12 August, 2011

நில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடிக்கை


 
நில நடுக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகி விட்டது. ரிக்கடர் அளவில் 6 மேல் ஏற்படும் போது அதிக இழப்பு ஏற்படுகிறது. நில நடுக்கம் பூகம்பம் வரும் முன் ஏற்படும் ஒரு முதல் அறிகுறியாக இருப்பதால் நில நடுக்கம் குறைந்த அளவாக உணரப்பட்டாலும் அதற்கு முக்கியதுத்துவம் கொடுத்து பாதுகாப்பு இடத்திற்கு செல்வது அவசியம் ஆகிறது. சில சமயங்களில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. பூமிக்கடியில் உள்ள 7 முக்கிய அடுக்குகளில் சில அடுக்குகள்  லூசாக நகர்வதுண்டு அதுவே நில நடுக்கமாக உணரப்படுகிறது.
சொல்லாமல் வரும் திடீர் விருந்தினராக வரும் நில நடுக்கம்:
இது எந்த உயிரையையும் கொல்வதில்லை எனபதுதான் உண்மை. பூகம்பத்தை தாக்கு பிடிக்கும் வகையில் கட்டபடாத கட்டிடங்களின் இடிபாடுகள் தான் பல உயிர்களின் இழப்புக்கு காரணமாக இருக்கிறது. எனவே நில நடுக்கம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பூகம்பத்தை தாக்கும் பிடிக்கும் வகையில்( BIS code) கட்டிடத்தை கட்டவேண்டும்.
நில நடுக்கம் உணர்ந்தவுடன் செய்யவேண்டியது:
1)      வீட்டை விட்டு வெளியில் விரைவாக ஒரு நிமிடத்தில் செல்லமுடியும் என்றால் வந்து திறந்த வெளியில் அருகில் எந்த கட்டிடமோ, மரமோ, மின் கம்பம், தொலைபேசி கம்பங்கள் இல்லாத இடத்தில் நிற்கவேண்டும். மேலே மின் கம்பிகள் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும்
2)      நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயை பூகம்பமாக மாறி கட்டிடங்கள் இடிபட ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் வெளியேரும் பலரும் இடிபாடுகளில் மாட்டி கொள்கிறார்கள். வீட்டின் உள்ளேயும் தங்கள் விலைமதிப்பான பத்திரபடுத்த ஆங்கேங்கே நடமாடும் ஆசாமிகள் மாட்டிக்கொள்கிறார்கள்.

