16 May, 2011

மிமிக்ரி தந்திரம் செய்து தன் வேலையை முடிக்கும் புலிகள்!

இரையை பிடிக்க புலிகளின் பஞ்ச  தந்திரம்.

பைசன், காட்டாடு, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளைப் பார்த்துவிட்டால் போதும் புலிகளுக்கு நாக்கில் எச்சில் ஊறும். உடனே இரையை பிடிக்க சதித் திட்டம் தீட்டிவிடும்!
புலிகள் தன் இரையைக் கபாளிகரம் செய்ய பல பஞ்ச தந்திரங்களைப் பயன் படுத்தும். தன்னுடைய வரிகளுக்கு பொருத்தமான புல்-புதர்களில் ஒளிந்திருந்து,  திடகாத்திர சரீரத்தைப் பவ்வியமாக மறைத்து, இயங்கி குபீர் தாக்குதல் நடத்தும். பல  சமயங்களில் புலிகள் ராணுவ ஜவான் போல சத்தமில்லாமல் 10 மீட்டர் வரை கூட தவழ்ந்து இரையை தாக்க கூடிய இலக்கு வரை சென்று தாக்குதல் நடத்திவிடும். தாக்குதலுக்கு இலக்கான இரையின் தொண்டை தான் முதல் இலக்கு அதை நன்றாக கவ்விக்கொண்டு முன்னங்காலால் கழுத்தை தரையோடு அழுத்தி நெறித்து கொன்றுவிடும்.இந்த முறையில் தன்னை விட 6 மடங்கு எடை உள்ள விலங்குகளை கூட கொன்றுவிடும். சிறிய இரையாக இருந்தால் அதன் முதுகில் கவ்வி முதுகு தண்டுவடத்தை நொறுக்கி அல்லது  கழுத்தில் உள்ள ரத்த குழாயை மற்றும் மூச்சு குழாயை உடைத்து கொன்றுவிடும். சில வழுவான புலிகள் தன் பலமான முன்னங்காலால் ஒரேயடி அடித்து மாட்டின் மண்டையையோ,அல்லது கரடியின் தண்டுவடத்தையோ உடைத்துவிடும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளதோ?
சில நேரம் புதரில் ஒளிந்துகொண்டு சாம்பார் மானைப் போல் மிமிக்ரி செய்து அது ஏமாந்து அருகில் வந்ததும் அட்டாக்! பின்  சென்னை வாசிகள் ஓட்டலில்  சாம்பார் இட்லி வாங்கி கொத்தி கொத்தி கர்ணகடூகரமாக சாப்பிடுவது போல் புலிகள் சாம்பார் மானை துவசம் செய்து ஏப்பம் விட்டுவிடும்!
இரை நழுவி விட்டால், புலிகளுக்கு வருமே ஒரு கோபம்!
தன்னுடைய தாக்குதலில் இரை தப்பி ஓட ஆரம்பித்தால் உடனே புலிகள் டாப் கியர் போட்டு, ஆக்ஸிலேட்டரை முறுக்கி 49 முதல் 65 கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு ஓடி துரத்திப் பிடிக்கும். இந்த கொலை  வெறி ஓட்டம் சில  நிமிடங்கள் தான்! தொடர்ந்து புலிகளால் இந்த வேகத்தில் ஒட முடியுயாது. நீண்ட ஸ்டேமினா இதற்கு இல்லை! 20 முறை அட்டாக் செய்தால் ஒரு முறைதான் புலிகள் வெற்றி அடைகிறது. தோல்வி அடைந்த புலி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திகொண்டு மீண்டும் தொங்கு தொங்கு என்று 20 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஓட்டு கேட்கும் அரசியல்வாதி போல் முழங்கால் வலிக்க அலையோ அலை என அலையும் என்கிறார் டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன்!
அவைகளின் மேல் பரிதாபபட்டு மிருக காட்சி சாலைக்கு வரச் சொல்லி அழைக்கிறார் டாக்டர்.சந்திரசேகரன், அங்கு நன்கு வளர்ந்த புலிகளுக்கு அதன் எடையில் 5 விழுக்காடு எடை இறைச்சியும்  இளம் புலிகளுக்கு அதன்  எடையில் 25 விழுக்காடு எடை இறைச்சியும் தாராளமாக  வழங்கப்படுகிறதாம். உடல் சிஸ்டங்களை சுத்திகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு நாள் மட்டும் எந்த உணவும் கிடையாதாம்! புலிக்கு விரதம் அனுஷ்டிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறதாம்! நல்ல சிகிச்சைக்கு கால்நடை மருத்துவர்களும் இருக்கிறார்கள் என ஆசை கூறி புலிகளை அழைக்கிறார். யாரேனும் புலிகளிடம் சொல்லி அவரிடம் அனுப்பி வையுங்களேன்!
புலிகள் பசித்தாலும் புல்லை தின்பாது என்பர்! ஆனால் நார் சத்து உணவு சாப்பிடவேண்டும் டாக்டர்கள் ஆலாசனை கூறினார்களோ என்னவோ? குரூட் பைபர் அதிகம் உள்ள புல், ஸ்லோ மேச் என்ற மரத்தின் பழத்தை சில சமயங்களில் உண்பது உண்டு!
சில சமயங்களில் மலைப்பாம்பு, முதலை, கரடி,மீன் ,குரங்கு, முயல் என எது கிடைத்தாலும் ஸ்வாகா தான்! பாம்புடன் ஒரு விளையாட்டு!
யானை புலிகளின் சைஸ்க்கு பெரிய இரைதான்! இருந்தாலும் புலிகள் யானைகளுடன் மோதிய நிகழ்வுகளை பார்த்திருக்கிறார்கள்! அசட்டு தைரியம்தான்! சிங்கம் புலி மோதல்!!
இரைக்காக புலிகளை காண்டா மிருகத்தைக் கூட  கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
சிங்கத்தை போல் அல்லாமல் ஆண் புலிகள் தான் வேட்டையாடிய இரையை பெண் புலி மற்றும் அதன் குட்டிகளுடன் பகிர்ந்துகொள்ளும். லேடிஸ் ஃபஸ்ட் என பெண் புலியை முதலில் சாப்பிடவிட்டு ரசித்துவிட்டு பொறுமையாக அதன் பின் சாப்பிடும்.
எங்கு தேடியும் இரைக் கிடைக்காத போதுதான் நைசாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் அல்லது அவர்களையே தன் கோரப்பசிக்கு இரையாக்குகிறது.
பொதுவாக வேட்டையாட திறமை இல்லாத வயதான அல்லது ஊனமுற்ற புலிகள் தான் இவ்வாறு மனிதன் வசிக்கும் பகுதியில் அத்துமீறி நுழைகிறது.

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...