தலைவலிக்கு தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்

பிரிட்டன் நாட்டில் வேதியியல் பிரிவு அறிவியலாளர்கள் ஜான் எம்ஸ்லே என்ற அறிஞர் தலைமையில் தேன் பற்றி சில ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில் அருமருந்தான தேன் பல வழிகளில் மனிதனுக்கு பயன்படுவதை அவர்கள் கண்டறிந்தனர். தேனில் பிரக்டோஸ் என்ற வேதிபொருள் உள்ளது. இது குடிபோதையில் உள்ளோருக்கு ஏற்படும் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி வருதல் போன்ற உபாதையிலிருந்து விடுதலையளிக்கிறது. ஆல்கஹால் உட்கொள்வோர் உடலில் அசிட்டால்டிஹைடு என்ற வேதிபொருள் உற்பத்தி ஆகிறது. இதுதான் தலைவலி ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதனை தேனில் உள்ள பிரக்டோஸ் என்ற வேதிபொருள் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. பின்னர் அது கார்பன் டை ஆக்சைடாக மாறி சுவாசத்தின் போது எளிதாக வெளியேறுகிறது. அதனால் குடிபோதையால் தலைவலி என முணுமுணுப்பவர்கள் நேரடியாக தேனை எடுத்து கொள்ளலாம். மேலும் பிரட் உடன் தேனை டோஸ்ட் செய்தும் சாப்பிடலாம். அது ஆல்கஹாலின் உப பொருளின் பாதிப்பையும் வெகுவாக குறைக்கிறது. மேலும் ஜான் கூறும்போது, ஆல்கஹால் அளவு அதிகமாக காணப்படும் ஜின் போன்றவற்றை உட்கொண்டால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் பால் குடித்தல் நன்மை பயக்கும். பொதுவாக ஆல்கஹால் உடலிலுள்ள நீரின் அளவை குறைத்து விடும் இயல்புடையது. அதனால் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் நீர் அருந்திவிட்டு படுக்க செல்வதும் நலம் தரும் என கூறுகிறார்.குடிகாரர்களுக்கான தலைவலிக்கு என முன்பே சொல்லவேண்டியதுதானே! தேனின் எவ்வளோவோ மருத்துவகுணங்கள் இருக்கும் போது இது பற்றி மிகவும் அவசியமா?

Comments

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?