3)      அடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ளவர்கள் கட்டாயம் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக படிகட்டில் அடைந்து நெரிசலில் பல உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும் லிஃப்ட் ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மின் தடை ஏற்பட்டு பாதியில் நின்றுவிடும் வாய்ப்புள்ளது.
4)      நில நடுக்கம் உணரப்பட்டதும் விரைவில் வெளியே செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வழுவான கட்டில் அல்லது மேஜை அடியில் படுத்துக்கொள்ளவேண்டும். அடியில் பயத்துடன் படுத்திருக்கும் போது நில நடுக்கத்தினால் மேஜை அல்லது கட்டிலோ இடம் பெயர்ந்துவிட்டிற்கும். எனவே அதன் கால்களை கெட்டியாக அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் முன் கூட்டியே யார்யார்க்கு எந்த கட்டில் என்றும் அப்பொழுது நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி  ஒத்திகை நடத்திருந்தால் மிகவும் சிறப்பு. கட்டிலின் அடியில் பொதுவாக பலபொருட்களை வைக்கும் பகுதியாக பயன்படுத்துவதை கைவிடவேண்டும்.
5)      மேஜை அல்லது கட்டில் கிடைக்காதபோது வீட்டின் உள்ளே உள்ள கதவின் நிலை கால் அடியில் நின்றுகொள்ளவேண்டும். கதவின் வாசற்கால் வைத்திருக்கும் அமைப்பின் மேல் லிண்டல் அமைப்பு காங்கிரிட்டில் இருக்கும். அது இடிபாடுகளின் பகுதிகள் நம் மேல் விழும் பாதிப்பை குறைக்கும்.
6)      கதவு குறைவாக இருந்து உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் கட்டிடத்தின் மூலை பகுதியில் அட்டைப்போல் ஒட்டிக்கொள்ளவேண்டும். நில நடுக்கத்தின் போது கட்டத்தின் மையபகுதிதான் முதலில் விழும், மேலும் அவைகளின் மூலம் தான் பாதிப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன்.
7)      ஒரு தலையாணையை தலையில் ஐயப்ப பக்தர் போல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
8)      இடிபாட்டில் மாட்டிக்கொண்டால், முதலில் ஆசுவாசபடுத்திக்கொண்டு நீண்ட உள் மூச்சு இழுத்து காற்றை நன்றாக இழுத்துக்கொள்ளவேண்டும். பின்னால் இடிபாடுகள் அதிகமாகி காற்றே கிடைக்காமல் போகலாம். இடிப்பாட்டு தூசுகளை மற்றும் புகை மூட்டத்தை தவிர்க்க ஒரு கர்ச்சீப்பை முகத்தில் கட்டிகொள்ளவேண்டும். துகள்கள் மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.
9)      இடிபாடுகளை உள்ளே இருந்து நீக்கி வெளியே வர முயலக்கூடாது. வெளியா எப்படிப்பட்ட நிலை உள்ளது என தெரியாது. நம்முடைய முயற்சி சரிவை அதிகப் படுத்திவிடும்.
10)   இடிபாட்டிற்குள் இருந்து சத்தம் இட்டு அல்லது கூக்குரல் செய்வதை தவிர்க்கவேண்டும். இவைகள் நம்மை எளிதில் பலம் இழக்கசெய்துவிடும்.உதவிக்கு சத்தம் இடுவது கடைசி முயற்சியாமட்டுமே இருக்கவேண்டும்.
11)   அருகில் உள்ள சுவரை தட்டுவது, கையில் விசில் வைத்துகொள்ளுதல் வெளிநாட்டில் வழமையாக உள்ளது. நாமும் விசில் ஒன்று வைத்திருந்தால் அதை ஒலிக்கசெய்து காப்பாற்று பணியில் உள்ளவரை நம் பக்கம் ஈர்க்கலாம்.சிறிய டார்ச் லைட் வைத்துகொள்ளுவது கூட உதவி செய்யும்.
12)   நில நடுக்கத்தின் போது வெளியில் வந்தபின் நமது இடிபட்ட வீட்டிற்குள் எதேனும் முக்கிய எடுக்கவேண்டும் உள்ளே செல்லக்கூடாது. சில இடிப்பாடுகள் தாமதமாக ஏற்படலாம். மீட்பு குழுவினர் மட்டுமே அப்பணிகளை செய்யவேண்டும்.
13)   நிலநடுக்கம் முடிந்த பின் பாதுகாப்பான இடத்திலிருந்து ரேடியோ அல்லது தொலைக்காட்சி மூலம் செய்திகள் கேட்கவேண்டும்.அரசு நில நடுக்கத்தின் ரிக்டர் அளவு, மீண்டும் வரும் எச்சிரிக்கை, பாதுகாப்பு ஆலோசனைகள் கேட்டு அதை கடைப்பிடிக்கவேண்டும்.
14)   நிலநடுக்கத்தின் போது கார் ஒட்டி கொண்டிருந்தால் காரை பாதுகாப்பாக மரமோ, மின் கம்பமோ. மின் கம்பிகள் பாதை இல்லாத இடமாக ஓரமாக நிறுத்தி காரின் உள்ளேயே இருக்கவேண்டும். நிலநடுக்கம் நின்று விட்டதை உறுதியாக அறிந்து பின் பாலங்கள் இல்லாத வழியாக தேர்வு செய்து வீடு திரும்பவேண்டும். ஏனேன்றால் பாலங்கள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு கார்செல்லும் போது விபத்து ஏற்படலாம்.
வெளிநாட்டில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இது போன்ற பேரிடர் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை நன்றாக பயின்று அவைகள் மாதம் ஒரு முறை ஒத்திகை பார்த்து தயார்நிலையில் இருப்போம். நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இன்றைக்கே பேரிடர் ஒத்திகை பார்த்துவிடுங்கள்,  இழப்புகளை குறைத்துக்கொள்ளுவோம்!

