Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

24 November, 2025

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

 சக்கரை... ஏன் சக்கரை...


சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?


"சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடவே கூடாது" என நாம் ஒதுக்கும் ஒன்றை, "நோயை வென்று வர, ஆரோக்கியம், அழகும் ஒருங்கே வரும், சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடுங்கள்" என்கின்றனர் நிபுணர்கள்.
உண்மையிலேயே சர்க்கரை வள்ளிக்கிழங்கு சர்க்கரை குறியீடு உள்ளதா? இல்லையா? வாங்க இன்றைய இயற்கைய 360° பயணத்தில் தெரிந்து கொள்வோம்...
👉அக்கடா கண்ட், கண்ட் பட்டேட்டோ, குண்டூஸ், வத்தாளைக் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தாவரப்பெயர் Ipomoea batatas. தோன்றியுள்ளது தென் அமெரிக்கக் கண்டத்தில் எக்வெடார் பகுதி. இது உருளை 'Batatas' வத்தன்-- அமெரிக்கிய மொழியில் உருண்டையான கிழங்கினைக் குறிக்கப் பயன்பட்டதன் இணைப்பிற்குட்பட்டது. 'Potato' என்ற சொல் என்றென்றும் வர வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.
👉வெள்ளை, மஞ்சள், அடர் மஞ்சள், ஆரஞ்சு, ஊதா நிறங்களில் தென்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயரில் மட்டும் சுவையில்லை. இவை அடுக்கடுக்காகப் புதைந்திருக்கும் நீலத் திரைத் திறந்துகிட்டு இருக்கும் ஊட்டவியல் நிறங்கள் அதன் வரிசையைப் பறைசாற்றுகின்றன.
👉ஒவ்வொரு நூறு கிராம் கிழங்கிலும் 90 கிலோ கலோரி இருப்பதால், உலகின் ஐந்தாவது பிரதான உணவாய், வளர்ந்து வரும் நாடுகளின் பட்டினிக்குணவை உணவாகும் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கிறது.
👉100 கிராம் கிழங்கில் 20 கிராம் மாவுச்சத்து, 2 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 75 சர்க்கரை நீர்த்தன்மை மற்றும் 100 கிராம் கிழங்கில் 500 மி.கி. C, B6 மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு, அயனி, கால்சியம், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம், தாமிரம்பிரும்பு, செலினியம் உள்ளிட்ட அத்தியாவசிய கனிமச் சத்துகள் இருப்பதால் கொப்பளிக்கும் நிலையான இதை சூப்பர் கிழங்கு என்றழைக்கலாம். Phytouments எனப்படும் இதன் தாவரச்சத்தில், ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளவனாய்ட், கரோட்டீனாய்டுகள், டானிட் மற்றும் ஃபிளவனாய்ட் உள்ள கரோட்டீன் போன்றவை குறிப்பாக ஆரஞ்சு, ஊதா நிற கிழங்குகளில் சத்து நிறைந்திருக்கின்றன. மேலும், மிர்செட்டின், குவார், குயீன், கெம்பெரியன், ஆர்னட், ஆண்ட்ரோல் போன்ற கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன.
👉இக்கிழங்கு மருத்துவ குணங்களுக்கு சரமாரியான உலகப்புகழ்பெற்றது.
அதிகம் காணப்படும் 'Complex carbohydrates' என்றழைக்கப்படும் Glycemic Index எனப்படும் சர்க்கரை மாவுச்சத்து குறைவாகியுள்ளது. அதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் மெதுவாய், நிதானமாய்ச் சேர்வதால் சர்க்கரை நோயாளிகள் மூச்சு விடலாம்.
