24 April, 2011

மயிலாட்டம்!அது ஒரு காமகளியாட்டம்??

Peacock  dance
ஆண்மயிலின் அந்தபுரத்தில் எப்பொழுதும் 3-5 பெட்டைமயில்கள் இருந்து கொண்டே இருக்கும் ஆண்மயிலுக்கு காதல் வரும் வரை பெட்டை மயிலைசீண்டாது ! பேசாமல் இரையை பொறுக்கி கொண்டேஇருக்கும்!
ஆண் மயிலுக்கு ஆசை வந்து விட்டால் தன் கழுத்தை சற்றே வளைத்து அதன் நீல நிறக் சிறகுகளை சிலிர்த்தப்படி தன் கம்பீர நடையை பெண் மயிலுக்கு காட்டும்!
இந்த வீர நடையும்  பெண் மயிலை ஈர்க்கவில்லையெனில் இருக்கவே இருக்கிறது கலாப மயிலாட்டம்! ஆஜானுபாகுவாய் தன் தோகையை விரித்தாடும் !! இந்த நிலையில் ஆண் மயிலின் தோற்றம் அனைத்துபெட்டை மயில்களையும் கிறங்கடித்துவிடும்! அனைத்து பெண் மயில்களும் போட்டிபோட்டுக் கொண்டு வாலைத் தூக்கியவாறு" என்னை ,என்னை "என்று ஆண் மயிலை கேரோ செய்துவிடும்!
ஆண்மயில் ஸ்டைலாக கழுத்தை திருப்பி பார்த்து (மனதிற்குபிடித்த) ஒரு பெட்டையை செலக்ட் பண்ணி அதைத் துரத்திக் கொண்டும், கொத்திக்கொண்டும் ,சற்றுநேரம் 'முன்' விளையாட்டைஆடும் ! பார்ப்பதற்கு இந்தவிளையாட்டு சண்டைபோல் தோன்றும் இந்தவிளையாட்டு ஓய்ந்த பின்சரக்கென்று இரண்டும் மறைவிடத்தில் குறைந்த நேரத்தில் தனது ஜோலியை முடித்துவிட்டு ஒன்றுமே நிகழவில்லை என்பதுபொல சமர்த்தாக வெளியேவந்துவிடும்! எனவேதான் நம்மால் எளிதில் "அந்த" காட்சியை பார்க்க முடிவதில்லை!!





No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...