறு எதுவாக இருக்க முடியும்? உங்கள் அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியையும், நல்லது எழுதி உள்ளோம் என்ற மன நிறைவையும் தருகிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா.
ReplyDelete