19 February, 2012

இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.

மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.


10 February, 2012

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?

ஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது  இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.
 

நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.


08 February, 2012

உங்கள் குழந்தை கோபத்தில் தலையில் அடித்துக் கொள்கிறதா?ஏன்?

சில குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக வளர்கின்றனர். ஆக்ரோஷமாக வளரும் இக்குழந்தைகள் ஏதேனும் பிரச்சனை வரும் போது தலையை சுவரில் மோதிக் கொள்வதும் கைகளால் தன் முகத்தில் தானே அறைந்து கொள்வதும் சாதாரணமான நடத்தையாகும். குழந்தைகளின் இக் கோப நடத்தையை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் பெற்றோர் மனக்கலக்கம் அடைந்து இருப்பர்.

தலையில் அடித்துக் கொள்ளும், தலையை சுவரில் மோதிக் கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்களில் தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் மிகுந்த கோபம் கொண்டவர்களாக இருப்பர். பெற்றோர்களின் இக்கோபத்தை பார்த்தே குழந்தை ஆக்ரோஷமாக நடந்துகொள்ள பழகிக்கொள்கிறது. மேலும் குடும்பத்தின் ஒற்றைக் குழந்தைகளே இது போன்ற நடத்தைகளில் ஈடுபடுகின்றன. ஒரு குழந்தை என்பதால் அதிகமான செல்லம் கொடுக்கும் பெற்றோர் குழந்தை எதைச் செய்தாலும் அவர்களிடம் எதிர்மறையாக நடந்து கொள்வதில்லை. அதன் காரணமாக குழந்தைகளின் கோப நடத்தை அதிகமாகிக் கொண்டே செல்லும்.

01 February, 2012

சில ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?


ஆண்களுக்கு மார்பகம் வளர்வதை மருத்துவ ரீதியாக
Gynecomastia என்று சொல்வார்கள். அதாவது மார்பகச் சுரப்பிகளும், கொழுப்பு தசைகளும் வளர்ந்து பெண்களுக்கு உள்ள மார்பகம் போலவே காட்சியளிக்கத் தோன்றும்.
ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?

ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேச்டோஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டேச்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும்.
டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும் இயல்பான விசயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே பெரிதாகும், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும்.அதனால் டீன் ஏஜ் பருவத்தில் உங்கள் மார்பகம் பெரிதானால் கவலைப்பட ஒன்றுமில்லை.


உங்களுக்கு மார்பகம் பெரிதாகவே இருந்தாலோ, அல்லது இருபது வடக்கு மேல் மார்பகம் பெரிதானாலோ, இதற்கு வேறு காரணங்கள் உண்டு. அவை:

1. டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நிரந்தரமாகி விடுவது.

2. உடல் பருமன். நீங்கள் குண்டாக இருந்தால், கொழுப்பு சத்து மார்புக்கு அருகே தங்கி விடுகிறது. உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இல்லா விட்டாலும், கொழுப்பு மட்டுமே சேர்ந்து மார்பகம் போல காட்சியளிக்கும்.

3. குடிப்பழக்கம்.

4. போதை மருந்து-கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை உட்கொள்வது.

5. வேறு நோய்களுக்காக டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகள்.
– ரத்தக் கொதிப்பு, மன நோய், அஜீரணம் போன்றவைக்காக கொடுக்கப்படும் மருந்துகள்.
– தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள்.
– மூலிகை மருந்துகள் பலவற்றில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மறைந்துள்ளது.
– உடல் தசை வளர்வதற்காக (பாடி பில்டிங்) நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், அல்லது ஊசிகள்.

6. ஈரல் நோய் (Cirrhosis)

7. சிறுநீரகக் கோளாறு.

8. தைராய்ட் சுரப்பிக் கோளாறு (இது தொண்டைக்கு முன்னால் இருக்கும் சுரப்பி)

9. விறைப்பை அல்லது பிராஸ்டேட் (Prostate) புற்று நோய்.

10. வயதாவதால் ஆண்மைச் சுரப்பி குறைந்து போதல்.

ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. அதுவும் மார்பக வளர்ச்சி போலவே இருக்கும்.

ஆண்கள் மாற்பகத்தால் வரும் பிரச்சனைகள்:

1. முலையில் வலி, அல்லது திரவம் வெளியாதல்.

