மலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உண்டாகிறது. இதனால் வருடத்திற்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். இத்தகைய கொடிய வியாதிக்கு காரணமான கொசு உற்பத்தியை ஒழிக்க லண்டன் நகரில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக இனப்பெருக்க வளமற்ற 100 ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் அவை பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், பெண் கொசுக்கள் வழக்கம் போல் ஆண் கொசுக்களுடன் ஒன்று கூடின. இந்த சோதனையில், பெண் கொசுக்கள் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற சூழ்நிலையில் இது பற்றி எந்த உணர்வும் பெண் கொசுக்களிடம் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, இதனடிப்படையில் கொசுக்களின் இனவிருத்தியை குறைத்து மலேரியா வியாதியை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்த ஆய்வு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?