👉இருந்தாலும், உறுதியாக, உடற்பயிற்சியின் தேவை, ஒழுங்கான உணவுக் கட்டுப்பாடு, மனதை ரிலாக்ஸ் செய்தல், நல்ல தூக்கம் ஆகியவை ஒரு சர்க்கரை நோயாளியின் வாழ்க்கைக்கு முக்கியம்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் முதலில் மாதம் 200 ரூபாய் செலவில் 4 வேளையும், 200 சர்க்கரை மாத்திரைகளையும், நல்லது, நல்லது என்று சர்க்கரை நோய் பற்றிய ஆலோசனைகளையும் கொடுக்கிற ஒரு மருத்துவரைத் தேடிப் போகத் தூண்டும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க மாதம் 25 சர்க்கரை மாத்திரைகள் வேண்டும்.
👉ஆனால் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்படாதவர்களைப் பற்றி இங்கே பேசுகிறோம். ஒரு வாரத்தில் ஒருமுறை (உதாரணமாக) 3 சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் பிழிந்தால், நீர்ச்சத்து மற்றும் மாவுச்சத்து ஆகியவை ரத்தத்தில் குளுக்கோஸாக மெதுவாய் சேருமே தவிர, ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால் வாழ்க்கை முறை நோய்களையும், உணவுப் பழக்கத்தையும், மனப்போக்கையும் நாளுக்கு நாள் மாற்ற வேண்டியது கட்டாயமாகும். சர்க்கரை நோய் வருவதால் தடுக்கவும், அதன் தீவிரத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
கிழங்கில் இருந்து பெறப்படும் தொகைக் குடல் பகுதியில் வசிக்கும் ஒரு வகையான நுண்ணுயிர் (Probiotics & Prebiotics) உணவாக செயல்படும் நுண்ணுயிரி (Communal Microbome) சத்துக்களைத் அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தைக் காப்பதன் மூலம், குடல் நுண்ணுயிரிகள் மூலம் புரதங்களையும் மற்றும் புரோட்டீன்களையும் ஜீரணம் செய்து, புரோட்டீன் சத்துக்களைக் கொடுக்கிறது.
👉ஆஞ்சியோ எய்டு அமிலத்தால் அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்றத்தால், பித்தப்பை, சிறுநீரகம், எலும்பு ஆகிய உறுப்புகளை இளமையுடன் வைப்பதன் மூலம் மருத்துவப் பயன்களும் அறிந்துகொள்ளப்படுகிறது. அதேசமயம், "மிகவும் குறைவான சோடியம்" என்ற பயன் மருத்துவக் கூற்றாகப் பலரால் அறியப்படுகிறது. அது இதயச் செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் துணை புரிகிறது.
எல்லாம் ஒருபக்கம் இருக்க, இது இந்தப் பூமியில் படைக்கப்பட்டு, உயிர் வாழ மனிதனின் உணவுக்காகப் பயன்படும் பொருளாக இருப்பதால்தான் இந்தப் படைப்புக் குணம், கிழங்கில் உள்ள 117 சத்துக்களையும் கொடுப்பதாகக் கருதப்படுகிறது. இதில் 11% இரும்புச்சத்து, 14% ஃபோலிக் அமிலம், 16% பாஸ்பரஸ், 34% பொட்டாசியம், 43% வைட்டமின் A, 35% வைட்டமின் C சத்துக்களும் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு நாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் ரகத்தைப் பொறுத்தும், எவ்வளவு நாள்கள் சாகுபடி செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறலாம்.
👉இந்தியாவில் கிழங்கின் அதிக விளைச்சல் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ளது. இந்தக் கிழங்கு அதிகம் விளைகிறதோ, அதற்குக் குறைந்தே வியாபாரம் உள்ளது. இதனால், விவசாயம் மண்டலங்கள் தாண்டிச் சென்று விற்பனையாகும் நிலையும், கோடிகள் மூலமாக லாபமாகிய நிலையும் உள்ளது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரை நோய்
