04 May, 2011

பெண் ”வாசனை” தேடி ஆண் யானையின் நெடிய பயணம்!


யானையின் இனப்பெருக்கம்:-
10 வயதில் ஆண் யானைகள் வயசுக்கு வந்துவிட்டேன் என்று சில்மிஷ வேலைகளை ஆரம்பித்து விடுகிறது.
ஆனால் பெண் யானைகளோ 6 வயதில் இன பெருக்கத்திற்கு தயார் என அறிவித்துவிடுகிறது!
நான்கு மாதத்திற்கு ஒரு முறை இவற்றின் இனப்பெருக்கம் காலம் தொடங்கும்!
மூன்று மாதங்கள் அந்த “வசந்தகாலம்” நீடிக்கும் !
இனப் பெருக்க காலங்களில் ஆண் யானையின் கண்-காதுக்கு இடையே தோலுக்கிடியில் சுரப்பி மூலம் ஒரு திரவம் வெளிவரும்!
இந்த நேரத்தில் பெண் யானையை தவிர மற்றவை நெருங்காது. மீறினால் 160 பவுண்ட் எடை கொண்ட கூரிய தந்தங்களால் முட்டிக் கிழித்து விடும்! நோ ஹோமோ!!
இனபெருக்க காலத்தில் பருவத்தில் உள்ள பெண் யானையிடமிருந்து ஒருவித வாடை 2 கிலோமீட்டர் வட்டாரத்திற்கு வீசும்!
இந்த ‘வாடை’ காற்றை மோப்பம் பிடித்ததும் அதன் இணை யானை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் “அல்வாவும்,மல்லிகைபூவும்” வாங்க நேரமில்லாமல் ஓட்டமும் நடையுமாக தன்னுடைய ஜோடியை தேடி நெடிய பயணத்தை துவக்கிவிடும்!
இரண்டும் ஜோடி சேர்ந்தவுடன் இனப்பெருக்கம் காலம் முழுவதும் இந்த ஜோடி இணை பிரியாமல் ‘டுயட்’ பாடும்!!
இவை ஆயுளுக்கு கணவன்-மனைவி உறவை கைவிடாது! எய்ட்ஸ் பயம் அதிகமோ?
இரண்டு மலை குன்றுகளின் கலவை!
யானையின் உருவம் பெரிதாக உள்ளதால் இதன் கலவி பற்றி பலவித கதைகள் மக்களிடம் உலா வருகிறது!

பெண் யானையும் ஆண் யானையும் தண்ணீரில் உல்லாசமாக இருக்கும் மூடுக்கு வந்து தண்ணீருக்கு அடியில் கலவியை வைத்துக் கொள்ளும்! அப்பொழுதுதான் (எடைதண்ணீருக்கு அடியில் குறைவாக இருக்கும்) பெண்யானை ஆண் யானையின் எடை தாக்கு பிடித்து கலவியை ஏற்று கொள்ளும் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்!
தண்ணீரில் இருக்கும் பெண் யானையை மூடுக்கு கொண்டு வர சில சித்து விளையாட்டுகளை ஆண் யானைகள் செய்யும்தான்! ஆனால் கலவியை தரையில் தான் வைத்துக் கொள்ளும்!!
இன்னும் சிலர் ஆண் யானை தன் தும்பிக்கையின் உதவிகொண்டு தன்னுடைய விந்துவை சேகரித்து பெண் யானையின் பெண் உறுப்பில் செலுத்தி அதை கருவுற செய்யும் என்பர்!!
யானையின் தும்பிக்கை பல வகையில் யானைக்கு உபயோகமாக இருக்கும் உறுப்புதான்! ஆனால் ஆண் யானைகள் மேலே கூறிய விசயத்திற்கு இல்லை!!
தும்பிக்கை யானையின் ஒரு சென்சிட்டிவ் உறுப்பு! எந்த விலங்கிடமும் இல்லாத ஒரு உறுப்பு! யானையின் மேல் உதடு மற்றும் நாசி இரண்டையும் இணைத்து உருவாக்கிய நீண்ட ஒரு உறுப்பு இதைக் கொண்டு தரையில் குண்டூசியை கூட துல்லியமாக எடுத்துவிடும் இரையை எடுத்து உண்ண, சுவாசிக்க, தன்னை வாட்டர் சர்வீஸ் செய்து கொள்ள என பல பணிகளை செய்தாலும் மேற் சொன்ன விஷயத்தை செய்வதில்லை!!
 

எந்த பக்கமும் வளையும் ஆண் யானையின் இனப் பெருக்க கருவி!!
எந்த விலங்கிற்கும் இல்லாத ஒரு வசதி ஆண் யானையின் இனப்பெருக்க உறுப்பிற்கு உண்டு, அது எந்த சைடு வேண்டுமானாலும் வளைத்து இயங்கும் பாக்கியம்!!??
ஆண் யானையின் விந்தை செலுத்தும் ‘அந்த’ கருவி 1 1/2 அடி முதல் 2 அடி வரை நீளம் இருக்கும்! அம்மோடியோவ்!!
மனிதற்கு இருப்பது போல் ‘அந்த’ கருவியின் முன் பகுதியில் பல்ப் பகுதி (Gland penis) கிடையாது. ஒரு நாக பாம்பின் தலை போன்று காணப்படும்!!
பெண் யானையை ஆண் யானை மூடுக்கு கொண்டு வந்ததும் பெண் யானை ஆண் யானையை தன் மேல் தாவ அனுமதிக்கும்! (சில சமயங்களில் பிகு செய்யும் பெண் யானையை ‘வழிக்கு ‘ கொண்டு வர ஆண் யானை பயங்கர வன்முறையை கூட கடைப்பிடிக்கும்!! ரேப்?)
ஆண் யானை பெண் யானையின் முதுகில் ‘அம்பாரி’ ஏறியவுடன் ஆண் யானையின் ‘விந்தை செலுத்தும் கருவியை? ‘ முதலில் செங்குத்தாக நுழைத்து பிறகு படுக்கை வாட்டமாக செலுத்தி தன் இனவிருத்தி பணியை இனிதே, முடித்து சமர்த்தாக இறங்கிவிடும்!!
பிறகென்ன? கருவுற்ற பெண் யானை தனது 22 மாத கர்ப்பத்திற்கு பின் தன் குடும்பத்தினர் புடை சூழ பாதுகாப்பு வளையத்தில் நின்று அழகான கூச்சம் இல்லாமல் பேபியை பெற்றெடுக்கும் பிறந்த அரை மணி நேரத்தில் குட்டி யானை எழுந்து இனிமையான தாய்ப்பாலை லிட்டர்கணக்கில் உறிஞ்சி தள்ளி விடும்!!
பசுவில் உள்ளது போல் பால் சுரக்கும் விஷயம் பின்னங்கால் இடையில் இருக்காது! யானைகளுக்கு முன்னங்கால் இடையில்தான் இருக்கும்!! மனிதருக்கும் இதற்கும் என்ன ஒரு ஒற்றுமை!!
இரண்டு வருடம் வரை பால்தான் பிறகுதான் மற்ற உணவு !! மொசு மொசு குட்டி யானைக்கு!!

No comments:

Post a Comment

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...