2. மற்றவர்கள் செய்யும் கிண்டல், கேலி போன்றவற்றால் மன உளைச்சல்.

3. இந்தப் பிரச்சனையினால், பெண்களை அணுகுவதில் பயம் ஏற்படுதல்.

மருத்துவரை அணுகுங்கள்:

* எது, எப்படியாக இருந்தாலும், வெட்கப்படாமல் மருத்துவரிடம் காட்டி செக்கப் செய்து கொள்ளுங்கள்.

* இது டீன் ஏஜ் பருவத்தில் ஏற்பட்டால், மருத்துவர்கள் ஒரு
2-3 வருடங்கள் பொறுத்து, திரும்ப வரச் சொல்வார்கள். இது அதற்கு மேலும் தொடர்ந்து இருந்தாலோ, அல்லது வலி மற்றும் சீழ் வெளியானாலோ உடனே மருத்துவரிடம் திரும்பச் செல்லுங்கள்.

* நீங்கள் சாப்பிடும் மருந்துகளை ஆராய்ந்து பாருங்கள்.

* நீங்கள் நடுத்தர வதில் இருந்தால், உங்களுக்கு வேறு ஏதும் நோய் இருக்கிறதா என்று செக்கப் செய்துகொள்ளுங்கள். மற்ற நோய்களும், உங்கள் மார்பகம் வளரக் காரணமாக இருக்கலாம்.

* குடி, மற்றும் போதைப் பழக்கம் இருந்தால், அவற்றைக் கை விடவும்.

சிகிச்சை முறைகள்:

1. டீன் ஏஜ் பருவத்தில் நடந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மன ரீதியாக ஆறுதல் கூறினாலே போதுமானது.

2. ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை தடுக்க நிறைய மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக Tamoxifen, Raloxifen போன்றவை.

3. அறுவை சிகிச்சை மூலம், மார்பகத்தை அகற்றுவது.

4. மன ரீதியான ஆறுதலையும், அரவணைப்பையும் குடும்பத்தினரும், நண்பர்களும் கொடுக்க வேண்டும். இது குறித்து, மேலும் கேள்விகளோ, அல்லது அல்லது தகவலோ தேவைப்பட்டால் askthisdoctor.com தளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

08 January, 2012

கொசு, கொசு, கொசு,






காட்டை மனிதன் அழித்தான். தங்களது இருப்பிடத்தை ஆக்கிரமித்த மனிதனை பழிவாங்க யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும் தமிழ்நாட்டின் வனங்களை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் நுழைந்து துவம்சம் செய்ய தொடங்கி விட்டன.
குளு குளு கொடைக்கானலில் காட்டெருமைகளை காட்டுக்குள் தான் காணமுடியும். இப்போது அவைகள் நடுரோட்டில் வலம் வருகின்றன. மனிதர்கள் மிரண்டு போய் நிற்க வேண்டியுள்ளது. வனத்தை அழிக்கும் போது அவை இரை தேடி நடு ரோட்டுக்கு வருவது இயற்கை தான். இந்த விலங்குகளுடன் சேர்ந்து மனிதனை மிரட்ட வந்த ஒரு ----ப்பூ......உயிரினத்தை மனிதர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது தான் துரதிர்ஷ்டம். அது தான் கொசு. நாம் கேட்கிறோமா இல்லையா என்பது பற்றியெல்லாம் இந்த கொசுவுக்கு கவலை இல்லை. காதுக்கருகில் வந்து நாரசாரமாக ங்கொய்................என்று பாட்டு பாடுவது, பாடி விட்டு ரத்த தாகம் எடுக்கும் போது கடிப்பது என்று மனிதனை பாடாய் படுத்துகின்றன.

25 December, 2011

தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு

தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
        தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். 

16 December, 2011

நன்றிகள் பலமுறை சொல்லி - 3ம் பாகம்......................தொடர்கின்றது.

