27 May, 2011

காண்டாமிருகத்திற்கும் காதல் வரும்!

அபார ஆண்மை சக்திக்கு காண்டாமிருக கொம்பு “-ஜப்பானியர்கள்

கவசத்துடன் காண்டா
காண்டா மிருகம்! இதற்குதான்  என்னவோரு விசித்திர தோற்றம்!! படகு போன்ற தலை, போர்கவசம் அணிந்த வீரன்  போல் உடல் அமைப்பு, கிளுகிளுப்பாக கிள்ளத் தூண்டும் மடிப்புகள் ( ஆண் காண்டாவிற்குதான்) , பாறையை உடையாக கொண்டது போல் 5 சென்டிமீட்டர் தடிமனுக்கு தோல், குட்டைக் கால்கள்,மூக்கு பகுதியில் கொம்பு என பல ஸ்பெஷல் ஐட்டங்களுக்கு உரிமையாளரான காண்டா ரைனோஸெரோடிடே ( Rhinocerotidae) என்ற குடும்பத்தை சார்ந்தது. இவற்றில் இரண்டு ஆப்பிரிக் வகைகளும் மூன்று ஆசியவகைகளும் உண்டு.
தோலின் அமைப்பு
ஆஜானுபாகுவாக, சுமோ வீரர்கள் ஸ்டைலில் 2300கிலோ எடை இருக்கும். ஆறரை அடி நீளம் இருக்கும்.
ஏறத்தாழ 60 ஆண்டுகள் வாழ வல்லது.
இதன் உடம்பின் எடைதான் அதிகம்! (உடம்பு எடை மட்டும் அல்ல, விலங்களிலிலேயே அதிகம் எண்ணிக்கை குரோமோசோம்கள் எண்ணிக்கை கொண்டது. இது கருப்பு காண்டாவிற்கு 84 மற்றவைகளுக்கு 82) ஆனால்  மூளையின் எடையோ 400-600 கிராம் மட்டுமே எடை. ஆனால் காண்டாக்களுக்கு காது சூப்பர் ஷார்ப்! ஆனால் பார்வை படு மந்தம். இதனால்தான் திடீரென்று புதிய வாசனை , சத்தத்தை உணரும்போது கண் மூடி தனமாக முரட்டுத் தாக்குதலில் இறங்கிவிடும். அப்பொழுது இதன் முக்கிய ஆயுதம் கொம்புதான்!
வெள்ளை காண்டா