சர்க்கரை உணவுக்கு பதிலாகச் சர்க்கரை வள்ளிக்கிழங்கைச் சேர்க்கும் ஒருசிலர், புளிப்பு மற்றும் உவர்ப்பு உணவுகளிலிருந்து நீங்கிக் கிழங்குச் சத்து நிறைந்த உணவைத் தேடுகின்றனர். அமிலங்களின் நன்மைக்குப் பதிலாகத் தீமைகளே இந்தக் கிழங்கிற்கு அதிகம் கிட்டும். ஒருசிலர், ஆரஞ்சு, ஊதா நிற கிழங்குகளைத் தவிர்த்து, வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிறக் கிழங்குகளைத்தான் மாற்று உணவாகக் கொள்கின்றனர். எல்லா ரகங்களிலும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் சத்துகள் நிறைந்த உணவு உண்டால், சர்க்கரை நோய் பற்றிய பயம் அவர்களுக்கு இருக்காது. ஆனால், இந்தக் கிழங்கு சத்துக்கள் இருந்தாலும், இதிலுள்ள சர்க்கரைச் சத்து சிலருக்கு ஆபத்தாக அமைகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள சத்துகள், உடைந்த செல்களைச் சீரமைக்க உதவுகின்றன. மேலும், உடலில் சேமிக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் (Glycogen) சத்தை நீக்கி, குளுக்கோஸாக மாற்றி உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்க உதவுகின்றன. இதன் மூலம், உடல் சோர்வு மற்றும் மனச் சோர்வு நீங்கி, உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது. இந்தச் சத்துகள், புரோட்டீன் மற்றும் கொழுப்புச் சத்துகளை உறிஞ்சுவதற்கும், ஜீரண மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
சர்க்கரை நோய் இருந்தாலும், ஃபோலிக் அமிலம், ஃபிளவனாய்ட், பினோலிக் அமிலம் போன்ற சத்துகளும், பீட்டா கரோட்டின், க்ளோரோஜெனிக் அமிலம், மாங்கனீசு போன்ற சத்துகளும் உடலில் சர்க்கரையின் அளவை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
சர்க்கரைச் சத்து நிறைந்துள்ள கிழங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஒருசில மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், இதில் உள்ள சத்துக்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. சில சமயங்களில், உணவுமுறையை மாற்றியமைப்பதன் மூலம், சர்க்கரை நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும். உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையே சர்க்கரை நோய் வருவதைத் தடுப்பதற்கும், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
(இயற்கைப் பயணம் நீளும்!)
✅✅கட்டுரையின் முக்கியச் சுருக்கங்கள்:
* சத்துக்கள் மற்றும் நன்மைகள்: சர்க்கரைவள்ளிக் கிழங்கு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது, இதய ஆரோக்கியத்துக்கு நல்லது, மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் A (43%), வைட்டமின் C (35%), பொட்டாசியம் (34%) ஆகியவை அதிகமாக உள்ளன.
* சாகுபடி: இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக விளைகிறது.
* சர்க்கரை நோயாளிகளுக்கு:
* இது சர்க்கரைச் சத்து நிறைந்திருந்தாலும், இதில் உள்ள சத்துக்கள் (ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின், மாங்கனீசு) சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
* இது உடைந்த செல்களைச் சீரமைத்து, சேமிக்கப்பட்ட கிளைக்கோஜனை (Glycogen) சக்தியாக மாற்றுகிறது, இதனால் சோர்வு நீங்குகிறது.
* சர்க்கரை நோயாளிகள் இதனை உண்பதில் ஒருசில மருத்துவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இருப்பினும், சரியான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலமே சர்க்கரை நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கட்டுரை வலியுறுத்துகிறது..
நன்றி -- டாக்டர் சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்..
🌹

