06 May, 2011

தடவி தடவியே காமத்தை உசுப்பும் கரப்பான் பூச்சி!!

பெண்களும் கரப்பான் பூச்சியும்!

சில பெண்களுக்கு கரப்பான் பூச்சியை கண்டாலே போதும் பயமா? அல்லது அருவருப்போ! என தெரியவில்லை, ஒருவீல்அலறலுடன் அருகில் இருக்கும் ஆண் இடுப்பில் தெலுங்கு பட கதாநாயகி கதாநாயகன் இடுப்பில் ஏறுவது போல் ஏறிக் கொண்டு கீழே பயத்துடன் பார்க்கப்படும் ஜந்துதான் கரப்பான் பூச்சி!
எந்த தீங்கும் செய்யாத அப்பாவி ஜீவன்!
உடனே யாரும் ஒரு கரப்பான் பூச்சியுடன் ஏதாவது ஒரு அழகியை தேடி புறப்பட்டுவிடாதீர்கள்! நம்ம ஊர் பெண்கள் நசுக்கிவிடுவார்கள்! கரப்பான் பூச்சியைதான்!!
கரப்பான் பூச்சியை நசுக்கினால் ஒரு விதமான கெட்ட வாசனை  இதை எத்தனை டெட்டால் சோப் போட்டாலும் போகாது! பல வகையான ஸ்பிரே அடிக்க வேண்டியுருக்கும்!
கரப்பான் நசுக்கும் போது ஒரு விதமான வெள்ளை திரவம் வெளியே வரும். இதுதான் கரப்பான் பூச்சியின் ரத்தம்!
சிவப்பணுக்கள் இவற்றுக்கு இல்லாதால் இந்த வெள்ளை நிறம்! பிராட்டிடே (Blattidea) என்ற குடும்பத்தை சார்ந்த இந்த கரப்பான் இனத்திற்கு!!

இருட்டு வாழ்க்கை? திருட்டு வாழ்க்கை?

இருட்டு வாழ்க்கைதான் இதற்கு இனிமையான வாழ்க்கை! மர இடுக்கு, சுவர் இடுக்கு, டாய்லட், கிச்சன்,கப்போர்டு என பல இடங்கள் இதன் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தாலும் பேக்கரி இதற்கு வசந்த மாளிகை!! ஏனென்றால் கரப்பான் பூச்சிக்கு மிகவும் பிடித்த உணவு மாவுப்பொருளும் இனிப்பு பதார்த்தங்களும்தான்.இவைகள் கிடைக்கும் இடம்தான் சாப்பாட்டு பிரிய கரப்பான்களுக்கு சொர்க்கபுரி!!
பகலில்தான் இந்தஇடம்! இரவு ஆகிவிட்டால் இவைகளுக்கு குஷி கிளம்பிவிடும் குடும்ப பெண் போல் குனிந்த தலை நிமிராமல் மூன்று ஜோடிக் கால்களால் வேகநடைப் போட்டு டின்னருக்கு கிளம்பிவிடும். உணவு பொருள்கள்,பேப்பர்,தோல் பொருள்கள், துணைமணிகள், இறந்து கிடக்கும் வேறு ஜீவராசிகள் என எந்த ஐட்டங்களையும் விட்டு வைப்பதில்லை. கரப்பான்கள் தண்ணீர், உணவு இல்லாமல் 3 மாதங்கள் கூட உயிர் வாழும்!
கரப்பானின் பின்புறத்தில் சுரக்கும் ஒரு திரவம்தான் அலாதியான வாசனை! சில பெண்கள் வாந்தி எடுக்கவைத்துவிடும்!! (அருஅருவருப்பு வாந்திதான். ) இந்த வாசனை எந்த எந்த பொருள்கள் மேல் தவழுகிறதோ அதன்  மேல் எல்லாம் அதன் வாசனை முத்திரையை பதித்துவிடும்

கரப்பான்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்!

கரப்பான் பூச்சிகளில் 7000 க்கும் மேற்பட்ட இனங்கள் பூமியில் வசிக்கிறது பெரும்பாலனவை பிரவுன்நிறத்திலேயே இருக்கிறது புள்ளி மற்றும் வரிமாடல் அழகிகளும் உண்டு. ஜெர்மன் கரப்பான், ஓரிண்டல் கரப்பான், ஆஸ்திரேலியன் மற்றும் அமெரிக்கன் கரப்பான்கள் போன்ற பிரசித்தி பெற்ற இனங்களும் உள்ளன.
கரப்பான்களுக்கு உடலின் நீளவாக்கில் இதன் ரெக்கைகள் அமைந்திருப்பது ஒரு விநோதம் !ரெக்கைகள் இருந்தும் இதற்கு பறப்பதற்கு ஆர்வம் இருப்பதில்லை. வேக நடையில் தான் விருப்பம். சில நேரம் ஜோராக ஓடும். இரையை தேடிப்புடிக்க வேண்டிய அவசியம் இவைகளுகளுக்கு இல்லை. அபாய சூழலில் தப்பிப்பதற்கு மட்டும் சிலசமயங்களில் கொஞ்சம் பறக்கும்!