ஆப்பிரிக்க காண்டாக்களுக்கு இரண்டு கொம்புகள் உண்டு, ஆசிய காண்டாக்களில் இந்திய, ஜாவா வகைகளுக்கு ஒரே ஒரு கொம்புதான் உண்டு. ஆனால் ஆசியாவில் உள்ள சுமத்ரா காண்டாக்களும் இரட்டைக் கொம்புகள் கொண்டவை.
ஆப்பிரிக்க காண்டாக்கள் சிரித்தால் கொள்ளை அழகு? ஏனேன்றால் இந்த இனத்திற்கு முன் வரிசை பல் கிடையாது! கடைவாய் பற்களை வைத்து மட்டும் அட்ஜெஸ்ட் செய்து ஆகாரத்தை  அரைத்து விழுங்கிவிடும்.
கருப்பு காண்டா
காண்டாவின் ஆகாரம் புற்கள், இழைகள், தழைகள் , கிழங்குகள் என எல்லாமே ப்யூர் வெஜ் அயிட்டங்கள்தான்! பிரேக்பாஸ்ட், டின்னர் மட்டும்தான், லஞ்ச் கிடையாது!
முதல்வன்அர்ஜூன் போல் சேற்றுக் குளியல் என்றால் காண்டாவிற்கு அலாதி ஆந்தம்! பேன், உண்ணிகள், போன்ற ஜந்துக்களின் தொல்லையிலிருந்து மீள இப்படி சேற்றுக் குளில் போடுகின்றன காண்டாக்கள்!
தோல் மடிப்பில் மறைந்திருந்து பிடுங்கும் ( நகை கேட்டு நச்சரிக்கும் மனைவி போல்?) ஒட்டுண்ணியை பொறுக்கி எடுக்க பெஸ்ட் பிரண்டாக பறவைகளை தன் உடம்பின் மேல் ஏற்றிக் கொண்டு நட்புடன் பவனி வரும்.
சிங்கம், புலி போன்றவை காண்டாவை தாக்க வரும் போது முதுகில் சவாரி செய்யும் பறவைகளும் நன்றி மறக்காமல் முதலில் கண்டுபிடித்து “க்ரீச்சிட்டு  சிட்டாக பறவைகள் பறந்துவிடும். காண்டாக்களும் உஷார் ஆகி தன் குட்டை கால்களால் எட்டடி போட்டு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ததக்காபுதக்கா என ஓட்டம் கட்டிவிடும்!
காண்டாவின் கொம்பு  சண்டையில்  உடைந்தாலும் ஆயுளுக்கு வளரும்! ஜந்து அடி வரைக்கூட இருக்கும். காண்டாவின் கொம்பின் விலை நான்கு லட்சத்திற்கு மேல் இருக்கும்.இந்த விலை மதிப்புதான் மனிதர்கள் காண்டாவை வேட்டையாட தூண்டுவதே!
நம்பர் டூபோவதில் காண்டாமிருகத்திடன் ஒரு விநோத பழக்கம். ரெகுலராக குறிப்பிட்ட இடத்தில் அதுநடக்கும். தெரியாமல் அந்த ஸ்பாட்டை கடந்து விட்டாலும், ரிவர்சில் நடந்துஅதே இடத்தில்தன்வேலையைமுடித்துவிடும். இதை நோட்டமிடும் வேட்டைக்காரர்கள் காண்டா மிருகம் ரிவர்சில் வரும்போது சுட்டுத் தள்ளிவிடுதுண்டு என்கிறார் டாக்டர்முத்துகோபாலகிருஷ்ணன்
இப்படி சதி செய்து காண்டாவை வேட்டையாடுவது ,எல்லாம் மனிதனின் காண்டாவின் கொம்பின் விநோத பயன்பாடுகள்தான்!
காண்டாவின் கொம்பிற்கு தந்திர சக்தி உள்ளது என்பது சீனர்களின் நம்பிக்கை! எனவே நம்ம ஊர் மந்திரவாதிகளின் கையில் மண்டை ஓடு போல் சீனர்களின் கையில் காண்டாவின் கொம்பு!!
அபார ஆண்மை சக்திக்கு காண்டாமிருக கொம்புஎன்பது ஜப்பானியர்களின் ஆணித்தரமான கணிப்பு! கொம்பை பவுடராக்கிபடுக்கப்?” போகும்  போது பாலில் கலந்து பருகி ஜமாய்க்கர்களாம் ஜப்பானியர்கள்.
என்னதான் சக்தி உள்ளது என காண்டாவின்  கொம்பினை கெமிக்கல் அனாலிஸிஸ் செய்த விஞ்ஞானிகள் அதில்கெரட்டின்” “ நகமைகலந்த பொருட்கள்தான் எனவும்அந்த மாதிரி”  சமாச்சார வேதியல் பொருட்கள் ஏது இல்லை என கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள்.
கொரியாகாரர்கள், மொராஜ் தேசாய் பாணியில் காண்டாவின் சிறுநீரை சேகரித்து ( குடிக்க  மாட்டார்கள்!) ஒரு பாத்திரத்தில் வைத்து வீட்டு வாசலில் தொங்க விடுகிறார்கள். பேய், பிசாசுக்களுக்கு குட்பையாம்! கொரியன் வாஸ்து?
காண்டாவின் கொம்பில் செய்த கோப்பையில் விஷம் கலந்து பானத்தை ஊற்றினால் விஷம் வெளியே தெரிந்துவிடும் என்பது நேபாளிகளின் நம்பிக்கை.
ஏமன் நாட்டில் பணக்காரர்கள் தாங்கள் எமனிடம் மாட்டிக் கொண்ட பின், காண்டாவின் கொம்பில் கைப்பிடி செய்த சவப்பெட்டியில் வைத்து புதைக்கச்  சொல்லி உயில் எழுதுகிறார்களாம்! அதில் என்ன நம்பிக்கையோ?
இப்படி பெட்டி பெட்டியாய் ஏகப்பட்ட மூட நம்பிக்கைகளினால் காண்டாவின்  எண்ணிக்கையை வெகுவாக குறைந்து வருகிறது.
இதே வேளையில் மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் காண்டாமிருகம் நெருப்பைக் கண்டால் அதை அணைத்து விட்டுச் செல்தாகக் கூறப்படுகிறது. பிரபல ஆங்கிலத் திரைப்படமான கோட்ஸ் மஸ்ட் பி கேரேசி எனும் திரைப்படத்திலும் இவ்வாறு காண்டாமிருகம் நெருப்பை அணைப்பது போன்ற காட்சி அமைப்புகள் இருக்கின்றது!
எப்படி இருந்தாலும் இந்த அரிய உயிரனத்தைக் காப்பாற்ற இப்பொழுது  அசாம், மேற்கு வங்காளத்தில் தேசிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொம்புக்காக தானே இந்த வேட்டை என்று வன கால்நடை மருத்துவர்கள் காண்டாவிற்கு மயக்கம் கொடுத்து கொம்புகளை நீக்கி விட்டு காட்டிற்குள் விட்டுவிடுகிறார்கள். இந்த கொம்பில்லா காண்டாக்கள் எதிரிகளை சமாளிக்க 40 கிலோமீட்டர் வேக ஓட்டம் மட்டும்தான்! என்கிறார் மதுரை டாக்டர்.அன்பழகன்.