புற்று நோய்- பயப்படவேண்டிய நோய்?


புற்று நோய் - 'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!

- ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.

புற்று நோய்க்கு என்ன காரணம்?

பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன.

அவை:

குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.

எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?

வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.

நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.

வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.

ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.

மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.

கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.)

சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில்படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.

(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். 'மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கவும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.)

இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?

தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பராக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.

'ஹியூமன் பபிலோமாவைரஸ்' (Human Papilloma Virus - HPV) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?

முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.

சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?

ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு 'பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்' என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.

புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?

காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு 'மேஜர்' ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது 'சிம்பிளான' ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று 'ரிஸ்க்'தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?

மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன.

அவை:

1. ஆபரேஷன்
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்)
3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்)

07 August, 2011

காலை நேரம் கடனே என்றில்லாமல் இனிமையாக இருக்க!

        வித விதமாக, பல்சுவையாக சப்புக் கொட்டி சாப்பிட்டு அதை ஜீரணிப்பதில் முதல் இன்பம்.பிறகு அடுத்த நாள் போராட்டம் இல்லாமல்,முக்கல் முனகல் இல்லாமல் முன்பு சாப்பிட்டதை லாவகமாக  வெளியேற்றினால் அதுவே பிரதான இன்பம்.
        கால்நடை நடைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வருவதே இல்லை! ஏன்? அது சாப்பிடும் உணவில் (தீவனத்தில்) நார்ச்சத்துக்கள் ஏகத்துக்கு நிறைந்திருப்பதுதான்! நாம் வளர்க்கும் செல்லபிராணி நாய் இயற்கையிலே மலச்சிக்கல் என்று உணர்ந்தால் உடனே அவை புல்லை சாப்பிட்டு நார்ச்சத்துகள் உடலில் சேரும் வகையில் ஏற்படுத்திக்கொள்கிறது.
         ஆனால் நமக்குதான் டாக்டர் நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ சொன்னால்தான் அதுவும் காலை பொழுது அவஸ்தையில் முடிந்தால் தான் நார்ச்சத்து உணவை நினைத்து பார்ப்போம்..

அதென்ன, நார்ச்சத்து உணவுகள்?
           உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு “ப்ரை’ ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும்  கூரியர் சேவையை செய்கிறது.
தேவை 35 கிராம் நார்ச்சத்துகள்:-
                         ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம்; சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.. நேரடியாக ,கீரை,காய்கறி, பழங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன.




                     உடனே டாக்டர் சொல்லிவிட்டார் என உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், அதுவும் தவறு! வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.
என்ன சாப்பிடலாம்
“ஒயிட் பிரட்’டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள்; கேக், பிஸ்கட், இனிப்புகளை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம். சாப்பிடமுடிந்தவைகளை மேல் தோலுடன்
சாப்பிடுங்கள், தோலில் தான் நார்சத்து அதிகம்.ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி,  முழு கோதுமை, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.


                     நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் சாப்பிட
* பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்த சாலட் சாப்பிடலாம்.
* பழ ஜூஸ் குடிக்கலாம்; தவறில்லை; ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட்டால் தான் அதிக சத்து.
* ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடுபவரா? முதல்ல அதை விடுங்க;  சச்சின் போல அப்படியே முழுசா சாப்பிடுங்க.
* சூப் சாப்பிடுவதென்றால், அதிக காய்கறிகளை சேருங்க.
* உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம்,
பழங்கள், கீரைகள்  எங்கு தேடி எப்படி? என்ற சுறுசுறுப்பானவர்களுக்கு மாத்திரை, மற்றும் பவுடர் வடிவில் நார்ச்சத்துகள் மருந்துகடைகளில் கிடைக்கிறது. மருத்தவரின் ஆலோசனை படி சாப்பிட்டு காலை (கடன்)பொழுதை இனிதே அமைத்துக்கொள்ளுங்கள்!