ஆசையை தூண்டும் ஆண்டனா!

இந்த இருட்டு பேர்வழி கரப்பான் க்கு ஆண்டனா போன்று இரண்டு சாட்டை  தலையின் முன்புறம் நீட்டி கொண்டிருக்கும். இருட்டில் தியேட்டர் முன்னால் இருக்கையில் இருக்கும் நல்ல பிகருக்கு சீட்டுக்கடியில் கால் விட்டு சிக்னல் தருவது போல? ஆண் கரப்பான் தன்னுடைய ஆண்டனாவை மெதுவாபெண் கரப்பான் பூச்சியின் மேனியில் ஒரு இடம் விடாமல் படரவிட்டு தடவும், அதற்கு நான் மட்டும் சளைத்தவளா? என்பது போல் பெண் கரப்பான் தன் ஆண்டானாவையும் ஆண் கரப்பான் மேல் தடவும்! அங்கு காதல் கெமிஸ்ட்ரி நடந்து விட்டது என அர்த்தம்! பின் அடுத்தகட்ட வேலையாக தன் காலில் உள்ள முசு முசு  பிரஷ் கொண்டு உடம்பெல்லாம் ஸ்லோ மோஷனில் தடவி பெண் கரப்பானை காமத்தின் உச்ச நிலைக்கு உசுப்பி விடும் ( தமிழ் கதாநாயகன் மயில் இறகு கொண்டு கதாநாயகி முகத்திலிருந்து பாதம் வரை தடவுவது போல்?) பெண் கரப்பான் காதல் வயப்பட்டு மயங்கி இருக்கும் சமயம் பார்த்து சட்டென்று ஆண் கரப்பான் மேலே ஏறி  பெண் கரப்பான் பின் புறத்தில் இருக்கும் ஒரு பையில் உயிரணுக்களை நிறைத்து விட்டு கடமையை நிறைவேற்றிய கர்ம வீரனாக இறங்கிவிடும்!

கர்ப்பத்தை லக்கேஜ்ஜாக சுமக்கும் பெண் கரப்பான்
 
பெண் கரப்பான் சில நாட்களில் சிரத்தையுடன் சுமார் 15 முட்டைகளை கருவுறச் செய்யும். (ஜெர்மன் கரப்பான் 30 முதல் 40 முட்டைகள கூட கருவுறச் செய்யும்) சில வகை கரப்பான்கள் ஆண் கரப்பான் துணையில்லாமலேயே முட்டைகளை கருவுற செய்யும் திறன் கொண்டது.(Parthenogetic) பிறகு தன் உடம்பில் சுரக்கும் ஜெல் போன்ற வஸ்துவால் ‘ஓதிகா’ எனும் கெட்டியான முட்டைக்கவசத்தை உருவாக்கும். கவசத்தில் ஒரு பேட்ஜ் முட்டைகளயும் பேக் பண்ணி ஓரிருவாரத்திற்கு பின்புறத்தில் இதைச் சுமந்து கொண்டு திரியும். அதன் பின் ஒரு இடுக்கில் கவசத்தை பெவிக்கால் போட்டு ஒட்டிவிடும்.
முட்டைகள் அடங்கிய மூட்டை
முட்டை பொரித்து ‘நிம்ஃப்’ எனப்படும் குஞ்சுப் பூச்சிகள் தாயின் சாயலியேயே பிரசவிக்கும். இக்குஞ்சுகள் எட்டுமாதங்களில் ஏழு முறை தோலுரித்துக் கொண்டு வளர்ச்சியைக் கம்பிளிட் பண்ணுக்கின்றன. ஒவ்வொரு பெண்கரப்பானும் தன்வாழ்நாளில் ஆவரேஜாக 750 வாரிசுகளை (பெண்களின் தீவிரவாதிளை?) தயாரித்து ரிலீஸ் செய்துகொண்டே இருக்கும்.
நிம்ஃப்
கரப்பான்கள் 5 மாதங்கள் முதல் இரண்டரை ஆண்டுவரை கூட வாழ்கின்றன.
கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். அணுகுண்டு வெடித்தாலும் அதன் பாதிப்பையும் தாண்டி கரப்பான்கள் உயிர் வாழும் என்று ஆராய்ச்சியாளர்கள் கரப்பான்கள் மேல் ஏகத்துக்கு பொறாமை படுகிறார்கள்!
கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்பட்ட துளியளவு வேதிக் கூறுகள் சமாச்சாரங்கள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உள்ளதாம்.
இவை மருந்து வகையாக சந்தைக்கு வரும்போது, மதிப்பற்ற இந்த கரப்பான் பூச்சியும் விரைவில் மனிதரின் உயிர்காக்கும் நண்பனாக மாறலாம் என்பது ஒரு கொசுறு செய்தி!
தாய்லாந்தில் கரப்பான் பூச்சி பண்ணையே உள்ளது பயப்பட வேண்டாம்! அதை மீனுக்குக்குதான் உணவாகதான் அளிக்கிறார்கள்!
New Orleanians ஏதோ ஒரு 'விஷயத்திற்கு' கரப்பான் டீ செய்து செம குடி குடிக்கிறார்களாம்! நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்!!





No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...