14 May, 2011

புலிகளின் கொழுப்பு செக்ஸ் பிரச்சனைக்கு மருந்தாகுமா?

புலிகளின்ஃபிங்கர் பிரிண்ட்அதன் தோலில் உள்ள வரிகள்!!

8 முதல் 10 அடி நீளமும் 250 கிலோ முதல் 300 கிலோ வரை எடையும் உள்ள ஒரு கட்டுமஸ்தான உடலை கொண்டதும் ஃபெலிடே(Felidae) குடும்பத்தை சேர்ந்த உறுப்பினரும் ஆன பேந்தேரா டைகிரீஸ் (Panthera tigris), வகையை சேர்ந்ததுதான் நம்ம ஊர் புலிகள்இது தன் தீவிரவாதத்திற்கு பயன் படுத்தும்  முக்கியமான ஆயுதம்கோரைப் பற்கள்! அதன் 4 இஞ்ச் நீளம் இருக்குமாம்!!
ஆதி காலத்தில் சைபீரியா தீவிலிருந்து பொடி நடையாய் நடந்துஅசாம் காடுகள் வழியாக தனது பரிவாரங்களுடன் இந்தியா வந்ததாக சைபீரியாவில் கிடைக்கப் பெற்ற தொல்பொருள் ஆராய்சி மண் படிமங்களை கொண்டு கூறப்படுகிறது.
9 வகையான புலி வகைகள் இருந்தாலும் இந்திய புலிகளும் சைபீரியா புலிகளும்  மிகவும் பிரசித்தம்!

சைபீரியன் புலி

இந்திய பெங்கால் பெண் புலி தனது குட்டியுடன் (Cub)
                 பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து புலிகள் மற்ற உயிரினத்தின் அடி வயிற்றில் புளியை கரைக்குமாம் !. ( கொட்டை உள்ள புளியா? கொட்டை எடுத்த புளியா?-எனது நண்பர் Dr.சந்துருவின் கேள்வி! இவரின் லொல்லு தாங்கமுடியவில்லை! இவரை பற்றி தனியாக ஒரு பதிவு தனியாக எழுத வேண்டும்!)  அடர்ந்த வன பகுதியில் வாழும் புலிகள் என்றால் அவைகள் 20 ஆண்டுகள் கூட வாழ்ந்து தொலைக்குமாம்.
சிறிது தண்ணீர், நல்ல நிழல், சாதுவாக இருக்கின்ற ஏமாந்த உயிரினங்கள் இருக்கும் வனப் பகுதிதான் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான வனப் பகுதி! புலிகளுக்கு பிடிக்காத வனம் எது? என்றால் அது பாலைவனம்தான்!
புலிகள் அழகாஅல்லது அதன் மேல் உள்ள வரிகள் அழகா?
புலிகளுக்கு அதன் மேல் வரையப்பட்டுள்ள மாடர்ன் ஆர்ட் வரிகள்தான் அதற்கு தனி அழகு!
ஒரு ஆராய்சியாளர் அவைகளை மெனக்கெட்டு எண்ணி அவைகள் 100 க்கு மேல் உள்ளது என கூறியுள்ளார். இதில் அப்படியா? என மூக்கின் மேல் விரல் வைத்து கேட்கும் செய்தி என்னவென்றால் ஒரு புலியின்  மேல் உள்ள வரிகளின் அமைப்பு போல் மற்றொரு புலிக்கு இருப்பதில்லையாம்! பேட்டண்ட் உரிமை பெற்றுள்ளது! மனிதர்களின் ஃபிங்கர் பிரிண்ட் போல்!! புலிகளின்  முடியை சேவ் செய்து பார்த்தாலும் வரிகள் அமைந்த இடம் துல்லியமாக தெரிகிறது. ‘பொழப்பு இல்லைஎன்றால் எல்லாவற்றையும் செய்து பார்த்து விட வேண்டியதுதானே?
ஆண் புலியும் பெண் புலியும்:-
பெண் புலியை விட 1.7 மடங்கு அதிகம் எடை கொண்டது கடோர்கஜன் ஆண் புலி! பெண் புலியும் அதைப் பற்றி கவலை படாமல் ஏகத்து ஆண் புலியை விரும்புகிறது!
ஆண் புலியின் முன்னங்கால் பாதம் பெண் புலியை விட அதிகமாக இருக்கும்! (இதன் தாக்குதலில் ஒரு மாட்டின் தலையை  ஒரே அடியில் நொறுங்கிவிடும்! நாக் அவுட்) .புலிகளின் பாதச் சுவடுகளை வன பகுதியில் காணும்போது  இந்த பாய்ண்ட்யை வைத்துதான் அது பெண் புலியின் கால் தடயமா? அல்லது ஆண் புலியின் முன் பாத தடயமா? என கண்டறிவார்கள்!!
கலர் கலராக புலிகள்!