Headlines News :
Home » , » நாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்? அறிவியல் உண்மை!

நாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்? அறிவியல் உண்மை!

Written By Dr.RAJENDRAN Subramanian on 24 May, 2011 | 3:59 PM

இது நரியின் சம்பந்தபட்ட பக்கம்தான்! தலைப்பு விஷயம் கடைசியில்தான் வரும்!!
நரிகளின் காதல் வித்தைகள் நீண்ட காலமாக ரகசியமாகவே இருந்ததது. மேலைநாடுகளில் தோலுக்காக பல நரிப் பண்ணைகள் தொடங்கப்பட்டு விட்டதால், அங்கிருக்கும் நரிகளின் குடும்ப வாழ்க்கை முறை செக்ஸ் புகழ் டாக்டர்.பிரக்காஷ் எடுத்தது போல் இப்பொழுது படங்களாக எடுக்கப்பட்டுவிட்டன.
குளிர் காலம் முடியும் நேரத்தில் நரிகளின் இனப்பெருக்க காலம் தொடங்குகிறது. அப்பொழுது பெண் நரிகளிடமிருந்து ஒரு திரவம் வெளிப்படும். இந்த ஈஸ்ட்ரஸ் 10-12 நாட்கள் நீடிக்கும். அப்போது அது போகுமிடமெல்லாம் தன் பாதச்சுரப்பியின் மூலம் ஒருவித வாசனையை ஆண் நரிகளுக்குஅழைப்பாகவிட்டுச் செல்லும், என்கிறார் மதுரை.டாக்டர். அன்பழகன்.
இந்த வாசனையால் குஷியான ஆண் நரி (Reynard) குதூகலமாக, மிடுக்காக கிளம்பிவிடும். தனக்கேற்ற இணையைக் கண்டறிந்தவுடன் தன் காதல் கோரிக்கையை பவ்யமாக வைக்கும். இதை ஆரம்பத்தில் கேர்லெஸாக எடுத்துக் கொள்ளும் பெண் நரி, (vixen ) விலகாத மாராப்பினை சரி செய்துகொண்டு பிகுவுடன் செல்லும் இளம் பெண்ணை போல் தன் வாலை அட்ஜெஸ்ட் செய்து கர்வ நடை காட்டும். அதெல்லாம் கொஞ்சநேரம் தான், பின் ஆண் நரியின் கொஞ்சும் குரலிலும், முகபாவத்திலும் சொக்கிபோய், பிரிக்கமுடியாத அளவிற்கு ஆண் நரியுடன் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் பெண் நரி! என்கிறார் டாக்டர்.முத்துகோபால கிருஷ்ணன்.
ஆண் நரியின் பிறப்புறுப்பில் (Penis) யில் விசேஷமாக தண்டில் குருத்தெலும்பு இருக்கும். பெண் நரியின்உள்ளேநுழையும் போது நார்மலாகதான் இருக்கும்! அதனால் நுழையும் போது தடங்கல் இல்லை!! சேர்கையின் கிளைமேக்ஸில் ஆண் நரியின் பிறப்புறுப்பில் இருக்கும் குருத்தெலும்பு (Os pedis) சேர்க்கையின் போது ஆண் உறுப்பின் பல்ப் பகுதி பொங்கும் குருதியினால் வீங்குவதாலும், சுற்றி உள்ள பெண் உறுப்பு பகுதி ஆசையாக? அது மாட்டிக் கொள்வதால் சேர்க்கை முடிந்த பிறகு அரை மணி நேரத்திற்கு நாய்களைப் போலவே விடுபட முடியாத (பேரின்ப? துன்பம்?) நிலையில் வெட்கத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் இருக்கும்! (தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்மந்தமே இல்லையே என்றீர்களே, இப்பொழுது எப்படி......?) நாய்களின் தெருவோர கப்பிலிங் காட்சிகளை அனைவரும் கண்டிருப்பீர்கள், அந்த காட்சிக்கு இதுதான் காரணம்! ஆனால் நாய்களை நம்ம வாண்டுகள் கல்லை எறிந்து , தடியால் அடித்து அந்த இணை பிரியா காட்சியை பிரிக்க முயலுவார்கள். இளம் பெண்கள் ஓரக்கண்ணால் இதழோரத்தில் நாணங் கலந்த புன்னகையுடன் கண்டு சீய்....சீய்... என சிணுங்கி ரசித்து செல்வார்கள். ஆனால் வனத்தில் நரிகளுக்கு இது போன்ற ரசிகர்களும் இல்லை! பிரிக்க முயலும் வில்லன்களாக வாண்டுகளும் இல்லை!! எனவே அடர்ந்த காட்டில் ஆனந்தமாக அரைமணி நேரம் தொந்தரவின்றி சுதந்திரமாக இருக்கும். காட்சி1 காட்சி2
இது போன்றலாக்கிங்முறை மனிதர்களுக்கு இருந்தால் எப்படி இருக்கும் எனக் கேட்கும் டாக்டர். “மன்மதன்சந்திரசேகரன், பின் நீண்ட நேர கற்பனைக்கு பின், கள்ள தொடர்பு, கள்ள காதல் எல்லாம் ஒழிந்துவிடும் அல்லது (கை).....யும்? களவுமாக பிடிபடுவார்கள் என கூறுகிறார்! ஆகுமா? நம்ம ஆளுங்க இதுக்கும் வழி கண்டுபிடித்துவிடுவார்கள்!
கருவுற்ற பெண் நரி 50-55 நாட்களுக்குப் பின் அன்டர்கிரவுண்ட் வீட்டில் 3-8 குட்டிகள் போடும்.பெண்ணின் வயது ஏற ஏற , போடும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்ப விஷயத்தில் நரிகள் படு ஸ்மார்ட் மனைவியை விட்டு ஆயுசுக்கும் தடம் பிசகாமல் அம்மணியே கதியென்று ஏக பத்தினி விரதனாக ஆண் நரி வாழும்!
Share this article :

4 comments:

 
Template Design by vetsurgeon Published by Tweeter