யானைகள்புரோபோஸிடியே(PROBOSCIDEA) என்னும் குடும்பத்தை சார்ந்தது
1.ஆப்பிரிக்காவின் பிரம்மாண்டமான சவானா யானை
2.ஆசிய யானை
இதில் ஆப்பிரிக்காவின் சவானா யானை நம்ம ஊர் யானையை விட புஷ்டி!
மெகா சைஸ் காதுகள் பின்னங்காலில் மூன்றே நகங்கள்! நம்ம ஊர் யானைக்களுக்கோ நான்கு நகங்கள்!!
சவானா யானைகள் அதிகபட்சம் 10 அடி உயரம், எடையோ 6500 கிலோவரை இருக்கும்.நம்ம ஊர் யானை இதை விடகுறைவுதான்!
இந்தியாவில் கேரளா ,மைசூர், பீகார், ஒரிசா, அசாம், உ.பி, மேற்குவங்க, மாநிலங்களில் அதிம் வாசம் செய்கிறது.
யானைக்களுக்கு கூட்டுக் குடும்பத்தில் நம்பிக்கை அதிகம்:-
இந்த கூட்டு குடும்பத்தில் 10 உருப்படிக்கு குறையாமல் இருக்கும்
அதிகபட்சம் 50 கூட சில சமயங்களில் இருக்கும்! பாசகார குடும்பம்!!
யானைகளில் கணவனை இழந்த பெண் யானை கூட கற்பு தவறுவதில்லை! இந்த யானைகளிடம் ஏதாவது வாலிப யானை வேலை காட்ட முயன்றால் கூட்டத்திலிருந்து விலக்கப்படும்!!
யானைகளில் கணவனை இழந்த பெண் யானை கூட கற்பு தவறுவதில்லை! இந்த யானைகளிடம் ஏதாவது வாலிப யானை வேலை காட்ட முயன்றால் கூட்டத்திலிருந்து விலக்கப்படும்!!
உணவு பிறகு தண்ணீர் பிறகு உறக்கம்:
தன் பிரமாண்ட வயிரை நிறைக்க யானைகள் ஒரு நாளில் 18 மணி நேரம் மேய்ந்தாகவேண்டிய கட்டாயம் கரும்பு தோட்டத்தில் ரெய்ட் செய்தால் இன்னும் நேரம் குறையும்.!!
கரும்பு,பனைஓலை,தென்னங்கீற்று,புல்வகைகள் என வெரைட்டியாக ஒரு பெரிய யானை ஒருநாளில் 350 கீலோவை ஸ்வாகா செய்துவிடும்.
பிறகு 250 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு யானைகள் நின்று கொண்டே தூங்கும்!
இயற்கை அளித்த ரெயின்கோட்!!
யானையின் தோல் 3 செமீ அளவில் தடிமனாக இருந்தாலும் இதனால் வெயில் தாக்கு பிடிக்க முடியாது. அதனால்தான் இந்த நேரத்தை பெரும்பாலும் தூங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் குளிர் மழை பற்றி இவற்றுக்கு ஒருபொருட்டு இல்லை. இந்த நேரத்தில் 12 ஆயிரம் அடி உயரத்தில் கூட இவைகள் ஜாலியாக பாட்டுபாடி கொண்டு பவனி வரும்!!
No comments:
Post a Comment