27 October, 2011

நன்றிகள் பலமுறை சொல்லி......................

Ajmal | 7:16 PM | | Best Blogger Tips
ஒரு கால்நடை மருத்துவர் 'அசை' போடுகிறார்!-1
நம் (சென்னை கால்நடை மருத்துவ ) கல்லூரியிலிருந்து ஒரு இள நிலை பட்டம் பெற்றவனாக 1981-ல் வெளிவந்த நான், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மாணவனாக, இளைமையை மீள பெற்று ,  அனுபவத்தை பாட புத்தகங்களாக சுமந்து நம் கல்லூரிக்குள்  நுழைவது மாதிரியான ஒரு மன நிலையுடன் உங்களையெல்லாம் இந்தப்பக்கம் மூலம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த டாக்டர் ராஜேந்திரனுக்கு எனது நன்றிகள் பலமுறை சொல்லி, தொடர்கின்றேன்..........

என்னைப் பற்றி சொல்லிக் கொள்வதற்காக இப்பக்கத்தை எடுத்துக் கொள்வதை விட( எனக்கு தற்பெருமை என்பது துளிக்கூட கிடையாது , பிளீஸ் நம்புங்கள்! ) என் வித்தியாசமான தொழில் அனுபவங்களை  இன்றைய இளம் கால் நடை மாணவர்கள், மற்றும்  மருத்துவர்களுக்கிடையே  பகிர்ந்து கொள்வதன் மூலமாக நமது கால்நடை மருத்துவத் துறையின் இன்னொரு பரிமாணத்தையும், ஒரு பயன் பாட்டையும் இப்பக்கம் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எனது அனுபவங்கள்  மற்றவர்களுக்கும் பயன்படலாம் என நம்பி பகிர்ந்துகொள்ள வரிந்துகட்டி கிளம்பிவிட்டேன்.

 1975 -ம் ஆண்டு அந்த முதல் நாள் , எங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது எல்லோரையும் போல், கால் நடைகளின் நலம் காக்கும் ஒரு உன்னதமான  கால் நடை மருத்துவராக பணி புரியும் ஒரு கனவோடுதான் நானும் இருந்தேன்.......இருந்தேன்.....1980-ம் ஆண்டில் (ஐந்தாம் ஆண்டின் இறுதிப் பகுதியில் படித்துக் கொண்டிருந்தபோது) ஒரு மாலைப் பொழுதின் வரை.....! என் மனதில் மாற்றங்களை கொண்டு வந்த அந்த சம்பவம் எங்கள் கல்லூரி யின் ஒரு வகுப்பறையில்தான் நடந்தது. அது....

தொடரும்...........................................................................

5 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! தொடரும் என்று போட்டு விட்டீர்கள்.எனது கருத்தும் தொடரும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல ஆரம்பம் சார், தொடருங்கள்......!

ராஜா MVS said...

நல்ல முயற்சி... நண்பரே...

தொடர வாழ்த்துகள்....

Ajmal said...

என் தொடர் ஆரம்பித்து 3 தினத்திலேயே 3 அன்பர்களின் பின்னூட்டம் வந்துள்ளது என் ஊக்கத்தை அதிகப் படுத்தியுள்ளது...நன்றிகள் பலமுறை தொடர்கின்றது............

Dr.Dolittle said...

sir நான் இப்ப தான் B.V.Sc முடித்தேன் , கடைசி நாள் ரொம்ப வலி மிகுந்தது சார் , ( இப்ப i.v.r.i ல pg பண்றேன் ) ,உங்க பதிவு என்னோட நினைவுகள கிளறி விடுத்தது சார் (சார் இப்ப காலேஜ் பக்கம் போனேன் , juniors அந்திமழை வர்றது இல்லன்னு ரொம்ப feel பண்ணாங்க , என்னை எழுத ஊக்குவித்ததே அந்திமழை தான் சார் )

Post a Comment

வந்தது வந்துவிட்டீர்கள்,என்ன அவசரம்! கருத்தை பகிர்ந்து செல்லுங்கள்!! எங்கள் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கும்.