தந்திரத்தின் மறு பெயர் நரி?
கேனிடே (Canidae) எனும் குடும்பத்தைச் சார்ந்த நரிகளில் 37 வகையான இனங்கள் உள்ளன. இந்திய வகைகளில் குள்ள நரி, செந்நரி போன்றவை பிரசித்தம்.செந்நரிகளில் மலை நரி ,பாலைவன நரி, வெள்ளைக்கால் நரி போன்று சிஸ்டர் கன்சர்ன் இனங்களும் உண்டு. இதில் வல்ப்பஸ் பெங்காலென்ஸிஸ் ( Vulpes bengalensis) எனப்படும் குள்ள நரிக்கே ரசிகர்கள் அதிகம்.
வன விலங்குகளிலேயே எக்கச்சக்க பிரில்லியண்ட் நரிதான். இதன் தந்திர குணத்தைச் சித்தரிக்கும் கதைகளை நம் பாட்டிமார்கள், வெற்றிலைக் குதப்பலுடன் விவரிக்க, கேட்டு அசந்திருக்கிறோம். மனிதர் வைக்கும் வலைகளில் எளிதில் விழுந்து விடாமல் சாதுர்யமாகத் தப்புவதில் நரிகள் கில்லாடிகள்! துரத்தும் நாய், தன்னை மோப்பம் பிடிக்காதபடி பக்கத்தில் இருக்கும் ஏரி,குளம், குட்டையில் நரிகள் டைவ் அடிப்பதுண்டு.வாலை நீரில் நனைத்து விட்டு வரும் எதிரிகளின் கண்களில் பளீரென விசிறித் தப்பித்துவிடும்.அபாய கட்டத்தில் மாட்டிக் கொண்டால் பிணம் போல் பாவ்லா காட்டி ‘எஸ்கேப்’ ஆவதும் உண்டு.
மாமிசம் உண்ணும் பிராணிகளிலேயே நரிதான் டபுள் ஆக்டிங் கொடுப்பது. சைவமும் இதற்குப் பிடிக்கும்.சுமார் மூன்றடி நீளத்தில் மெல்லிய கால்களோடும், துல்லிய புலன்களோடும் இருக்கும்.
நரிகளில் மெஜாரிடி சாம்பல் நிறம். சிவப்பு, கருப்பு , மஞ்சள், சில்வர் போன்ற பளபளக்கும் நிறங்களும் உண்டு. இதன் மொசு மொசுவென்ற, கவர்ச்சிகரமான தோலுக்கு உலகெங்கும் நல்ல கிராக்கி!
நரிகளின் நிலத்தடி வீடு (பேஸ்மெண்ட ஹவுஸ் ) சுமார் எட்டடி ஆழத்தில் இருக்கும். அதன் மையப் பொந்து விசாலாமாக இருக்கும். இந்த பொந்துக்குச் செல்ல பல புற வழிகளும், சில சீக்ரெட் என்ட்ரிகளும் இருக்கும். பாலைவன வகை நரிகள் மலைப் பொந்துகளில் வசிக்கும். இத்தகைய சிவில் இஞ்சினியரிங் வேலை செய்வதற்கு நரியின் உறுதியான நகங்கள் உதவுகின்றன.
நரிகள் அதிகம் கூட்டம் சேர்ந்து கொள்வதில்லை. தனித்தோ, இணையுடனோ இரை தேடும். இதன் சாப்பாட்டு மெனு பலவகையான, சின்னப் பாலூட்டிகள், பறவைகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் என்று பலவற்றைச் சாப்பிடும். நோயுற்ற ஆடுகளைக் கூட வேட்டையாடிவிடும். மெல்லிய சத்தம் மற்றும் அசைவுகளைக் கூட இதன் காதுகள் கிரகித்து விடுவதால் இரையை எளிதில் வேட்டையாடி விடுகிறது. இரையைப் பிடிப்பதில் அதிரடித் தாக்குதலும் உண்டு. நரிகளுக்கு தினமும் ஒரு கிலோ இறைச்சிதான் தேவைப்படும். வேட்டையில் அதிகம் கிடைத்துவிட்டால், இலை சருகு, புதர், மண் அடியில் என பல இடங்களில் மறைத்து வைத்து அடையாளம் கண்டு அடுத்த நாளில் இதை சாப்பிடுமாம்! என்கிறார் டாக்டர்.N. சந்திரசேகரன்!!
நரிகளுக்கு இடையேயான ஆடியோ தொடர்பு ஆச்சர்யமானது. இவை தம் குரலை நீட்டித்து, குறைத்து, முனகி, பயம், கோபம், பாசம் போன்ற உணர்வுகளை வெறிப்படுத்துகின்றன. ஆபத்துக் காலத்தில் அதிபயங்கரமாக ஊளையிடுவதுண்டு. சில நரிகள் மாலை நேரத்தில் ஊளையிடுவதைத் தொடர்ந்து தூரத்தில் இருக்கும் மற்றொரு நரி அதைக் கன்டினியூ செய்யும்.இது செயின் போல் ஏரியாவிட்டு ஏரியா பரவி எங்கு பார்த்தாலும் ( கேட்டாலும்?) ஊளையோ ஊளையாக மாறி விடும். தவிர முக பாவங்களைக் கொண்டும், வாசனைச் சுரப்பியைப் பயன்படுத்தியும் நரிகள் தங்களுக்குள் பலவித தகவல்களை ‘பாஸ்’ செய்து கொள்கின்றன. ஆடியோ மற்றும் முகபாவ சங்கேத மொழிகள் பற்றி ஒரு ஆராய்சி கட்டுரை எழுதும் அளவில் தகவல்கள் கொட்டி கிடக்கிறது! ஒலி!
ஒரு கொசுறு செய்தி! நரி முகத்தில் விழித்தால் நல்லது நடக்குமென்று பரவலாக நம்ப ப்படுகிறது. இது ஒரு நம்பிக்கையே தவிர, ஆதாரம் எதுவும் இருப்பதாக தகவல் இல்லை. ஒரு வேளை நரியைப் போல் தந்திரமாக நாமும் நடந்தால் நல்லது நடக்கும் என்பதாலோ என்னவோ?
நம் முகத்தில் விழித்தால் நரிக்கு நல்லதா?
நம் முகத்தில் விழித்தால் நரிக்கு நல்லதா?
No comments:
Post a Comment