30 July, 2011

நல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி?

ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு  மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்!
நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்!
உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி!
கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’  ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும்.
மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(கொஞ்சம் சிரமம் தான்), உண்மையில் நல்ல மட்டன் வாங்க இதோ டிப்ஸ்கள்!

செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா?
மட்டன் (Mutton) என்று  சொல்லப்படுவது செம்மறி ஆடு இறைச்சிதான்.
சவான் (Chevon) என்றால்தான் வெள்ளாட்டு இறைச்சி.
நமக்கு செம்மறி ஆடு இறைச்சி வேண்டுமா? வெள்ளாடு இறைச்சி வேண்டுமா? என்று முடிவு செய்யுங்கள்?
நிறைய பேர் வெள்ளாடு இறைச்சியைதான் விரும்புகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை! ஆனால் செம்மறி ஆடு இறைச்சிதான் மிகவும் ருசியானது என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை!
எல்லோரும் வெள்ளாடு இறைச்சி வேண்டும் எனக் கேட்பதால் கசாப்புக்கடைகாரர் செம்மறி ஆட்டின் வாலில் கருப்பு மை தடவியும், அல்லது வேறு வெள்ளாடு வாலை செம்மறி ஆட்டின் வாலிற்கு பதிலாக சொருகி பாவலாகாட்டும் கசாப்புகடையும் உண்டு. வெள்ளாடு இறைச்சிதான் வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் காசாப்பு கடையில் தொங்கும் இறைச்சியின் வாலை தொட்டு மை தடவி உள்ளதா என பாருங்கள், அல்லது ஒட்டு வாலா என அறிய இழுத்து பாருங்கள். ஒரு சில கில்லாடி கடைகாரர் கருப்பு நிறம் ஆக்க ஹேர் டை அடித்துவிடுகிறார்கள் தொட்டாலும் கண்டுபிடிக்கமுடியாது! மேலும் ஒட்டல் வால் பகுதியை உள்பக்கமாக தைத்துவிடுவார்கள் அதுவும் எளிதா கண்டுபிடிக்கமுடியாது! எனவே செம்மறி ஆடு இறைச்சியை கண்டு பிடிக்க ஒரே டிப்ஸ்  இறைச்சியில் கடைகாரர் எவ்வளவுதான் கழுவினாலும் லேசாக அதன் ரோமங்கள் ஒட்டிகொண்டிருக்கும் அதை உன்னிப்பாக கவனித்து இது செம்மறி ஆடு இறைச்சி எனக் கண்டு பிடிக்கலாம்! அது இல்லாதது வெள்ளாடு! மேலும் செம்மறி ஆடா, வெள்ளாடா, அல்லது மாட்டிறைச்சியா என கண்டுபிடிக்க என்சைம் பரிசோதனை, பைபர் எண்ணிக்கை பரிசோதனை,அனட்டாமிக்கல் பரிசோதனை பல பரிசோதனைகள் இருந்தாலும் அவைகள் கால்நடை மருத்துவர்களால் மட்டும் முடிந்தவைகளாக உள்ளது. ஒரு அதிர்ச்சி கொசுறு செய்தி, ஒரு நாயின் தலையை,கால்களை துண்டித்துவிட்டு தோலை உரித்துவிட்டு தொங்கவிட்டால் அசல் வெள்ளாட்டு இறைச்சி போன்றே இருக்கும்.இதை கண்டுபிடிக்க நிச்சயம் கால்நடை மருத்துவரின் உதவி தேவை! முனிசிபல் மற்றும் கார்ப்பரேஷன் பகுதியில் கால்நடை மருத்துவர் இறைச்சியை பரிசோதித்து அதன் தொடை பகுதியில் அவர் பணிபுரியும் நிலையத்தின் முத்திரையை பதித்திருப்பார், தலையில் நெற்றி பகுதியில் அரக்கு சீல் இருக்கும்  இவைகளை கவனித்து வாங்கலாம். தலையில் இருக்கும் முத்திரை அந்த ஆட்டை உயிருடன்  இருக்கும் பரிசோதனை செய்ததற்கான அடையாளம்.இந்த அடையாளம் இருந்தால் தான் இறைச்சி கூடத்திற்குள் ஊழியர்கள் அனுமதிப்பார்கள். அறுக்கப்பட்டு உறித்து வெளியே வரும் போது கால்நடை மருத்துவரால் மீண்டும் இறைச்சியை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதன் அடையாளம் தான் தொடையில் வைக்கப்பட்டுள்ள முத்திரை!