27 September, 2025

காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!


காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்துவிடுவாரோ என்று! (சரிதானே நல்லநேரம் சதிஷ்குமார்) ஆனால் அமெரிக்காவிலும்,கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங் என்பது ஒரு பாப்புலர் ஸ்போர்ட். காக்கைகளுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக சுட்டுத் தள்ளுகிறார்கள்.

கோவிட் புகழ் வெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி

வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்  புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்


படுத்ததும் தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது, இது குறித்த ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

மலைப் பாம்பின் இறைச்சி இனிப்பாக இருக்குமாமே?


ஆணைத் தேடிச் செல்லும் பெண் மலைப்பாம்பு 

மூவாயிரத்துக்கும் மேல் உள்ள பாம்பு வகைகளில் மலைப் பாம்புதான் அரதப் பழசுரகம்! 13 கோடியே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது! முதன் முதலில் தோன்றிய மூதாதையர்!!  விஷம் இல்லாத பாம்புகள்!
ஸ்குவாமேட்டா ( Squamata) ஆர்டரைச் சார்ந்த பைத்தோனிடே(Pythonidae) குடும்பத்தை சார்ந்த இந்திய வகை பாம்பு 19 அடி நீளத்துக்கு இருக்குமாம். ஆஸ்திரேலியாவில் 20 அடியும் தென் அமெரிக்காவின் அனகோன்டா 25 அடிக்கும் மிகாமலும் இருக்கின்றன! ஆனால் ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Pythons,) என்னும் மலைப் பாம்புதான் வாழும் பாம்புகளில் பெரியது இது 35 அடி நீளம் கூட ஒய்யாரமாக வளர்ந்துத் தள்ளும்! எடை 350 பவுண்டைத் தாண்டும் வயிற்றுப் பகுதியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மட்டும் 3.5 அடிஇருக்கும்!

பைத்தான் மொலூராஸ் (Python molurus) எனப்படும் நம்ம ரெகுலர் மலைப்பாம்பு வெள்ளையும் மஞ்சளும் கலந்த மண் நிறத்தில் இருக்கும் உடலின் மேற்புறத்தில் சதுரத் திட்டுக்கள் தலை முதல் வால் வரை வரிசையாக அமைந்திருக்கும். இதிலும் இரண்டு பிரிவு. 1. கருப்பு தலை மலை பாம்பு 2.இந்திய பாறை மலைப் பாம்பு





பர்மீஸ் (Burmese Python (Python molurus bivittatus) ) மலை பாம்பு ரகங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறதாம்! அதில் கேரமல்பர்மீஸ் ரகம் பார்க்க கொள்ளை அழகு!
 ‘மோல்டிங்எனப்படும் தோலுரித்தல் ஆண்டுக்கு ஐந்தாறு தடவை நடக்கிறது. உடலைப் போர்த்தியிருக்கும் பாலிதீன் உறை போன்ற தோலை இளம் பெண் தன் டைட்டான ஜீன்ஸ் பேண்ட்யை கழட்டுவது போல இவை கழட்டித் தள்ளுகின்றன. முதலில் மூக்குப் பகுதியில் தோன்றும் உறை நெகிழ்வை ஏதேனுவோரு கல்லிடுக்கில் அல்லது முள்ளில் சிக்க வைத்து பொலபொலவெனத் தோலுரித்து விட்டு நிர்வாணமாய்? ப்யூட்டி பார்லரில் இருந்து மேக்கப் முடித்து வெளியே வரும் பிகர் கணக்காய் வெளிப்படும் அப்புறம் சுமார் இரண்டரை மாதங்களுக்கு இந்தப் பளிச் அலங்காரம்தான்! தோலுரித்த மலைப் பாம்பு தன் மேல்டேட்டூசெய்த டிசைன் ஆக நல்ல வெளிச்சத்தில் பார்த்தால் பல நிறங்களோடு அதன் மேனி 

மலைப்பாம்பின் தோல்! அருகாமையில்!!
 அடர்ந்த காடு பகுதிகளும் ஆற்றோரப் படுகைகளும் இவைகளுக்கு பிடித்தமான வாழும் பகுதி. இவற்றில் காட்டுவாசி மலைப் பாம்புகள் ஜாலியாக மரங்களில் உயரமாக ஏறி கிளையோடு கிளையாக தொங்கி கொண்டே தூங்குவது வாடிக்கை! ஆற்றோரவாசிகள் கரையோரத்தில் மூக்கை மட்டும் வெளியே விட்டு நீருக்குள் அமிழ்ந்து கிடப்பது பழக்கம்.



