19 May, 2011

ஒரு நாளைக்கு 20 முறை உடலுறவு கொள்ளும் புலிகள்!!இந்த தலைப்பை பார்த்து விட்டு மனைவிமார்கள் கணவர்களிடம் சலிப்புடன் நீங்களும் இருக்கிறீர்களே எனஹூக்கும்ஒலி வந்தால் இந்த பக்கத்தை முழுவது படிக்க சொல்லுங்கள்!
ஆண்டு முழுவதுமே புலிகளுக்கு காம மூடு இருந்தாலும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள காலத்தில் இந்த  “விஷயங்கள்”  மித  மிஞ்சி போகிறது.
3 முதல் 4 ஆண்டு வயது முடிந்ததும்  பெண்  புலிகள் நான் வயசுக்கு வந்துவிட்டேன் தன்னுடைய வாசனையை  காடு முழுவதும் காற்றில் பரப்பிவிடும். ஆண் புலிகள் கொஞ்சம் தத்திதான்! காமத்தில் உள்ள பெண் புலியை சீண்ட ஆண் புலிக்கு 4 முதல் 5 ஆண்டுகள் வயது நிறைந்திருக்க வேண்டுமாம்.
புலிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா!
ஆண் புலிகள் தங்கள் ராஜ்ய பகுதியாக 60 முதல் 100 சதுர கிலோமீட்டர் பகுதியை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும். பெண் புலிகள் 20 சதுர கிலோமீட்டர் பகுதியை இது என்னுடைய ராஜ்யம் என்று பிரகடனம் செய்து விடும். புலிகள் தன் எல்லை கோட்டை நிர்ணயம் செய்ய எல்லை பகுதியில் உள்ள மரங்களில் தன் சிறுநீர் மற்றும் தன் பின் பகுதியில் சுரக்கும் திரவத்தை அந்த மரங்களின் மேல் தடவி எல்லை கோட்டை நிர்ணயம் செய்து கொள்ளும். இந்த பகுதியில் மற்ற புலிகள் அத்துமீறி நுழைந்தால் .நா. சபைக்கு செல்லாமலேயே தன்னுடைய எதிர்ப்பு தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்துவிடும்! ஆண் புலிகளின் அந்தபுரத்தில் 2 அல்லது மூன்று பெண் புலிகள் தன்னுடைய உடலுறுவுக்கு கிடைத்துவிடும்! என்கிறார் டாக்டர்.முத்துகோபாலகிருஷ்ணன்.
புலி உறுமது! புலி உறுமது!! அங்கே காம களியாட்டம் அரங்கேற்றம்

பருவ வயதை எட்டிய புலிகளில் பெண் புலிகளிடம் ஒரு பிரத்தியோக ஃபெமைன் வாடை காற்றில் வீசி ஆண் புலிகளுக்கு அன்புடன் அழைப்பு விடுத்துவிடும். இந்த வாசனையில் சொக்கி போன அந்த பகுதியில்  உள்ள ஆண் புலி ட்ரம் சிவமணிரிதத்தில் ஒரு வகையான காம உறுமல்களை வெளிப்படுத்திக் கொண்டே பெண்புலியை நெருங்கி வரும். அருகில் வந்தவுடன் உறுமல் வால்யூமைக் குறைத்து மூக்கு வழியே பெருமூச்சால் ஒரு சிணுங்கள் ஒலியை மட்டும் எழுப்பும். இது ஒரு விதமான காம சமிக்கை!
முதலில் இரண்டும் தம் முகத்தில் உள்ள விஸ்கர்ஸ் முடிகளால் தொட்டுப் பார்த்துக் கொள்ளும், நெற்றிப் பொட்டை முரட்டுப் பகுதியில் அடிக்கடி தேய்த்து உசுப்பேற்றிக் கொள்ளும். அதன் பின் இரண்டும் கரகரப்பான முனகல்களுடன் ஒன்றின் மீது ஒன்று ஆடிக் குதித்து விளையாடும்! அப்பொழுது எழும் உறுமல் சப்தத்தை வைத்தே அனுபவம் உள்ளவர்கள் அங்கு புலிகளின் காதல் அரங்கேற்றம் நடைபெறுகிறது என்று கண்டு பிடித்து விடுவார்கள். ( அரங்கேற்றக் காட்சி) 
சேர்க்கை முடிந்த மறு கணமே ஆண் புலியை பெண் புலி விரட்டி விடுவது வாடிக்கை! ( முறத்தால் அடித்து  அல்ல) ஆண் புலியும் விலகி ஐயோ பாவம் லுக்குடன் அழைக்கும் தூரத்தில் காத்துக் கொண்டிருக்கும். பெண் புலி 300 கிலோ எடையை சுமந்த களைப்பை தனிமையில் கொஞ்சம் நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் ஆண்புலியை அழைக்கும்.இப்படி மறுபடி மறுபடி என ஒரே நாளில் இருபது தடவைக்கு மேல்! ஒரு வாரத்தில் 100 முறை இனவிருத்தியில் புலிகள் ஈடுபடுகின்றன!!
மிருக காட்சி நிலையத்தில் பராமரிக்கபடும் புலிகளை கூண்டிற்குள் புலிகளை இணை சேர அனுமதிக்கும் போது ஆண் புலி அடுத்த கூண்டிற்கு ஓட ஒரு வழி இருக்க வேண்டும். இல்லையேல் பெண்புலி ஆவேசத்தோடு தாக்கி ஆண் புலியின் அந்தரங்கத்தை காயப்படுத்திவிடும். (நம்ம ஊர் பெண்களுக்கு இது தெரியாமல் இருக்கிறதே?) இது போன்ற இக் கட்டமான நிகழ்வுகளில் ஃபயர்எக்ஸட்டிங்குஷரை பீய்ச்சியடித்துத்தான் இரண்டு புலிகளையும் பிரிக்கமுடியும் என டாக்டர்.N. சந்திரசேகரன் தெரிவிக்கிறார்!
சினைப் புலி 100-110 நாட்கள் கர்ப்பத்திற்கு பின் பாதுகாப்பான குகை அல்லது பாறைக்கு அடியில் 2-3 குட்டிகளைப் பிரசவிக்கும் இத்தருணத்தில் ஆண் புலி இன்னொருத்தியைத் தேடி போய் விடும். இதன் காதல் வாழ்க்கை எல்லாம் குட்டி பிறந்தவுடன் குளோஸ்!
தாய் அடுத்த ஜோடி சேரும் வரை குட்டிகள் கூடவே இருக்கும். ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிக்கும். மூன்றாவது மாதத்தில் அம்மா ஆசையாய் மென்று கொடுக்கும் எச்சில் இறைச்சில் தான் இதன் மாமிச வெறி துவங்குகிறது. நான்காவது மாதத்திலிருந்து வித்தை பயில ஆரம்பிக்கும்! தாய் புலி பயிற்சியின் முடிவில் காட்டாடு போன்ற மீடியம் சைஸ் இரையை அரைகுறையாக கடித்து துடிதுடிக்கப் பண்ணி விட்டு செல்லக் குட்டிகளைக் கூப்பிட்டு கொல்லச் சொல்லிப் பழக்கும். பின் தன் செல்லக் குட்டிகளுக்கு பிரியா விடை கொடுத்து, டாட்டா சொல்லி விட்டு அடுத்த ஜோடியை தேடி ஜரூராக கிளம்பிவிடும்! என்கிறார் டாக்டர்.அன்பழகன்.No comments:

Post a Comment

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...