இளம் இறைச்சியா? கிழட்டு ஆட்டு இறைச்சியா?
தொங்கி கொண்டிருக்கும் இறைச்சியின் கழுத்து பகுதியை உன்னிப்பாக கவனியுங்கள். 1)கழுத்து பகுதி தடிமனாக பெரிதாக இருந்தால் அது வயதானதாக இருக்கலாம். இந்த இறைச்சி வேகவைக்க சிரம்ம படவேண்டும்
2) கழுத்து பகுதி மிகவும் சிறிதாக இருந்தால் இது குட்டியா இருக்கலாம் அல்லது சரியான வளர்ச்சியில்லா சவலை ஆடாக இருக்கலாம். இந்தவகை வளவளப்பாக பசை இல்லாமல் இருக்கும். இதுவும் நமது சமையலுக்கு ருசிசேர்க்காது.
3)மிதமான கழுத்து உள்ள இறைச்சி நமது சமையலுக்கு உகந்தது. நமக்கு மனைவியிடமிருந்து வசைகளையும் குறைக்கும்.
4)கழுத்தின் வெட்டு பட்ட பகுதி ஐஸ் கிரீமை வெட்டியது போல் (Smooth cuting) இருந்தால் முன்பே இறந்த ஆட்டினை வாங்கி கசாப்பு செய்திருக்கிறார்கள் என அனுமானிக்கலாம். இதையும் நமது ஆரோக்கியத்தை எண்ணி தவிர்க்கலாம்.
5) கழுத்தின் வெட்டு பகுதி பிசிறுகளுடன் மேலும் இறைச்சி இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நல்லது.
6) கிட்னியை சுற்றி கொழுப்பு சூழ்ந்துள்ளதா எனப் பார்க்கவேண்டும். இது போஷாக்காக வளர்க்கப்பட்டுள்ளதற்கான் அடையாளம்.
7) பொதுவாக ஆண் கிடாதான் கசாப்புக்கு விற்பனைக்கு வரும். அதனால் சிறிதாக இருந்தால் இளம் குட்டி! பெரிதாக கெட்டியாக இருந்தால் வயதானதாக இருக்கலாம். இதை வாங்கி சமைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என நினைக்கவேண்டாம். அப்படியெல்லாம் இல்லை.
8) தொங்கப்பட்டுள்ள ஆட்டில் விரை (Testis) இல்லையென்றால் அது பெண் ஆடாக இருக்கலாம். பொதுவாக இளம் பெட்டை ஆடுகள் இனப் பெருக்கத்திற்கு பட்டியில் வைத்துக்கொள்வதால் இந்த வயது பெட்டை ஆடுகள் கசாப்புக்கு வருவதில்லை. வயதான, நோயுற்ற, குட்டி போடமுடியால் இறந்துவிட்ட பெட்டை ஆடுகள்தான் விற்பனைக்கு வருகிறது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