காண்டாமிருகத்தின் காதல் முரட்டுத்தனமாக பார்க்கவே பயங்கரமாக இருக்கும்இதில் பாவப்பட்ட ஜென்மம் பெண் காண்டாக்கள் தான்!
ஆண் காண்டா 7 வயதில் கான்டம் இல்லாமலேயே இனப்பெருக்கத்திற்கு தயார், பெண் 4 வயதிற்கு பின் 40-60 நாட்களுக்கு ஒரு முறை ஹார்மோன் வாசனையை சுமந்து பவனி வரும். பெண் காண்டாவின் வாசனை ஆணை ஈர்க்கும்!
அருகில் வந்தபின் பெண்வாசனை - ஆண்வாசனை பொருத்தம் பார்க்கப்படும். மேட்ச் ஆனால் கூடல் இல்லையேல் ஊடல் என்று பெண் காண்டா பிகு செய்தால், மோதல்தான்கொம்பு, பல் என பல ஆயுதங்களால் பெண் காண்டாவை உண்டு இல்லை என பண்ணிவிடும். காதல் கூடினாலும்  ஆண் காண்டாவின்  “செய்முறையில் பெண் காண்டாவிற்கு சேதாரம் உண்டுஅவ்வளவு ஆக்ரோஷமாக, யுத்தம் நடக்கும். காதல் வந்து விட்டால் 24 மணி நேரம் வரை வேறு பொழப்பே இல்லாமல்  தொடரும். அதில் முக்கிய கட்டம் மட்டும் சுமார் ஒரு மணி நேரம். “ எல்லாம்ஓய்ந்த பிறகும் இரண்டும் பல மணி நேரங்கள்  காமப் பார்வை வீசிக் கொண்டிருக்கும். என்கிறார் டாக்டர்.” மன்மதன்சந்திரசேகரன்காட்சி2 காட்சி3
16 மாதங்கள் கழித்து 60 கிலோ எடையுள்ள பேபி காண்டா தாயின் அருகில்!

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...