18 October, 2011

அசோலா ஒரு சூப்பர் தீவனம்

       கால்நடைகளுக்கு ஒரு அற்புதமான புரதச்சத்து உணவு அசோலா ஏன் நமக்கும் கூடத்தான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அசோலா இப்போது வளர்க்கப்படுகிறது. தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழகாக பெயர் வைத்தும் அழைக்கப்படுகிறது.
.        எப்போதும் கிடைக்கும் பசுந்தீவனங்கள் இல்லாதபோது அசோலா வளர்த்து கால்நடைகளுக்கான பசுந்தீவன தேவையை சமாளிக்கலாம்.
        அசோலா  தண்ணீரில் மிதந்து வளரும் ஒரு சிறிய பெரணி வகைத் தாவரம்.
        வட்ட வடிவ சிறிய இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த்து போல் இருக்கும் இதன் இலைகள் 3-4 செ.மீ. அளவு இருக்கும்.
தண்டு  மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.
        இலையின் மேற்பரப்பில் உள்ள ஹெட்டிரோசைட் எனப்படும் வெற்றிடத்தில் அன்பீனா அசோலா என்ற நீலப்பச்சைப்பாசி வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை எடுத்து அசோலாவில் சேமிக்கின்றது. 
         அசோலாவை பாத்தி முறை, தொட்டி முறை மற்றும் நெல் வயல்களிலும் வளர்க்கலாம்.
          9*6 அடியுள்ள ஒரு அசோலா பாத்தி அமைக்க தேவையான பொருட்கள்  
1.       அசோலா 1.5 கிலோ
2.       செம்மன் 30 கிலோ
3.       செங்கற்கள் 40
4.       பழைய சிமெண்ட் சாக்குகள் 5-6
5.       ஷில்பாலின் ஷீட் (9*6 அடி 150 ஜி.எஸ்.எம். ஒளிக்கதிர்கள் பாய்ச்சியது)
6.       மாட்டுச்சாணம் 4-5 கிலோ
7.       தண்ணீர் தேவையான அளவு
8.       அசோப்பெர்ட் 15-20 கிராம்
9.       அசோப்பாஸ் 40 கிராம்
 பாத்தி அமைத்தல்
பாத்தி அமைக்கும் இடத்தில் நிலத்தைச் சுத்தப் படுத்தி சுமார் 10 செ.மீ. உயரம் வருமாறு செங்கல்லை பக்கவாட்டில் நிற்குமாறு வைத்து ஒரு செவ்வக வடிவ பாத்தியை உருவாக்க வேண்டும். பாத்தியின் நீள அகலம் 9*6 அடி இருக்க வேண்டும்.







·         அடியில் பழைய சிமெண்ட் சாக்கு அல்லது பிளாஸ்டிக் பேப்பர் ஆகிடவற்றை விரித்து அதன் மேல் UV ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிய ஷில்பாலின் ஷீட்டை விரிக்கவும்.பக்கவ்வாட்டில் செங்கல்கள் மேல் உள்ள ஷில்பாலின் சீட்டின் விளிம்புகள் பாத்தியின் உட்புறமாக சரிந்து விடாமல் இருக்க அதன் மீது செங்கற்களை சிறிது இடைவெளி விட்டு வைக்கலாம்.
·         இவ்வாறு தயாரிக்கப்பட்ட தொட்டியில் நன்கு சலிக்கப்பட்ட மண்ணை சமமாக பரப்ப வேண்டும்
·         2-3 நாட்களான மாட்டுச்சாணத்தை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 40 கிராம் அசோப்பாஸ்,20 கிராம் அசோபெர்ட் ஆகியவற்றை  கலக்க வேண்டும். இதணை ஷில்பாலின் தொட்டியில் நான்கு ஓரங்களிலும் விடவும்    
·         தேவையான அளவு தண்ணீர் விட்டு நீர்மட்டம் 7-10 செ.மீ. உயரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது அசோலா பாத்தி தயாராக உள்ளது.
·         சுமார் 1.5 கிலோ நல்ல தரமான  அசோலா விதையை பாத்தியில் பரவலாக தூவ வேண்டும்
·         அசோலா 7 நாட்களில் பாத்தி முழுவதும் பாய் விரித்த்து போன்று பரவி விடும்
அறுவடை செய்தல்
·         முதலில் இட்ட 1 கிலோ அசோலா 7 நாட்களில் 8-10 கிலோ வரை வளர்ந்து விடும். அதன் வளர்ச்சியைப் பொருத்து 7 நாட்களில் 1-1.5 கிலோ வரை தினமும் அறுவடை செய்யலாம். 
 
ஒரு சதுர செ.மீ. ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.
அசோலாவை  சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.
·         அசோலாவின்ஆண்டு உற்பத்தி ஒருஹெக்டருக்கு 1000 மெட்ரிக்டன்
·      அசோலாவின் ஒரு நாள் உற்பத்தி 300 கிராம்/ச.மீ.
கால்நடைகளுக்குப் பயன்படுத்துதல்
·         ஒரு பக்கெட்டில் பாதியளவு தண்ணீரை எடுத்து அறுவடை செய்த அசோலாவை அதனுள் இடவும். சாணத்தின் வாசணை போகும் வரை நன்கு க.ழுவவும். இதனால் வேர்கள் தனியாக பிரிந்து விடும். இலை மட்டும் மிதக்கும்.அதனை சேகரித்து வழக்கமாக கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
·         வாரம் ஒரு முறை அசோலா பாத்தியிலிருந்து 20%தண்ணீரை எடுத்து விட்டு புதியதாக தண்ணீரை விடவும்.


அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.
உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.
அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.
அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.
எளிதில் ஜீரணிக்கவல்ல அசோலா கால்நடைகள், கோழிகள், பன்றிகள், ஆடுகள் மற்றும் மீன் ஆகியவற்றிற்கு சிறந்த உணவாக அமைகிறது .
அசோலாவை உணவாகக் கொடுக்க பரிந்துரைக்கப்படும் அளவு (நாள் ஒன்றுக்கு)
எடை
இனம்
அளவு
கறவைப் பசு, எருது
1.5 ~2 கிலோ
முட்டைக்கோழி, கறிக்கோழி
20~30 கிராம்
ஆடுகள்
300~500 கிராம்
வென்பனறி
1.5~2.0 கிலோ
முயல்
100 கிராம்


அசோலாவின் பயன்கள்
·         30-35% புரதச்சத்து கொண்ட அசோலா அளித்தால் கால்நடைகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும்.பாலின் கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பு நீக்கிய திடப்பொருள் சத்து அதிகரிக்கும்.
·         பசுக்களின் உற்பத்தி திறன் 80% வரை அதிகரிக்கும்.
அசோலாவை ஆடு மாடு, எருமை,பன்றி,மற்றும் கோழிகளுக்கும் தீவனமாக பயன்படுத்தலாம்.  
   

4 comments:

  1. படத்துடன் அசோலா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்றும், அதன் பயன்களையும் நன்கு புரியும் வகையில் கூறியமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. முதுநிலை வேளாண்மை படிப்பில் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மேலும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை உயிர் தொழில் நுட்பம் துறையில் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோயம்புத்தூரில் முனைவர் பட்டம் பெற்ற நீங்கள் இந்த கால்நடை மருந்துவர் பக்கத்திற்கு வந்து கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. I have visited your blogspot and I come to know all the details about Asola and its uses and We got good picture viewing explanation.I clearly understand but we need Asola Seed Pls Tell where we can get them pls do help. Pls do mail this ID
    jkram28@gmail.com

    ReplyDelete
  4. ashola vethi engu kitaikkum adras pls

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...