எந்த பகுதி இறைச்சியை வாங்கலாம்?
சிலர் தொடை கறியை மட்டும் கொடுங்கள் என்று வாங்குவார்கள் அந்த பகுதி கொஞ்சம் வேகுவதற்கு நேரம் அதிகம் ஆகும். ஒரு ஆட்டின் கழுத்து, நெஞ்சு பகுதி, முன்னங்கால் பகுதி,  தொடை பகுதி,சிறிது ஈரல் என எல்லாம் பகுதியிலிருந்தும் சீராக இருக்கும்மாறு வாங்குவது நல்லது. இளம் சிகப்பு ( ரோஜா) நிறம் இறைச்சியாக இருந்தால் நன்று. கொஞ்சம் டார்க்காக இருந்தால் அது கிழடாக இருக்கலாம் இதை வேகவைக்க சோடா உப்பு, பப்பாளி காய் என பல டிப்ஸ்கள் தேவைபடும். மேலும் சாப்பிட்டுமுடித்துவிட்டு பல் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் இறைச்சி துகள்களை அகற்றும் வேலை பிரதானமாக இருக்கும். ஆடு அறுக்கும்போதே அருகில் காத்திருந்து சுடசுட அந்த இறைச்சியை வாங்கிவந்து வேகவைத்தால் அது இளம் ஆடாக இருந்தாலுமே வேகவைக்க சிரமப்படவேண்டும். ஆடுகள் அறுக்கப்ட்டு சில மணிநேரங்கள் தோங்கவிடும் போதுதான் தசைபகுதியில் உள்ள மையோகுளோபின் மாறுதல்கள் நடந்து விரைப்புத் தன்மை விலகி சமைக்க தயாராகிறது.எனவே அப்படி வாங்கி வந்த இறைச்சியை நல்ல காற்றோட்டமான பாத்திரத்தில் சில மணி நேரம் வைத்திருந்து பிறகு சமைக்கலாம்.
இரத்தம், குடல் வறுவல் அபிமானிகளுக்கு ஒருவேண்டுகோள் இதில் சத்துக்களும் குறைவு, ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது இல்லை. ஆசையாக இருந்தால் சில நாட்கள் சாப்பிடலாம். ஆனால் நன்றா சமைத்து!
இந்த ஞாயிறு இந்த டிப்ஸ்களுடன் கசாப்புகடைக்கு வீறுகொண்டு செல்லுங்கள். நல்ல தரமான மட்டன் வாங்குங்கள் மனைவியிடம் நல்ல பேர் வாங்குங்கள்! டிப்ஸ்கள் வழங்குவது எளிது! கசாப்புகடைகாரரின் மீசையை கவனத்தில் கொள்ளுங்கள், மேலும் அவரின் கசாப்பு வெட்டு கத்தியின் மேல் ஒரு கண் இருக்கட்டும். பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல் நீங்கள் குறிப்பிடும் இறைச்சியை தைரியமாக கேட்டு வாங்குங்கள்! இல்லை என்றால் கடையை மாற்றுங்கள்!!  என்னுடைய டிப்ஸ்களை நீங்கள் நடை முறைப்படுத்தி வாங்க முயற்சித்து கடைகாரர் மூலம் இலவசமாக கிடைக்கும் திட்டுகளோ, இரத்தக் காயங்களுக்கு ஆசிரியர் குழு பொறுப்பு இல்லை!!

10 July, 2011

இலவச பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படுகிறது.