தேவைப்பட்டால் தண்ணீரில் அட்டகாசமாய் நீச்சலடிக்கும். மேலும் தண்ணீருக்குள் மூச்சைப்பிடித்து அரைமணி நேரம் கூட தம் புடிக்குமாம்!!
மலைப் பாம்புகள் மகா சோம்பேறிகள் ஆபத்து காலத்தில் கூட அப்படியொன்றும் வேகமாகத் தப்பிக்கமுடியாது. இரையை கண்டால் மட்டும் கொஞ்சம் வேகமாக இயக்கம் இருக்கும்

மேக்ஸிமம் அளவிற்கும் விரிக்ககூடிய தன்மையை கொண்ட தாடை எலும்புகள் இணைக்கப்படாத  வாயை பிளந்து கொண்டு தன்னுடைய பிளவு நாக்கின் (Vomeronasal organ) உணர் சக்தி, மற்றும் மோப்ப சக்தி மூலம் இரையை நோக்கி வேகமாக முன்னேறும் போது விலா எலும்புகளின் அலைஅலையான 
இயக்கத்தை பயன்படுத்தி ஒரே நேர்கோட்டில் செல்லும். அப்பொழுது துளி கூட
உடலை நெளிக்காது. இரையை நெருங்கியவுடன் தன் வால் பகுதியை வீசி 
இரையின் உடலை ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். பிடியை மென்மேலும் இறுக்குவதால் இரை சுவாசத்துக்கு ஏங்கி உயரிழக்கும்இறந்த இரையின்  உடல் முழுவதையும் ஒரு முறை நாக்கால் முகர்ந்து பார்த்து விட்டு (ஆம் பாம்புக்கு நாக்குதான் மூக்கு) படிபடிப்படியாக விழுங்கத் தொடங்கும். முன் ஜாக்கிரதையாக தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பின்  அளவற்றுச் சுரக்கும் உமிழிநீரின் உதவியோடு கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோமோஷனில் டைட்டானிக் கப்பல் போல இரை உள்ளே போய்க் கொண்டிருக்கும். உள்ளே விழுங்கப்படும் இரை தப்பி  வெளியே வராமல் இருக்க மலைபாம்பின் பல் அமைப்பு உள்ளே வளைந்து சிறப்பு ஒன்வே லாக்காக இருக்கும். இப்படியொரு  நல்ல விருந்தை முடித்துக் கொண்ட மலைப்பாம்பு இடத்தை விட்டு நகர முடியாமல் அசைவற்றுக்கிடக்கும் வலுக்கட்டாயமாக நகர வைத்தால் விழுங்கிய இரையின் கொம்புகள், நகங்கள், பற்கள் போன்ற கூரிய பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும். அதனால் தான் இரைக்குபின் அசைவற்று படுத்து கிடக்கும். மனிதர்களின் தோள்பட்டை விரிந்துள்ளதால் மலைப்பாம்புக்கு மனிதன் வேண்டாத இரை! இருப்பினும் குழந்தைகள் கிடைத்தால் இரையாக்கிவிடும். ஒரு பெண்ணை மலைபாம்பு தாக்கி விழுங்க முயற்சி செய்துள்ளது. ஏன் விஷம் உள்ள நாகபாம்புடன் கூட மலைபாம்பு மோதியுள்ளது.
மற்ற விலங்குகளை போல மலைப்பாம்புகள் தினசரி சாப்பிட்டு ஏப்பம் விட்டு அதை அன்றே ஜீரணித்து மறுபடியும் விருந்துக்கு தயாராவதில்லை. உட் கொண்ட இரையின் பருமனையும் சீசனையும் பொறுத்தே ஜீரணம் ஆகும். கோடைக்காலத்தில்  எலி, கோழி, வாத்து போன்றவை ஒரு வாரத்திலும், முயல், பெருச்சாளி, முள்ளம்பன்றி போன்றவை இரண்டு வாரத்திலும் ஆடு, மான், நரி போன்றவை மூன்று வாரத்திலும் என ஜீரணமாக மலைபாம்புகள் சார்ட் வைத்துள்ளது. அதுவரை இவைகள்
நான்டயட்என்று அருகில் வரும் இரைகளிடம் கூறிவிடும். இரை எதுவும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் கூட ஒரு மலைப்பாம்பு உயிருடன் இருக்கும்அந்த சமயங்களில் தன்னுடைய வயிறு, இதயம், அகியவற்றின் அளவு  மற்றும் ஜீரண அமிலத்தை சுருக்கி கொள்ளும் சிறப்பு வசதியை கொண்டிருக்கிறது. இரை உள்ளே நுழைந்தவுடன் மேஜிக் போல் எல்லாமே அதிகம் ஆகிவிடும்
ஒரு ஆட்டை முழுமையாக  விழுங்கும் மலைப் பாம்பு


