24 April, 2011

பெண் இணைக்காக ஆண் ஆமைகள் நடத்தும் மல்யுத்தம்!!

பொதுவாக மழை காலத்தித்தில்தான் ஆமைகளுக்கு காதல் ஆவேசம் ஆர்ப்பரிக்கிறது !!
கொஞ்சம் பொறுங்கள் !!
அதற்கு முன் ஆமைகளின் பொதுவான குறிப்புகளை காணலாம்!
செலோனியா( Chelonia) எனும் பிரிவில் ஆமைகள் வருகிறது
1.   கடல்வகை
2.   நன்னீர்வகை
3.   நிலவகை
என்று மூன்று வகைகள் உள்ளது
மேலும் அவைகளில் 400 க்கும் அதிகமான உட்பிரிவுகள் உள்ளன
நீர்ஆமை, சேற்றுஆமை, ரிட்லிஆமை, நட்சத்திர ஆமை !என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் . நட்சத்திர ஆமை அடிக்கடி கடத்தப்பட்டு ஏர்போட்டில் மாட்டிக் கொள்ளும் இனம்!!
150 ஆண்டுகள் வரை இவைகளுக்கு ஆயுல் கெட்டி!!
நம் நாட்டில் குஜராத், ஒரிசாக் கடற்கரைகளிலும், லட்சத்தீவுகள் மற்றும் அந்தமான் தீவுகளிலும் அதிகம் காணப்படுகிறது!
ஆமைகள் ஆபத்துக் காலங்களில் தலையும் கால்களையும் ஓட்டிக்குள் ஒளித்துக் கொண்டு எதிரிக்கு கண்ணாமுச்சு விளையாட்டு காட்டும் !
ஆனால் கடல் ஆமைக்கு இப்படி ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளத் தெரியாது!
அநேக ஆமைகள் நான்-வெஜிட்டேரியன்தான் மீன்,தவளை,நண்டு,நத்தை எனபலசைன்னீஸ்மெனுவை பதம் பார்க்கும்.
வெறும் கடற்பாசி கடற்புல் போன்ற தாவரங்களை மட்டும் சாப்பிட்டு வாழும்ஆச்சாரமானஆமைகளும் உண்டு.
சில வகை ஆமைகள் சோம்பேறிகள்!! தன் வாயருகில் இரை வந்தால் மட்டும் ஸ்வாக செய்யும்!!
அதற்காகவே இத்தகைய கடல் ஆமைகளின் வாயருகில் புழு போன்ற ஒரு  சதை தொங்கி கொண்டிருக்கும் இதை புழு என்று நம்பி சில மீன்கள் அருகில் வரும் போது ஆமைக்கு வேட்டைதான்!! என்ன ஒரு ஏமாற்றுத்தனம்?
ஒரு கொசுறு விசியம்:ஆமைகளால் உணவில்லாமல் இரண்டு ஆண்டுகள் கூட உயிர் வாழ முடியும்
ஆமைகளின் அந்தரங்க விளையாட்டு!
பொதுவாக மழைக் காலத்தில்தான் ஆமைகளுக்கு காதல்ஆசை வருகிறது!
ஆண் ஆமைகள் கடற்கரை விளிம்பில் கம்மீரமாக மிடுக்காக காத்திருக்கும் பெண் ஆமை எதிரில் தெரிந்தால் வயசுபையன்
காலரை தூக்கி விடுவது போல் ஆண் ஆமைகழுத்தை அப்படி இப்படிஅசைத்து நடனம் ஆடி காதல் லுக் விடும் இந்தப் பார்வையின் வீச்சில் ஸ்தம்பிக்கும் பெண் ஆமையுடன் இணைசேரும். பெண் இணைக்காக ஆண் ஆமைகள் நடத்தும் போராட்டத்தில் இரண்டு ஆண் ஆமைகளும் ஒன்றையொன்று மல்லாக்கக் கவிழ்த்துப் போட முயற்சிக்கும் இந்த மல்யுத்த போட்டியில் வெற்றி அடையும் ஆண் ஆமைக்கு போனஸாக மேலும் ஒரு பெண் ஆமைஉண்டு!!




No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...