தமிழகமுதலவர்
சென்னை, ஜூலை 9: தமிழக அரசின் இலவச பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக 1,600 குடும்பங்களுக்கு பசுவும், 1,600 குடும்பங்களுக்கு ஆடுகளும் வழங்கப்பட உள்ளன.  ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும் இலவசமாக பசு மாடுகளும், ஆடுகளும் வழங்கப்படும் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.  இதுகுறித்து, அதிகாரிகள், அமைச்சர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:  வெண்மைப் புரட்சி: குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் பல திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் தேர்தல்  அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, 60 ஆயிரம் கறவை மாடுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்.  அதன் முதல் கட்டமாக, அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி 1,600 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.  ஜெர்சி பசுக்கள்: இந்தத் திட்டத்தின்கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் எதுவும் இல்லாத கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு இந்தப் பசுக்கள் அளிக்கப்படும். இந்த கிராமங்களில் புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கான பயனாளிகள் கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர்.  பயனாளிகளில் 30 சதவீதம் பேர் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். பசுக்களை இலவசமாகப் பெறும் பயனாளிகள் முழு திருப்தியடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பயனாளிகளே அரசு அலுவலர்களுடன் நேரடியாக அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள கால்நடை சந்தைகளில் இருந்து பசுக்களை வாங்குவதற்கு வழிவகை செய்யப்படும்.  இலவசமாக கொடுக்கப்படும் பசுக்களை காப்பீடு செய்வதற்கும், பசுக்களை அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதற்கும் அரசே நிதியுதவி செய்யும். மேலும், பசுக்களை பயனாளிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் அடையாளச் சின்னம் இடவும் அரசு உதவி செய்யும்.  இனி வரும் ஆண்டுகளில் மாநில கால்நடைப் பண்ணைகளில் இருந்தும் இந்த கலப்பின பசுக்களைப் பெறும் வகையில் மாநில கால்நடைப் பண்ணைகளை வலுப்படுத்தவும் அரசு நிதியுதவி செய்யும்.  இலவச ஆடுகள்: ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.  வரும் ஐந்தாண்டுகளில் ஊரகப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், குடும்பத்துக்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும். கிராம சபையால் தேர்ந்தெடுக்கப்படும் நிலமற்ற ஏழைகளே இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள்.  இலவச பசு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். பயனாளிகளே அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆடுகளை அருகிலுள்ள சந்தைகளில் இருந்து ஆடுகள் வாங்க அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம். 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வயதுள்ள ஆடுகளுக்கான விலை, ஆடுகளை பயனாளிகள் இருப்பிடங்களுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும்.  தீவனப் பயிர் பெருக்கத் திட்டம்: இந்த 2 திட்டங்களின் மூலம் வழங்கப்படும் கால்நடைகளுக்கு குறைவின்றி பசுந்தீவனம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.  மாநிலத்தில் கால்நடைத் தீவனப் பயிர் பெருக்கத் திட்டம் வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

05 July, 2011

உடல் எடையை குறைக்க தினமும் ஒரு வேகவைத்த முட்டை



அழுத்தி பிடித்தால் உடைந்துவிடும் மெல்லிய ஓடுஆடையின் உள்ளே மொழு மொழு மஞ்சள், வளவளப்பான வெள்ளை என கவர்ச்சிகரமாக கூட்டணியில் ஏகத்து சத்துக்களை பொக்கிஷமாக குவித்து வைத்திருக்கும் பெட்டகம் தான் முட்டை!

மூளை வளர்ச்சிக்கு முட்டை:-
கொழுப்பு போன்ற இரண்டுவகையான சமாச்சாரங்கள் தான் (Phosphatidylcholine and sphingomyelin) மூளையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து மூளையின் செயல்பாட்டையும், நலனையும் பாதுகாக்கும் ஆட்சி பொறுப்பை  செய்கிறது. அந்த பணிக்கு சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்யும் (methylation)  பணிக்கு முட்டையில்  உள்ள கொளின் (Choline)  “மூளை”யாக செயல்படுகிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து தசைகளுக்கு தரப்படும் சமிக்கை உத்திரவுகளை கொண்டு சேர்க்கும் காதல் தூதுவன் அசிட்டைல்கோளின் அவர்களின் மூலப் பொருளாகவும் இருக்கிறது.  சத்துணவில் முட்டை நமது வருங்காலத்தின்  விதை! அதொடி ஒமேக்கா 3 கொழுப்பு, அத்தியவசிய அமைனோ அமிலங்கள், விட்டமின்கள் ஏ, டி, இ, பி2 ,பி1,பி12 , புரதம், மாவு  சத்து,  பல தாதுஉப்புக்கள் என பல குவியல்களை உள்ளடக்கியது முட்டை!
ஆஃப் பாயில் முட்டை:-