5 முதல் 6 வயது முடிந்து விட்ட மலைப் பாம்புகளில்  இனச்சேர்க்கை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் மட்டுமே. இந்தச் சீசனில் ஈஸ்ட்ரோஜன்ஆதிக்கத்தில் இருக்கும். (இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இனச்சேர்க்கைக்கான முன் ஏற்பாடாக புதரில் அல்லது மரபொந்துகளில் புரூமேஷன் (Brumation ) தயாரிப்பு பணியை செய்யும்.) இந்த தருணத்தில்  பெண் மலைப் பாம்புக்கு துணை தேவைப்படும். இதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஆண் மலைப் பாம்பின் இருப்பிடம் தேடிச் செல்லும் ஆனால் அருகில்  வந்தவுடன் பெண்மைக்கே உரிய இலக்கணத்துடன் மிக அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே சமிக்கை தரும்.. அந்த நேரம் ஆணுக்குத் தோதாக இருந்தால் மட்டுமே  காதல் விளையாட்டு! இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கி நோ சொல்லிவிடும். கனமான இரை வயிற்றுக்குள் இல்லாதவரையில் ஆண் மலைப் பாம்புகள் தன் சோம்பேறித்தனத்தை தூர வைத்துவிட்டு போனால் போகிறது என்பது போல் இணைக்கு இணங்கிவிடும்!

காதல் விளையாட்டின் போது ஒன்றோடொன்று  சுற்றி பின்னிப் பிணைந்து கொள்ளும். உடலை இறுக்கி அந்த இறுக்கத்தையும் ரசித்தபடி உடலின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் ஸ்பரிசிக்கும் வகையில் நீண்ட நேரம் ஆலாபணை நடத்தும். மலைப்பாம்பின் வால் பகுதியில்தான் மேற்படி சமாச்சாரங்கள் உள்ளன. ஆண் மலைபாம்புக்கு வலது புறம் ஒன்று இடது புறம் ஒன்று என இரண்டு ஆண் குறிகள் உள்ளது. (Hemipenes)  சூழ்நிலைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு விஷயத்தை இனவிருத்திக்கு பயன்படுத்தும். அந்த  வால்சண்டையில் வால்கள் சரியாக இணையும் பொழுது வெற்றிகரமான சேர்க்கை நடந்து முடியும்..பிறகு இரண்டும் மங்களம் பாடி இனிதே பிரிந்துவிடும்.

வாலோடு வால்முக்கிய நிகழ்வு


சினைமுட்டைகளை வயிற்றில் உள்ளடக்கிய மலைப் பாம்பு

மூன்று மாதங்களில் பெண் மலைப்பாம்பு 12 முதல் 36 முட்டைகள் இடும். உடலை ஸ்பிரிங் போல் சுற்றி முட்டைகள் 58 நாட்கள் தன்னுடைய உடலில் அதிக அளவில் உஷ்ணத்தை உருவாக்கி  அடை காக்கும்.