எதிர்பாரா விதமாகவும் தொடராகவும் அமைந்து விட்ட என் தொழில் சார்ந்த ஐரோப்பிய நாட்டு பயணங்களால் தடையாகி போன என் தொடர் நிமித்தம் மன்னிப்பு கேட்டவனாக  இதனை தொடர்கின்றேன்.....
1986-ம் ஆண்டு ஆங்கில தினசரியில் வந்த அந்த விளம்பரம் :  "கால் நடை மருந்துகள் விற்பனை செய்யும் அனுபவமுள்ள ஒரு கால் நடை மருத்துவர் மஸ்கட்டிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை" - படித்தததும் நான் தேட ஆரம்பித்ததது வீட்டிலுள்ள உலக வரைப்பட புத்தகத்தைதான்....! 'மஸ்கட்' என்பதை ஒரு இனிப்பாக மட்டுமே சாப்பிட்டு அனுபவப்பட்ட நான் இந்த பெயரில் ஒரு ஊர் இருப்பதையே அப்போதுதான் அறிய ஆரம்பித்தேன். விண்ணப்பித்தேன்.  அகில இந்தியாவிலிருந்தும் ஒரேயொரு நபரையே தேர்வு செய்வதாக அறியப்பட்ட நிலையில்
5 மாதங்கள் உருண்டோடியதில் விண்ணப்பித்ததே மறந்து போயிருந்த ஒரு நாளில், பம்பாயிற்கு நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லிய கடிதம் ஆச்சரியமாக வந்தது. ரயிலில் பம்பாய் போய் நேர்முகத் தேர்வுக்கு போய் அமர்ந்த போதுதான் தெரிய வந்தது...அகில இந்தியாவிலிருந்தும் மொத்தம் 1400 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்ததில், 300 பேர் அழைக்கப்பட்டிருந்ததில் நானும் ஒருவன் என்பது....! இந்த ஒரே காரணத்திற்காகவே எனக்கு அந்த வேலை கிடைக்காதென்றே ஒரு முடிவு தெரிந்த ஒரு முடிவுக்கு வந்தவனாக நடுக்கமும் பதட்டமும் முற்றிலும் இல்லாதவனாக அறைக்குள் நுழைந்தேன். வழக்கமான கேள்விகளெல்லாம் முடிந்து சம்பிரதாயமான கை குலுக்கள் முடிந்து தேர்வு முடியும் நேரம் நான் அங்கிருந்த 5 நபர்களிடம் ஒரு 2 நிமிடம் எனக்காக ஒதுக்க முடியுமா எனக் கேட்டேன். காரணம்... வளைகுடா நாடுகளில் வெறும் ஒட்டகம் மட்டுமே இருப்பதாக எண்ணியிருந்த எனக்கு அங்கு ஒரு விற்பனைக்காக கால்நடை மருத்துவரை தேர்வு செய்ய ஒரு நிறுவனம் இந்தியா வந்திருந்தது (1986ம் ஆண்டு காலக் கட்டத்தில்) மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் கேள்விகளை ஆரம்பித்தேன்...ஒட்டகம் தவிர என்னென்ன கால்நடைகள், அவைகளின் நோய்கள், மருத்துவ வசதிகள், வாய்ப்புகள், மருத்துவர்கள், மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள்...என என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்ன நபர்களிடம் விடை பெற்று, ரயிலேறி சென்னை வந்து இறங்கினேன். ஒரு பதட்டமுமில்லாதவனாக 'சும்மா' பம்பாய் போய் வந்த அனுபவமாகவே எடுத்துக் கொண்ட எனக்கு ஒரு 10 நாட்கள் கழிந்து  நான் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதாக தந்தி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை..எல்லா ஏற்பாடுகளும் முடிந்து நான் Air India மூலம் மஸ்கட் விமான நிலையத்தில் கால் பதித்த அந்த தினம் 1987 மார்ச் 8ம் நாள். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான Pfizer, Cooper, Beecham, Hoechst, Intervet, Rhone Meriux, SKF தயாரிப்புகளை ஒமான் நாட்டின் கால்நடை (பசு, கோழி, ஆடு, ஒட்டகம்) பண்ணைகளில் விற்பனை செய்யும் பணி. புதிய சூழ்நிலைகள் ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மேற்படி நிறுவனங்கள் விற்பனை பயிற்சிகளுக்காக அழைத்ததால் என்னை France, Cyprus, Germany, UK என பயணிக்க வைத்தது. என் குடும்பமும் என்னை வந்தடைய, மஸ்கட்டில் என் வாழ்க்கை ஒரு சீரான, தொடராக 4 ஆண்டுகளை பின் தள்ளி 1991ம் ஆண்டினுள் அடியெடுத்த வைத்த ஒரு நா ளில், நான் என் நிறுவன மேலாலரிடன் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன்........................

தொடரும்.....      இதற்கு முந்தைய பகுதியை படிக்க...

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...