மெல்லிய வெண்மை நிற விரிப்பில் மெத்தென புடைப்பாகவும் பளபளப்பாகவும் மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாகவும் ஆங்காங்கே கருப்பு கீற்றுகளும் ஒருங்கிணைந்த அதை லாவகமாக கையாண்டு ஒரே சுருட்டில் வாயினுள் நுழைத்து சுவைக்கும் போது பெப்பரின் வாசனையும், முட்டையின் மென்மையான  சுவையும் அருமை அருமை! உடல் எடையை அதிகரிக்க, கட்டுமஸ்தான உடலாக கொண்டுவர பலராலும் சாப்பிடப்படுகிறது. சாலமனோலா என்ற  கிரிமிகள் பாதிக்கபட்ட கோழியிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இந்த கிரிமிகள் இருக்க வாய்ப்புள்ளது. இது மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் தோல் சம்மந்தப்ட்ட வியாதிகளும் வரவாய்ப்புள்ளது. புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் பச்சை முட்டையையோ அல்லது ஆஃப் பாயில் முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும். மூச்சு திணறல் அறிகுறி தோன்றலாம்!
நன்றாக வேக வைத்த முட்டை:-
முட்டையில் 211 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்றாலும் முட்டையில் உள்ள லெசித்தின் என்ற பொருள் உடல் கொலஸ்ட்ராலை கிரகிப்பதை தடைசெய்து விடுகிறது எனவும் கொலஸ்ட்ரால் நன்றாக  வேகவைக்கப்படும்போது ஆக்ஸிடேசன் ஆகி கொலஸ்ட்ரால் என்ற பூச்சாண்டியை துரத்திவிடுகிறது எனவும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றது.
முட்டையை வேக வைப்பது எப்படி?
எத்தனை முட்டைகளை வேக வைக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தை தெரிவ செய்து அதில்  முட்டைகளை  போட்டு முழுகும் வரை தண்ணீரை ஊற்றவேண்டும். முட்டைகளை நெருக்கமாக அடுக்க கூடாது. கொதிக்கும் போது ஒன்றோடு ஒன்று மோதி  உடைந்துவிடும். முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் முட்டை அடங்கிய பாத்திரத்தை வைத்து அதில் உள்ள தண்ணீர் கொதிக்கும் நிலை வரும் வரை காத்திருந்து பாத்திரத்தை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு ஸ்வாலையை குறைத்து வைத்து 12 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பெரிய முட்டைகளாக இருந்தால் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.பின் குளிர்ந்த நீருக்கு முட்டைகளை மாற்றி குளிரவைத்து ஓட்டினை உரித்து உஜாலா போடாமலேயே பளிச்சிடும் வெண்மையில் உள்ள முட்டையை சாப்பிடலாம்.
பாத்திரத்தில் போடும் முன் முட்டையில் கெட்ட வாசனை உணர்ந்தால் அதை பயன்படுத்தக்கூடாது.
முட்டையில் வெடிப்பு, கீரல் இருந்தால் அதையும் விலக்கவேண்டும்.
ஒரு சமமான தரையில் முட்டையை சுழலவிட்டால் ஒரே சீராகா சுற்றாமல்  தடுமாறினாலும் அது கெட்டுபோனதாக இருக்கலாம்.
தண்ணீருக்குள்  மூழ்காமல் மிதக்கும் முட்டைகளை விலக்கவேண்டும்.
தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் முட்டையிலிருந்து குமிழ்கள் வெளிப்பட்டாலும் அந்த முட்டைகள் பயன்படுத்தக்கூடாது. முட்டையில் கீரல் உள்ளது என்ற அடையாளம்!
முட்டையின் ஓடு கெட்டியாக  இல்லாமல் ரப்பர் போல் இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.
நன்றாக வேக வைத்த முட்டையும் கலோரியும்:-
வேக வைத்த முட்டையில் அனைத்து சத்துகளும் குறைவில்லாமல் உள்ளது. 77.5 கலோரிகள்,, 5 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் செச்சுரேட்டடு கொழுப்பு, 190 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 55 மில்லி கிராம் சோடியம், 1கிராம் மாவுசத்து, 1கிராம் இனிப்பு சத்து, 6 கிராம் புரதச்சத்து, 20 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்து என அடுக்கி கொண்டே போகலாம்.
நன்றாக  வேகவைத்த முட்டையில் 77.5 கலோரிகள் எரிப்பொருள் உள்ளது. இந்த முட்டையில் அனைத்து சத்துக்களையும் கிரகிக்க  நமது உடல் 100 கலோரிகள் மேல் எரிப்பொருள் செலவழிக்கிறது. எனவே நன்றாக வேகவைத்த முட்டை சாப்பிடும் போது நமது உடல் எடை குறைகிறது என்கிறது ஆராய்ச்சி!

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...