பிறக்கும் குஞ்சுகள் 2.5 அடி நீளத்திலிருக்கும். முதல் தோலை உரிக்கும் வரை முட்டைக்குள்ளேயே இருந்துவிட்டுதான் பின் வெளியில் வரும். வெளியே ந்தவுடன்  தன் முதல் வேட்டையை ஆரம்பிக்கும். அத்துடன்  பெண் மலைப்பாம்பின் தாயின் பராமரிப்பும் முடிந்துவிடும்.
பிறந்த குட்டி மலைப்பாம்புகள் காட்டுப் பூனை முதல் நரி வரை பல எதிரிகளிடம் தப்பினால் 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்த  மலைப் பாம்பு ஆகிவிடும். வளர்நத பாம்புகளுக்கும் சிங்கம், புலி, மனிதன் என பல எதிரிகள் இருப்பதால் இதனுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மலைப் பாம்பு தன் எதிரிகளிடமிருந்து தப்பிவிட்டால் தனது ஆயுள் காலம் 20 ஆண்டுகள் வரை வாழ்ந்துவிடும்!
மனிதர்களின் மலைப்பாம்பு பயன்பாடு மலைக்க வைக்கிறது. மலைபாம்பின் இரத்தம் தாய்லாந்தில் மார்க்கட்டில் ஏக கிராக்கி! வீரியத்தை அதிகப்படுத்துகிறதாம்!!
இந்தியாவில் மலைப்பாம்பின் கொழுப்பு முக்கியமாக கேரளா பகுதியில் மருந்து பொருளாக பயன்படுகிறது. எதற்கு என்று சொன்னால் ஆஸ்துமா நோயாளிகள் கேரளா ஆயுர்வேதிக் மருந்துகளை சாப்பிட தயங்குவார்கள்.
மேலை நாடுகளில் மலைப்பாம்பின் தோலில் செய்த அலங்கார  பொருள்கள், பர்ஸ், கை பை விற்பனை சக்கைப்போடுபோடுகிறது.
சீனாவின் சிலப் பகுதிகளில்  மலைபாம்பின் இறைச்சி உணவாகிறது! அவர்களின் கூற்றுப்படி மலைப் பாம்பின் இறைச்சி சர்க்கரை போல் இனிக்கிறதாம்! யாரேனும் முயற்சித்து உண்மையா என  கூறுங்களேன்!!



21 March, 2017

மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உண்டாகிறது. இதனால் வருடத்திற்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். இத்தகைய கொடிய வியாதிக்கு காரணமான கொசு உற்பத்தியை ஒழிக்க லண்டன் நகரில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக இனப்பெருக்க வளமற்ற 100 ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் அவை பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், பெண் கொசுக்கள் வழக்கம் போல் ஆண் கொசுக்களுடன் ஒன்று கூடின. இந்த சோதனையில், பெண் கொசுக்கள் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற சூழ்நிலையில் இது பற்றி எந்த உணர்வும் பெண் கொசுக்களிடம் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, இதனடிப்படையில் கொசுக்களின் இனவிருத்தியை குறைத்து மலேரியா வியாதியை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்த ஆய்வு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 September, 2016

தேன் கொடுத்தால் குழந்தைகள் நன்றாக பேசுமா?

பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?

          தேன் என்றாலே  உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து  என்ற கருத்து பரவலாக  உள்ளது . மேலும் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக பேசும் திறன் வரும் என்றும் நம்பிக்கை உள்ளது.ஆனால் தேன் மலரில் உள்ளபோது  சுத்தமாகவே உள்ளது பின்பு  தேனீயால் எடுக்கப்பட்டு  தேன்கூட்டில்  சேகரிக்கப்பட்டு அதனை  எடுத்து நாம் உபயோகிக்கும்போது   அதில்  அலர்ஜியை உண்டாக்கும்  மகரந்த  தூள்களும்  , மிக  கடுமையான  பொடுலிசம்(BOTULISM ) என்ற  வியாதியை  உண்டாக்கும்   Clostridium bacteria  இருக்கலாம் .


எனவே குழந்தைகளுக்கு  குறிப்பாக  ஒரு வயதுக்கு  குறைவான  குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .


BOTULISM  வந்தால்  தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
  
உடல் தளர்ச்சி -குழந்தையை  தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது 

பால் குடிக்க  மறுப்பது

சோம்பலாக   அழுவது (WEAK  CRY )

மலச்சிக்கல்


எனவே தேனை  நேரடியாகவோ  மறைமுகமாகவோ ஒரு வயது  குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க  கூடாது  .

           


அலர்ஜி , ஆஸ்த்மா  உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும்  தேன் தராமல் இருப்பது  நல்லது -நன்றி டாக்டர்.ராஜ்மோகன்

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...